Friday, March 25, 2011

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டு- ஒருவர் கைது!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டு- ஒருவர் கைது!

மட்டக்களப்பு நகரில் உள்ள மாதாகோயில் அருகாமையில் வைத்து கடந்த 20திகதி மோட்டார்சைக்கிளை கொள்ளையிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் ஏற்கனவே மட்டக்களப்பில் காணாமல் போன பல மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல் வெளியாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவைச் சேர்ந்த டேவிட்

Thursday, March 24, 2011

ஆலய பூசகர் மீது அசிற் வீச்சு எருவில் பகுதியில் ஒருவர் கைது

ஆலய பூசகர் மீது அசிற் வீச்சு எருவில் பகுதியில் ஒருவர் கைது

பட்டிருப்பு நிருபர் : மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் ஆலய பூசகர் மீது அசிற் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18 ஆம் திகதி எருவில் மாரியம்மன் ஆலய பூசகரான சாமித்தம்பி தாமோதரம்பிள்ளை என்பவரை இலக்குவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு தாதியர் கல்லூரி மாணவர்களுக்கு நியமனம் வழங்காமை குறித்து விசனம்

மட்டக்களப்பு தாதியர் கல்லூரி மாணவர்களுக்கு நியமனம் வழங்காமை குறித்து விசனம்

பெரிய நீலாவணை நிருபர் : மட்டக்களப்பு தாதியர் கல்லூரியிலிருந்து கடந்த வருடம் வெளியான 2006 ஆம் கல்வியாண்டின் 2 ஆம் பிரிவு மாணவர்களுக்கு இதுவரை தாதியர் நியமனம் வழங்கப்படவில்லை என குறித்த தாதியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வழமையாக தாதியர்களாக வெளியாகின்றவர்களுக்கு அடுத்த சில வாரங்களுக்குள் தங்களது கல்விக் கல்லூரியின் ஏற்பாட்டில் தற்காலிக நியமனம் ஒன்று வழங்கப்படும்.அவ்வாறு வழங்கப்பட்டு மூன்று அல்லது

Wednesday, March 23, 2011

கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள்

கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள்

நாட்டின் பொருளாதார நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போதே கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

கடும் பொருளாதார கஷ்டங்கள்

Tuesday, March 22, 2011

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதுடன் ஜந்து லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.என்.டி.ஜெயவீர தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வெள்ளவாய தனமல்வில பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட இவ் கஞ்சாவை உள்ளூர்
திருமலையில் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமலையில் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று மதியம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.திருகோணமலை லிங்கநகரில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 பேர் கொண்ட குழுவினரால் மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும்
தொலைக்கல்விச் சான்றிதழ் பயிற்சி மட்டக்களப்பில் சனிக்கிழமை ஆரம்பம்

தொலைக்கல்விச் சான்றிதழ் பயிற்சி மட்டக்களப்பில் சனிக்கிழமை ஆரம்பம்

சம்மாந்துறை நிருபர் : சீ.எச்.ஏ.(இஏஅ) நிறுவனத்தால் நடாத்தப்படவுள்ள, மோதல் நிலைமாற்றம், சமாதானத்தைக்கட்டியெழுப்புதல் தொடர்பான தொலைக்கல்வி சான்றிதழ் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இருநாள் வதிவிட செயலமர்வாக நடைபெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள சுவிஸ்கன் ஹோட்டலில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி
மட். ஓட்டமாவடியில் கிராமசேவகரின் அலுவலகம் தீயிட்டு எரிப்பு

மட். ஓட்டமாவடியில் கிராமசேவகரின் அலுவலகம் தீயிட்டு எரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் கிராமசேவகர் ஒருவரின் அலுவலகம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.இன்று திங்கட்கிழமை 2.00 மணியளவில் ஓட்டமாவடி அல்-அக்ஸா வீதியில் உள்ள ஓட்டமாவடி வடக்கு பிரதேசத்தின் 208 பி பிரிவுக்கான கிராமசேவகரின் அலுவலகமே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்
தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

நாவிதன்வெளி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சிஉறுப்பினரின் வீட்டிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.ஆனந்தனின் வீடே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அமிர்தகளி பிரதேச கதிர்காமர் வீதியிலுள்ள இல்லமே நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மோட்டார்
அம்பாறை குப்பை மயம்- சுகாதார ஊழியர்கள் திண்டாட்டம்!

