Monday, December 27, 2010

மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான 6ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள்

மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான 6ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள்

உலகளவில் சுனாமிப் பேரலை அனர்த்தில் கடந்த 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது. இவ் அனர்த்தத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேரை காவுகொடுத்த பிரதேசமான நாவலடியில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்தது. இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல்

Friday, December 24, 2010

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் கைது

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் மட்டக்களப்பு இலங்கை மின்சார சபை காரியாலய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாரும் , மின்சார சபையினரும் ஒன்றிணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சட்டவிரோத மின்பாவனையாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர், வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய
அம்பாறையின் கரையோரப் பகுதிகளில் கடற்கோள் அனர்த்த நினைவுகூரல் நிகழ்வுகள்

அம்பாறையின் கரையோரப் பகுதிகளில் கடற்கோள் அனர்த்த நினைவுகூரல் நிகழ்வுகள்

அம்பாறை மாவட்ட நிருபர் : கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்ட ஆறாம்வருட நினைவு தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இடம்பெறவுள்ளன.எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன், அன்றைய தினத்தை கடற்கோளால் மரணித்தவர்களுக்கான ஞாபகார்த்தத் தினமாகவும் பிரடகனப்படுத்தி அவர்களுக்காகப் பிரார்த்தனை

Sunday, December 19, 2010

பெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா திருவுருவப்படம்

பெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா திருவுருவப்படம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய கல்லாறு இரண்டாம் குறிச்சியிலுள்ள புஸ்பகுமார் என்பவரின்;; இல்லத்திலுள்ள பூஜை அறையில் காணப்படும் சாயி பாபா மற்றும் விநாயகர் திருவுருவப்படங்களிலிருந்து கடந்த சில தினங்களாக விப10தி சொரிந்த வண்ணம் உள்ளது.மேற்படி பக்தர் அண்மையிலேயே இந்தியாவிலுள்ள புட்டபத்திக்கு சென்று சாய்பாபாவின் நேரடித்தரிசனம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கோமாரி பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் இன்று காலை கைது

கோமாரி பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் இன்று காலை கைது

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கோமாரி காட்டு பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.விசேட அதிரடிப்படையினர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து இவர்களை கைது செய்தனர்.இவர்களின் உடைமையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

Sunday, October 31, 2010

மட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்

மட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் அபிவிருத்தி வலயமைப்பு ஏற்பாடு செய்திருந்தது... கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு கல்முனை திரு இருதய ஆண்டவர் மண்டபத்தில் மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி
எடை குறைந்த பாண் விற்பனை : மட்டக்களப்பில் ஐவருக்கு அபராதம் விதிப்பு

எடை குறைந்த பாண் விற்பனை : மட்டக்களப்பில் ஐவருக்கு அபராதம் விதிப்பு

எடை குறைந்த பாண் விற்பனை செய்த ஐவர் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்குத் தலா 7,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த முத்திரை பதியாதோர் மற்றும் எடை குறைந்த பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபர்

Saturday, October 16, 2010

தம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு

தம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு

திருக்கோவில், தம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில அம்பாறை விசேட காவல்துறை நடவடிக்கை பிரிவினர் மீட்டுள்ளனர். இதன்போது, ரி 56 ரக துப்பாக்கியொன்று, அதற்கான ரவைகள் 54 என்பவற்றை மீட்டு திருக்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Friday, October 15, 2010

சேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

சேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் கிட்டங்கி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று வியாழக்கிழமை காலை துறைநீலாவணையை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் (50 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு மூன்று பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு மூன்று பேர் பலி

கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த இடப்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் 72 மணி நேரங்களில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு விவசாயிகள் உட்பட மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் ஒருவர் என யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இவர்கள் பலியாகியுள்ளனர்.இம்மாவட்டத்தில் புது மண்டபத்தடி மற்றும்,

Tuesday, October 12, 2010

Report Your News -செய்தி அனுப்ப

Report Your News -செய்தி அனுப்ப


உங்களது செய்திகளும் இங்கே இடம்பெற விரும்பினால் செய்திகளை எமக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள் .


எமது ஊர் செய்திகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் எமது ஊர் மக்களின் நிகழ்வுகளையும் எமக்கு அனுப்பலாம் .



எம்மை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி - info@battinews.com

Friday, October 8, 2010

Grade V Scholarship 2010 Examination Result

Grade V Scholarship 2010 Examination Result

Malavan Supatha of Kalai Makal Vidyalayam, Thambiluvil obtained the first place (Tamil medium) obtaining 193 marks. Three students have obtained the second place with 194 marks, Examinations Commissioner General Anura Edirisinghe said.They are Naween Yasanka Premaratne of Minuwangoda Horagasmulla Primary College, Jayathungagamage Kanani Pabasara of Kalutara Meegahathanna Primary School and R.L.

Thursday, August 12, 2010

மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மாணவர் சங்கம் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மாணவர் சங்கம் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை காலை வேலை வாய்ப்பினை வழங்கக்கோரி கவன ஈர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்ட பேரணியினை நடத்தினர்.இன்று காலை 7.30மணியளவில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாக ஒன்று கூடி அங்கிருந்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியுடாக மட்டக்களப்பு நகரை நோக்கி மத்திய அரசே!இமாகாண அரசே! வேலையற்ற பட்டதாரிகளாகிய எமக்கு வேலைவழங்கு! எனக்கோஷமிட்டவாறு பதாகைகளை

Thursday, July 1, 2010

மட்டு.விவேகானந்தாவில் விளையாட்டுப் போட்டி!

மட்டு.விவேகானந்தாவில் விளையாட்டுப் போட்டி!

jQuery(document).ready(function() { jQuery("a#single_image7830").fancybox(); }); மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பகுதியில் அமைந்திருக்கும் மட்டு.விவேகானந்தா பெண்கள் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுமாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் இந்திராணி புஸ்பராசாவின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வுக்கு மீள்

Sunday, June 20, 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே முறுகல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே முறுகல்

மட்டக்களப்பு ,வந்தாறுமூலையில் அமைந்திருக்கும் கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து பயிலும் சிங்கள-தமிழ் மாணவர்களிடையே வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டு பல மணி நேரங்களாக நீடித்து இருக்கின்றது. அரசு இன்று யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது.இந்நிலையில் யுத்த வெற்றிக் களிப்பின் ஒரு அம்சமாக சிங்கள மாணவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள்.பின் நள்ளிரவு நேரம் தமிழ் மாணவர்களின்
மட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை

மட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை

மட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நேற்று முன்தினம் தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் என்ற தலைப்பில் தமிழிலும் சிங்களத்திலும் துண்டுப்பிரசுரம்

Sunday, June 13, 2010

மட்டக்களப்பில் போக்குவரத்து (TRAFFIC) பொலிஸாரின் அட்டகாசங்கள்

மட்டக்களப்பில் போக்குவரத்து (TRAFFIC) பொலிஸாரின் அட்டகாசங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பாகங்களிலும் போக்குவரத்து பொலிஸார் நிரம்பி வழிகின்றனர். குறிப்பாக நகரப் புறங்களில் ஒவ்வொரு வீதியிலும் ஒழுங்கைகளிலும் நின்றுகொண்டு வீதியால் செல்கின்ற வாகனங்களை நிறுத்தி ஏதோ ஒரு வகையில் குற்றவாளியாக்கி தண்டப்பணம் அறவிடுகின்றமை அதிகரித்துள்ளது.குறிப்பாக உந்துருளிகளை நிறுத்தி சாரதி அனுமதிப்பத்திரம் வாகன அனுமதிப்பத்திரம் காப்புறுதி சான்றிதழ்களை பரிசோதனை செய்கின்றனர்.

