Thursday, March 31, 2011

கோயிலில் திருமணம் செய்வதே சிறப்பு

கோயிலில் திருமணம் செய்வதே சிறப்புஇன்றும் பலர் கோயில்களில் திருமணங்கள் செய்கிறார்கள். மிகப்பெரிய பணக்காரர்கள் கூட கோயில் திருமணங்கள் செய்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக திருப்பதியில் திருமணங்கள் செய்வது அதிகம். அங்கே மலை மேல் மண்டபங்கள் நிறைய இதற்காகவே இருக்கிறது. திருத்தணியிலும் இதுபோல மண்டபங்கள் இருக்கிறது. கோயில் சார்ந்த மண்டபங்கள். கோயிலிற்கு உள்ளே சாமி முன்னிலையில் கொடி மரத்திற்கு அருகில் தாலியை கட்டிக்கிட்டு, சாமியை தரிசனம் செய்துவிட்டு, பிறகு கோயிலிருற்கு அருகில் இருக்கும் மண்டபங்களில் வரவேற்பெல்லாம் வைத்துக் கொள்வதும் உண்டு. 

ஆலயங்கள் அதற்கென்ற ஆகம விதிப்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சிவன் என்று சொன்னால், அதிகார நந்தி, ஆத்மார்த்த நந்தி என்று நந்தியிலேயே ஐந்து வகைகள் உண்டு. கடைசியாக இருக்கிற நந்தி ரகசிய நந்தி. அதனால்தான் அவருடைய காதில் எல்லோரும் போய் சொல்விட்டு வருவது. ஏனென்றால் அவர் அந்த விஷயங்களை வைத்துக் கொண்டு, நேரம் பார்த்து சிவனிடம் சொல்வார் என்று. 

இந்த மாதிரி பெரிய ஆன்மீக அடிப்படையில் உருவானது. அந்தந்த இடத்தில் அந்தந்த அவதாரங்கள் இருந்தால் அந்த இடத்திற்குப் போய்வரும் போது நமக்கு ஒரு சக்தி கிடைக்கும். ஒரு உணர்வு பிறக்கும். நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் உண்டாகும் என்பது போன்று செய்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆலயங்களில் திருமணங்கள் செய்யும் போது வேறு ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அவைகள் நீங்கும். 

ஆனால் திருமண மண்டபங்களை எடுத்துக் கொண்டால், எல்லா மண்டபங்களும் வாஸ்து பிரகாரம் உருவாக்கப்பட்ட மண்டபங்கள் அல்ல. 

(ஏற்கனவே கூட நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு என்ன இருந்து என்று நமக்குத் தெரியாது என்று.)

ஆமாம், அங்கு ஒரு சிறிய இனம் கூட போராடியிருக்கலாம். 

ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் பற்றி எரிந்ததையெல்லாம் நான் சீரியஸாக எடுத்துப் பார்த்தேன். அதிலெல்லாம் பார்த்தீர்களென்றால் வாஸ்துப்படி எதுவும் கிடையாது. வடக்கு, வடகிழக்கு திசையெல்லாம் ‌திற‌ப்பே இ‌ல்லாம‌ல் மூடியிருந்தது. இதையெல்லாம் விட ஆயிரங்கால் மண்டபமெல்லாம் திறந்தவெளியாகத்தான் இருக்கும். இறைவனுக்கு அருகில் இருக்கும். அப்பொழுது அங்கு ஒருவித உணர்வு பிறக்கும்.

எனவே கோயிலில் திருமணம் செய்வதே சிறப்பு.
எ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌திருமண‌ம்...

எ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌திருமண‌ம்...இந்த யுகம் கலி யுகம்.  முன்பைவிட தற்பொழுது பாலுணர்வு அதிகரித்துள்ளது சிறுவர்களிடம். அதனால்தான் உலக அறிஞர்கள். பாலியல் குறித்த பாடம் கொண்டுவர வேண்டும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 

இதனால்தான், 22 அல்லது 23இல் திருமணம் முடித்தால் நல்லது. ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்கும் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆளுமை இருக்கும். அப்படி பார்க்கும் போது 20 முதல் 24 வயது வரை சுக்ரன் மற்றும் இராகுவினுடைய காம்பினேஷனில் வருகிறது. இது ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இதனால் பாதை மாறும் வாய்ப்பு உள்ளது. 