அம்பாறை குப்பை மயம்- சுகாதார ஊழியர்கள் திண்டாட்டம்!

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது மருதமுனை நிந்தவூர் சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் வீதி ஓரங்களிலும் வடிகால் ஓரங்களிலும் மக்கள் குப்பைகளைக்கொட்டுவதால் அதனை அகற்ற முடியாது சுகாதார ஊழியர்களும் பிரதேசசபை ஊழியர்களும் திண்டாடி வருகின்றனர்.
மருதமுனையிலிருந்து அட்டாளைச்சேனை வரை உள்ள வீதி ஓரம் எங்கும் குப்பை நிறைந்திருப்பதை அவதானிக்க முடிவதாக எமது அம்பாறை செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
உதாரணமாக

Monday, March 21, 2011

ஏறாவூர் ரயில் நிலையத்தை அண்மித்த பிரதேசத்தில் மர்மாமான நீர் ஊற்று

ஏறாவூர் ரயில் நிலையத்தை அண்மித்த பிரதேசத்தில் மர்மாமான நீர் ஊற்று

செங்கலடி நிருபர் ஏறாவூர் ரயில் நிலையத்தை அண்மித்த பிரதேசத்தில் மர்மாமான நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது மக்கள் குடியிருப்புகளில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன்போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் -








பொத்துவில் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

பொத்துவில் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி பிரதேசத்தில் வீடு ஒன்று தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.கோமாரி செல்வபுரத்தில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர் குடும்ப சகிதம் சம்பவ தினம் இரவு உறவினர் வீடு ஒன்றிற்கு சென்று இரவு 9.30மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது.உடனடியாக அயலவர்கள் தீயை
மட்டக்களப்பில் சிறந்த மீள்குடியேற்றமில்லை

மட்டக்களப்பில் சிறந்த மீள்குடியேற்றமில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழலில் 2006ம் ஆண்டுக்கு பின் இடம்பெயர்ந்த கிரான், செங்கலடி பிரதேசங்களைச் சேர்ந்த 90 குடும்பங்களின் 433 பேர் இதுவரை குடியேற்றப்படவில்லை இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இவர்களை விரைவாக குடியேற்ற மீள்குடியேற்ற அமைச்சர், மற்றும் பிரதி அமைச்சரகள் உடன்; நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்தேசயகூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட

Sunday, March 20, 2011

மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிப்பு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிப்பு


மட்டக்களப்புபுகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தவெடிப்பின் ஊடாக நீர் வந்தவண்ணமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நிலத்தடிநீர்மட்டம் அதிகரித்ததாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவநிலையம் தெரிவித்தது.பூரண சந்திரனின்தாக்கத்தினால் நீர்மட்டம் அதிகரித்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையபேச்சாளரொருவர் தெரிவித்தார்.இந்த
மட்டக்களப்பில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மட்டக்களப்பில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று (19.03.2011) 5ம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா களுவாஞ்சிகுடி ராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவை, இலவச வகுப்புகளை நடத்தி வரும் திருவள்ளுவம் கல்வி நிலையம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, அரியநேத்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை வைத்தியசாலை இன்று சகல துறைகளிலும் முன்னேறி வருகிறது

கல்முனை வைத்தியசாலை இன்று சகல துறைகளிலும் முன்னேறி வருகிறது

ஊடகவியலாளர்கள் எப்போதும் நடுநிலையான ஆதார பூர்வமான செய்திகளை வெளியிடவேண்டுமென கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.

ஊடகமும் உளநலமும் எனும் தொனிப்பொருளில் அண்மையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வசந்தம் உள நலப்பிரிவு மண்டபத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு