Thursday, December 2, 2010

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நீந்துவது பாம்பு அல்ல மீன்களே

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நீந்துவது பாம்பு அல்ல மீன்களே

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பபதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவை பாம்புகள் அல்லவென தற்போது தெரிவிக்கப்படடுள்ளது. இவை ஒருவகை மீனினங்கள் என ம்டடக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பதில் இணைபாளர் அலி மெஹமது மெஹமட் காசீம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இவை அவதானிக்கப்பட்டதாகவும் இன்றைய தினமும் அவை அவதானிக்கப்படுவதாகவும் பொதுமக்கள்

Wednesday, December 1, 2010

தம்பிலுவில் கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு

தம்பிலுவில் கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு

கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்று காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.பதுளையைச் சேர்ந்த வி. செல்வக்குமார் (வயது 21) என்ற இளைஞனின் சடலத்தையே இன்று காலை 9.10 மணியளவில் திருக்கோவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.குளிக்கச்சென்ற இடத்திலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விளைஞனின் சடலம் திருக்கோவில்
திருக்கோவில் கடலில் மூழ்கிய இரு இளைஞர்களை காணவில்லை

திருக்கோவில் கடலில் மூழ்கிய இரு இளைஞர்களை காணவில்லை

கடலில் குளித்த இரு இளைஞர்கள் அலையில் சிக்கி காணாமல் போன சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் கடலில் இடம்பெற்றது.ஏழு இளைஞர்கள் காலை 8 மணிக்கு கடலில் குளித்தனர்.இருவர் சற்றுத்தொலைவில் தனியாக குளித்த போது இச்சம்பவம் இடம்பெற்றது.காணாமல்போன இருவரில் ஒருவர் எதிர்வரும் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.திருக்கோவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் சிவசோதி
மட்டக்களப்பில் நிறநிற பாம்புகள் - மீண்டும் பேரழிவுக்கு அறிகுறியா? - மக்கள் பீதி

மட்டக்களப்பில் நிறநிற பாம்புகள் - மீண்டும் பேரழிவுக்கு அறிகுறியா? - மக்கள் பீதி

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்கமுடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு கல்லடிப்