அதன்பிறகு, குழு மனப்பான்மை, குழுவாகச் சேர்ந்து தாக்குதல், குழுவாகச் சேர்ந்து திட்டமிடுதல், இது நன்மைக்கும் கொண்டு போகும் தீமைக்கும் கொண்டு போகும். அதனால்தான் குறிப்பாக 22, 23இல் மணம் முடித்தால் செம்மையாக இருக்கும். 

ஆண்களுக்கு? 

ஆண்களுக்கு 24, 25, 27 இதில் திருமணம் முடித்தால் நலம். ஏனென்றால் குருவினுடைய ஆதிக்க எண்ணாக வரக்கூடியது எண்ணாக வரக்கூடியது, அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
எதிர்கால கையடக்கத் தொலைபேசிகள்...

எதிர்கால கையடக்கத் தொலைபேசிகள்...

  தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது.

அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தியாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.

கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவரது கற்பனைத் திறனை நீங்களும் தான் பார்த்து மகிழுங்களேன்....!

Sunday, March 27, 2011

என்றும் இளமையாக இருக்க...

என்றும் இளமையாக இருக்க...1. உணவு: உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும்.
நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். வெறும் அரிசி சாதம், சப்பாத்தி போன்றவைகளைச் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள் தான் உடலில் சேர்கிறது. மற்ற விஷயங்கள் சேருவதில்லை.
காய்கறிகளிலும், பழங்களிலும் வயோதிகத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவை நம் உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே போல் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. கொஞ்சமாய்ச் சாப்பிட்டாலே போதும்.
2. உடற்பயிற்சி கட்டாயம்: நம் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று ஆர்வப்படும் அளவுக்கு அதற்காக நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. தினம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் அதை ஏதோ ஒரு பெரிய வேலையாக பலர் கருதுகிறார்கள்.
அவர்கள் உடல் இளமையாக இருக்காது. ஒரு நாளில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரைமணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு மிதமான வியர்வை வரும் வரை பயிற்சிகள் செய்யலாம்.
வீட்டில் இருந்த படியே செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.
3. மனம்: இளமைக்கு அடிப்படையான விஷயம் மனம். அது சந்தோஷமாவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனம் சரியில்லை என்றால் எதைச் செய்தாலும் இளமை வராது. உடலில் ஒரு களைப்புத் தெரியும். முதிர்வு வந்திடும். ஆனால் இன்றைய உலக சூழ்நிலையில் மனதை எப்பவும் சந்தோஷமாக வைத்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயம். அதற்கு நமக்கு உதவுவது தியானம் மட்டுமே.
தினமும் அரைமணி நேரம் தியானம் பண்ண வேண்டும். காலையில் எழுந்ததும் கண்ணை மூடி உட்கார்ந்து முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது கூட ஒரு விதமான தியானம் தான்.
தியானம் செய்வதால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. நமக்கு இளமையைக் கொடுக்கின்ற மெலோடோனின்ங் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. 
திரைப்பட உலகம் எத்தனை வண்ணமயமானது என்பதை தெரிந்து கொள்ள...

திரைப்பட உலகம் எத்தனை வண்ணமயமானது என்பதை தெரிந்து கொள்ள...

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல. இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்திரமான படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசிப்பவர்களுக்கானது. 

அதாவது வழக்கமாக வெளிவரும் வணிக ரீதியிலான படங்களில் இருந்து மாறுபட்டவை. ஹாலிவுட் படங்கள் தயாராகும் ஸ்டுடியோ முறைக்கு வெளியே உருவாகும் படங்கள். லாப கணக்கு போடாமல் அதற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு படைப்பாளி முழு சுதந்திரத்தோடு எடுக்கும் படங்கள்.
தயாரிப்பாளரை, விநியோகிஸ்தரை திருப்திபடுத்த வேண்டும் என்ற நிர்பந்தங்கள் இல்லாமல் உருவாகும் இந்த வகையான படங்கள் இன்டிபென்டன்ட் பிலிம்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. சுருக்கமாக இன்டி பிலிம்ஸ். இன்னும் சுருக்கமாக இன்டி.
இந்த படங்கள் மணியானவையாக இருக்கும் என்றாலும் இவை பரவலாக மக்களை சென்றடைவதில்லை என்பது பெருங்குறை. இந்த வகையான படங்கள் அபூர்வமாகவே தியேட்டர்களில் வெளியாகும். வெளியானாலும் ஓடுவது அரிதனதே.
எனவே இந்த படங்களுக்கு திரைப்பட விழாக்களை விட்டால் வேறு வழியில்லை. இதற்காக என்றே சன்டான்ஸ் படவிழாவும் பிரத்யேகமாக இருக்கிறது. படவிழாக்களில் காண்பிக்கப்பட்டு பேசப்பட்டால் இந்த படங்கள் பிரபலமாகி வெகு ஜன பார்வைக்கு வரும் பாக்கியத்தை பெறும். இல்லை என்றால் நல்ல படங்களை ரசிக்க தெரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை ஸ்கிரீன் செய்ய வேண்டியது தான்.
திரைப்படங்கள் என்றில்லை ஆவணப்படங்கள், செய்திபடங்கள் என பலவகையான படங்களும் இந்த பிரிவில் அடங்கும். மாற்று சினிமா என்றும் வகைப்படுத்தப்படும் இந்த படங்கள் எங்கே வெளியாகின்றன என்பதை நல்ல சினிமாவின் ரசிகர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
சுதந்திர படங்களை இயக்குபவர்களும் ஓரளவுக்கு ரசிகர்களை சென்றடையும் வழிகளை கையாளுகின்றனர். அதனால் தான் திரைப்பட விழாக்களுக்கு படையெடுக்கின்றனர். இத்தகைய படங்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க முடிந்தால் எப்படி இருக்கும். அதை தான் பேன்டோர் டாட் காம் செய்கிறது.
இன்டி திரைப்பட ரசிகர்களுக்கான இணைய திரைப்பட சேவை என்று வர்ணித்து கொள்ளும் இந்த தளம் இன்டி படங்களை தேடி கண்டுபிடித்து ரசிக்க உதவுகிறது. தேடல் என்றால் அங்கும் இங்கும் அலைவது போல கடினமானது அல்ல. கணணி முன் அமர்ந்தபடி சுலபமாக தேடலில் ஈடுபடலாம்.
காரணம் இந்த தளம் இதுவரை வெளியான் இன்டி படங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு என்று உள்ள ஒரு சில அருமையான இணையதளங்களை போல இதில் இன்டி படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் தங்கள் தேவைக்கேற்ப படங்களை தேர்வு செய்து பார்க்கலாம். திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவண படங்கள் என தேர்வு செய்ய பல ரகங்கள் உள்ளன. அதிலும் அனிமேஷன், காமெடி, கிரைம் என ஏகப்பட்ட வகைகள் உள்ளன.
இவை தவிர பிரபலமானவை என்றும் படங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவை முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப்படுகின்றன. ஒருவர் அப்படத்தை கிளிக் செய்தால் அவற்றுக்கான அறிமுக குறிப்பு புகைப்படத்தோடு வருகிறது.
பல படங்களுக்கு விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. அவை பற்றிய கட்டுரை இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேல் அப்படியே கிளிக் செய்து பார்த்து ரசிக்கும் வசதியும் இருக்கிறது.
பலவிதங்களில் படங்களை தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் வெளியான மற்ற வழிகளில் பார்க்க வாய்ப்பில்லாத அருமையான படங்களை சுலபமாக பார்க்க வழி செய்யும் இந்த தளத்தை நல்ல படங்களுக்கான சொர்க்கம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் ரசிகர்கள் கண்டெடுத்த திரைப்பட முத்துக்கள் பற்றிய தகவலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால் புதிதாக சேரும் படங்கள் தொடர்பான் தகவலையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இன்டி ரசிகர்கள் தான் என்றில்லை. ஹாலிவுட் படங்களையே பார்த்து பழக்கப்பட்டவர்களும் http://www.fandor.com/  உலா வந்தால் திரைப்பட உலகம் எத்தனை வண்ணமயமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை. த.தே.கூ - இலங்கை அரசு- அரசியல் ஆய்வு கட்டுரை

மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை. த.தே.கூ - இலங்கை அரசு- அரசியல் ஆய்வு கட்டுரை

அரசியல் ஆய்வு கட்டுரை சிவதர்ஷன். (கிஷோ)
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இலங்கை அரசகும் இடையிலான பேச்சு வார்த்தை கடந்த ஜனவரியில் இருந்து நடை பெறுவது யாவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் என்ன நடக்கின்றது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி இலங்கை அரசும் சரி இதுவரை என்ன விதமான பேச்சுகளை முன்னெடுக்கின்றது என்பதை தெரிவிக்காமல் தங்கள் அரசியலை முன்நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கின்றது.

மட். வாகரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட். வாகரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புச்சாங்கேணிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை வாகரை பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்