Thursday, June 10, 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே முறுகல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே முறுகல்

மட்டக்களப்பு ,வந்தாறுமூலையில் அமைந்திருக்கும் கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து பயிலும் சிங்கள-தமிழ் மாணவர்களிடையே வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டு பல மணி நேரங்களாக நீடித்து இருக்கின்றது. அரசு இன்று யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது.
இந்நிலையில்
யுத்த வெற்றிக் களிப்பின் ஒரு அம்சமாக சிங்கள மாணவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள்.பின் நள்ளிரவு நேரம் தமிழ்
மட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை

மட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை

மட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நேற்று முன்தினம் தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் என்ற தலைப்பில் தமிழிலும் சிங்களத்திலும் துண்டுப்பிரசுரம்

Saturday, May 29, 2010

எதிர்கால G.C.E O/L பெறுபேறுகளில் புதுவித சித்திகள் : அமைச்சர் திட்டம் _

எதிர்கால G.C.E O/L பெறுபேறுகளில் புதுவித சித்திகள் : அமைச்சர் திட்டம் _

இனிவரும் காலங்களில் க.பொ.த.(சா.த)பரீட்சை பெறுபேறுகளில் புதுவித சித்திகளை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர்நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது நடைமுறையில் அதிவிஷேட(ஏ), விஷேட (பி), திறமை(சி). சாதாரணம்(எஸ்), சித்தி இன்மை(டபிள்யூ) எனப் பாகுபடுத்தப்படுகிறது.இதில் உள்ள இருவகை குறைபாடுகளை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.75 இருந்து 100 வரை
ஆபாச இணையத்தளங்கள் செல்போனில் தடை

ஆபாச இணையத்தளங்கள் செல்போனில் தடை

கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர் இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு

Monday, May 17, 2010

Cheap Call to srilanka -இலங்கைக்கு மிக குறைந்த செலவில் Call எடுக்க

Cheap Call to srilanka -இலங்கைக்கு மிக குறைந்த செலவில் Call எடுக்க

நீங்கள் இலங்கையில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த செலவில் உங்களது கணனியிலிருந்து அழைப்பை எடுக்க ஒரு இலகுவான வழி ...
ஒரு நிமிடத்திற்கு 7.ரூபா 50 சதம் மட்டுமே

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் 38 நாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்த முடியும்
மேலதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ....sale@battinews.com
அல்லது Dialog Sim user call us - *#54782
Packages - From 2000 ரூபா



+ 38

Monday, May 10, 2010

மட்டக்களப்பு கல்லடியில் வயோதிபர் வாவியில் குதித்து தற்கொலை

மட்டக்களப்பு கல்லடியில் வயோதிபர் வாவியில் குதித்து தற்கொலை

மட்டக்களப்பு கல்லடியில் செல்லத்துரை என்ற பெயருடைய 70 வயதான வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.குறித்த அந்த வயோதிபருக்கு பிள்ளைகள் இருந்தபோதும் தன்னை ஒழுங்காக கவனிக்காத காரணத்தினாலேயேதான் தற்கொலை செய்துகொண்டதாக பக்கத்திலுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Thursday, May 6, 2010

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவான விசாரணை

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவான விசாரணை

மட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களால் மக்கள் இன்னமும் பயத்தில் இருப்பதாக தெரிவிக்கும் எமது செய்தியாளர், மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலும் சாதாரண தரம் கற்கும் மாணவர்
Donation

Donation


எமது இணையதளம் மூலம் கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகளை உலகெங்கும் வாழும் எமது மக்களுக்கு அறியத்தருகிறோம் . உங்களால் இயன்ற பங்களிப்பினை இங்கே வழங்குங்கள்.


பக்கசார்ப்பில்லாமல் செய்திகளை வழங்கி வருகிறோம் . எமது இணையதளத்திற்கு சில சாதனங்கள் தேவைபடுகின்றன உதவ விரும்புபவர்கள் உதவலாம் .







Saturday, May 1, 2010

advertisement  எம்முடன் விளம்பரம் செய்ய

advertisement எம்முடன் விளம்பரம் செய்ய



எமது இணையதளத்தில் உங்களது விளம்பரங்களை குறைந்த கட்டணத்தில் விளம்பரபடுத்துங்கள் .
மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்



Phone : 0771660248 , 065 - 2223738
Office : 38, Station Road, Batticaloa
Email : info@battinews.com









G.C.E (O/L) பரீட்சையில் தேசிய மட்டத்தில் 4ம் இடத்தை பெற்ற மாணவன் கௌரவிப்பு

G.C.E (O/L) பரீட்சையில் தேசிய மட்டத்தில் 4ம் இடத்தை பெற்ற மாணவன் கௌரவிப்பு

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியைச் சேர்ந்த வரதராஜன் ரிகேஸ் எனும் மாணவன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனின் பழைய மாணவனானஇவரின் திறமையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள் வீசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து அவருக்கு பரிசில் பொருட்களையும் வழங்கினார். சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவருக்கு
அம்பாறையில் ஆளும் கட்சிக்கு அதிக ஆசனங்கள்

அம்பாறையில் ஆளும் கட்சிக்கு அதிக ஆசனங்கள்

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களாக நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரு ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.ஐ.ம.சு.மு.வில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மூவரும் முஸ்லிம் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் கல்முனை மேயர் ஹரீஸூம், பைசல் காசிமும் வெற்றி பெற்றுள்ளனர்.

Thursday, April 22, 2010

ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதிகளை அனுப்ப வேண்டாம் : தபால் மா அதிபர் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதிகளை அனுப்ப வேண்டாம் : தபால் மா அதிபர் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தபால் மற்றும் பொதிகளை அனுப்ப வேண்டாம் என தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.ஐஸ்லாந்தில் எரிமலைக் குமுறல் தொடர்கின்ற நிலையில், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கான இருவழி விமானசேவைகள் காலவரையறையின்றி ரத்துச்செய்யப்பட்டுள்ளதுடன், சில விமான நிலையங்களும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.இந்நிலையில், குறித்த நாடுகளில் உள்ள தமது உறவினர்கள்,
கலைமாணி பட்டதாரியான விழிப்புலனற்ற மாணவிக்கு மட்டக்களப்பில் பாராட்டு..!

கலைமாணி பட்டதாரியான விழிப்புலனற்ற மாணவிக்கு மட்டக்களப்பில் பாராட்டு..!

விழியிருந்தும் பாடசாலைகளுக்கு செல்ல மறுக்கும் நம்மவர் மத்தியில், பிறப்பிலேயே பார்வையிழந்த மாணவி ஒருவர், பல்கலைக்கழகம் சென்று, சிறப்புப் பட்டம் பெற்று வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி பயின்ற புஷ்பலோஜினி என்ற மாணவி கிழக்குப் பழ்கலைக்கழகத்தில் அரசியல்-விஞ்ஞான துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று கலைமாணி பட்டதாரியாக

Friday, April 16, 2010

பிரேஸிலில் ஏற்பட்ட மண்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 246-ஆக அதிகரிப்பு

பிரேஸிலில் ஏற்பட்ட மண்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 246-ஆக அதிகரிப்பு

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் கடந்த வாரம் பயங்கர மண்சரிவூ ஏற்பட்டது. மலையடிவாரத்தில் இருந்த வீடுகளை மண்மூடியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வந்தன. செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடந்தபோது அங்கு மேலும் சிலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 246-ஆக உயர்ந்தது.மேலும் நிடோரய் பகுதியில் காணாமல் போன 200 பேரின் உடல்களைத்
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் : ஹிலாரி கிளின்டன்

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் : ஹிலாரி கிளின்டன்

இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அமெரிக்கவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் நேற்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல தசாப்தங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காப்பதில் அரசாங்கம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அனைத்து மக்களும் ஒன்றிணைந்த

Wednesday, April 7, 2010

காவல்துறையினருக்கு எதிராக பௌத்த பிக்குகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

காவல்துறையினருக்கு எதிராக பௌத்த பிக்குகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

காவல்துறையினருக்கு எதிராக பௌத்த பிக்குகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடர்ந்த பௌத்த பிக்குகளை காவல்துறையினர் பலவந்தமாக கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.மனிதாபிமான மற்ற வகையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் தங்களை கைது செய்ததாக பௌத்த பிக்குகள் மனித உரிமைகள் ஆணையகத்தில்
Guestbook -எமது இணையதளம் பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள்

Guestbook -எமது இணையதளம் பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள்



எமது இணையதளத்தை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் .


இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சகல செய்திகளும் , ஆலய , பாடசாலை மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் மற்றும் எமது கிழக்கு மாகாணத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.

இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது

நீங்களும்

Sunday, April 4, 2010

எகோன் தடை, சிரச தாக்குதல் மற்றும் அரசியலில் பௌத்தம் ‐ GTNற்காக சுனந்த தேசப்பிரிய

எகோன் தடை, சிரச தாக்குதல் மற்றும் அரசியலில் பௌத்தம் ‐ GTNற்காக சுனந்த தேசப்பிரிய

எகோன் என்ற செனகல் நாட்டு பாடகர் இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் தடைசெய்தது. உண்மையில் இந்த தடையானது இலங்கையில் ஆட்சி செய்யும் ஜனநாயகமற்ற நிர்வாகத்தினை வெளிகாட்டியுள்ளது இந்த நடவடிக்கை புத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல இது ஒரு அரசியல் நடவடிக்கையாகும். அடிப்படைவாத சக்திகளிடம் அடிப்பணிதலாகும். அடிப்படைவாதம் என்ற பழமைவாத்திற்காக சமயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. அத்துடன்
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் சாகும் வரையில் உண்ணாவிரதம்

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் சாகும் வரையில் உண்ணாவிரதம்

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் சாகும் வரையில் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளனர்.ஜே.வி.பி.கட்சிக்கு ஆதரவான பௌத்த பிக்குகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளின் போது சரத் பொன்சேகா ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில்

Tuesday, March 23, 2010

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பம்  _

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பம் _

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைப்பெற உள்ள பொது தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 31ஆம் திகதிவரை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த தெரிவத்தாட்சி அலுவலர்களினால் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்
கோப்பாய் பிரதேசத்தில் கிரிக்கட் போட்டியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர் ஒருவர் பலி

கோப்பாய் பிரதேசத்தில் கிரிக்கட் போட்டியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர் ஒருவர் பலி

கோப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.மோதலின் போது ஏற்பட்ட காயத்தினால் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 14ம் திகதி இந்த கைகலப்பு சம்பவம் பதிவாகியுள்ளதென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது
சிரச , M.T.V மீது தாக்குதல்

சிரச , M.T.V மீது தாக்குதல்

மகாராஜா தனியார் நிறுவனத்தின் தலைமையகம் இன்று இனம்தெரியாத குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இலங்கையின் சிரச சக்தி அலைவரிசைகளுக்கான எம்.டி.வி மற்றும் எம்.பி.சி ஊடகவலையமைப்புக்களைக் கொண்டுள்ள மகாராஜா நிறுவனம் இன்று மாலை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு 02 இல் உள்ள சிரச மற்றும் சக்தி அலைவரிசையின் தலைமையகத்தின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sunday, March 21, 2010

எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .

எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .

தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் , எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகின்றது .எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .எமது ஆலயத்திற்கு உதவிகள் செய்ய விரும்புவோர் . எமது ஆலயத்தின் நிருவாகத்தை நாடவும் ."என் கடன் பனி செய்து கிடப்பதே" Thanks Photos By - Malarpiriyan

Sunday, March 14, 2010

மட்டக்களப்பு

மட்டக்களப்பு

மட்டக்களப்பு இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப் படுகின்றது. இதன்
அன்பையும்,பண்பையும் வளர்த்து உயிர்களிடத்தில் கருணைக்காட்ட வேண்டும் சிவத்தின் தத்துவம்

அன்பையும்,பண்பையும் வளர்த்து உயிர்களிடத்தில் கருணைக்காட்ட வேண்டும் சிவத்தின் தத்துவம்

சிவனை வழிபட சிவனருள் தான் வேண்டும். மூன்று உலகங்களுக்கும் சிவன் தான் குரு. குருஅருள்தான் திருவருளைக் கூட்டி வைக்கும். குருவை நினைந்து மகிழ்வது, குருவை விழுந்து வணங்குவது, குருவின் கீர்த்திகளைப்பேசி மகிழ்வது, என்னும் இவை குரு அருளைக் கூட்டிவைக்கும்
மார்பக புற்று நோயை கண்டறிய புதிய டி.என்.ஏ., பரிசோதனை: அமெரிக்க மருத்துவர்கள்

மார்பக புற்று நோயை கண்டறிய புதிய டி.என்.ஏ., பரிசோதனை: அமெரிக்க மருத்துவர்கள்

மனித உடலில் தினந்தோறும் செல்கள் அழிவதும் புதிதாக உருவாவதும் இயற்கையான நிகழ்வுகள். அழியும் செல்களோடு டி.என்.ஏ., க்கள் கசிவதும் உண்டு. இவ்வாறு கசிந்து வரும் டி.என்.ஏ.,க்களை ஆய்வு செய்வதன் மூலம் மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள குரோனிக்ஸ் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி நிலையம் நிரூபித்துள்ளது. இந்த பரிசோதனை மூலம் 70

Saturday, March 13, 2010

Wednesday, March 10, 2010

மண்ணால் சிவலிங்கம் அமைத்து இராமன்  வழிபட்ட இடமே மாமாங்கேஸ்வரர் திருத்தலம்

மண்ணால் சிவலிங்கம் அமைத்து இராமன் வழிபட்ட இடமே மாமாங்கேஸ்வரர் திருத்தலம்





“வங்காள விரிகடலின் வலக்கை போல வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் கோயில்” கொண்ட மாமாங்கர பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் அமர்ந்து அருள்பாலிக்கும் அமிர்தகழிப்பதி, மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதாகும்.

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மீன்பாடும் தேன்நாட்டில் ஆலயங்கள் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளையார் முருகன் ஆலயங்களே நிறைந்து காணப்படுகின்றன. கொக்கொட்டிச்சோலை, தான்தோன்aஸ்வரர்
மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது நேற்று சிலர் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இக் குண்டு வீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இது ஒரு தேர்தல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என அறியப்படுகிறது.இதே போன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தக நிலையம்
மட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்தலின் பின்னர் நடைபெற்ற வன்முறைகள்

மட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்தலின் பின்னர் நடைபெற்ற வன்முறைகள்

தேர்தல் முடிவடைந்த பின் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. தமிழர் பிரதேசங்களில் மட்டக்களப்புப் பகுதிகளில் சில அசம்பாவிதங்கள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பகுதிகளில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதோடு வான் வண்டி ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம்

Monday, February 8, 2010

அக்கரைப்பற்றில்  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயம்

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயம்

சாகமம் கோளாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ட்ரக்டர் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இதன்போது முச்சக்கரவண்டியில்
தம்பிலுவில் உருவான வரலாறு...

தம்பிலுவில் உருவான வரலாறு...

மட்டக்கிளப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன் , பத்திரகாளியம்மன் , கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை மட்டக்கிளப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நு¡ற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச் சேர்ந்த

Tuesday, February 2, 2010

Monday, January 18, 2010

தமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் திருக்கோவிலில் துப்பாக்கிச்சூட்டில் காயம்

தமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் திருக்கோவிலில் துப்பாக்கிச்சூட்டில் காயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுபிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலீசார் தெரிவித்துள்ளனர்.திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனஇதன்போது

Saturday, January 16, 2010

திருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி!

திருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி!

வீரகேசரி இணையம் 1/16/2010 4:16:53 PM - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார். பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார்.அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.இதன்போது அமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளீதரன், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Friday, January 1, 2010