Friday, April 8, 2011

சென்னை அணிதான் என்னுடையது: சமீரா

சென்னை அணிதான் என்னுடையது: சமீரா


கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போனால் சமீரா டென்சனில் கிடந்து தவியாய் தவிப்பாராம்.
சென்னை ஐ.பி.எல் போட்டி தொடக்க விழாவில் சமீரா கலந்து கொள்வது சந்தேகம்தான் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.
சமீரா கிரிக்கெட் தொடக்க விழாவில் கலந்து கலக்க வாய்ப்பில்லாமல் போனது, 'அன் லக்கி' என்ற டைரக்டர் பிரபு தேவா இயக்கும் லேட்டஸ்ட் படத்தில் அவர் நடித்து முடிக்க வேண்டியதால், இந்த சூழலில் அவர், கிரிக்கெட் விழாவில் கலந்து கொள்ள மாட்டார்.
டைரக்டர் பிரபு தேவா இயக்கும் படத்தின் சூட்டிங் சென்னை பக்கம் நடக்கிறது. சமீரா, பிரபு தேவாவின் அனுமதியோடு விழாவில் கலந்து கொள்ளலாம்.
ஆனால் சூழல் வேறு மாதிரி அமைந்தால் என்ன செய்வது?என்கிறார்கள். மும்பை கிரிக்கெட் அணிக்காக விழாவில் வித்தியாசமாக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.
'மும்பை அணி தானே நீங்கள் ஆதரிக்கிரீர்கள்' என்று கேட்கிறவர்களுக்கு, 'சென்னை அணிதான் நான் ஆதரிக்கும் அணி' என்று அதிரவைக்கிறாராம்.

Thursday, April 7, 2011

அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக்

அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக்அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தினசரி ஒன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதை விடுத்து அதிக நேரம் வேலையிலேயே செலவு செய்தால் தேவையற்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் குறிப்பாக 11 மணி நேரம் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்த தகவலை லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அங்குள்ள ஒயிட்ஹால் அலுவலகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக 7 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.   இந்த கால கட்டத்தில் அவர்கள் வேலை பார்த்த நேரத்தை கணக்கிட்டனர்.  மேலும் இருதயம் மற்றும் உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கையை ஆராய்ந்தனர். அவர்களில் 192 பேர் மாரடைப்பு நோயாளிகளாக இருந்தனர்.
அவர்கள் நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிந்தவர்கள் இவர்கள் ஒயிட்ஹால் அலுவலகத்தில் மட்டுமின்றி வெளியிலும் கூடுதலாக வேறு வேலைகள் செய்து வந்தனர்.  இதனால் தினமும்11 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, April 6, 2011

குடிமகன்களை குஷிப்படுத்த 'பிரிட்டிஷ் எம்பயர்'

குடிமகன்களை குஷிப்படுத்த 'பிரிட்டிஷ் எம்பயர்'எஸ்என்ஜெ டிஸ்டில்லரீஸ் நிறுவனம் புதிதாக பிரிட்டிஷ் எம்பயர் என்ற புதிய மது வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் அறிமுகமாகியுள்ள உயர்ந்த ரக மது இதுவே என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2009-ல் அனுமதி பெற்ற மதுபான தயாரிப்பு நிறவனம் எஸ்என்ஜெ டிஸ்டில்லரீஸ். தமிழகத்தைச் சேர்ந்த என் ஜெயமுருகனுக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. 

தமிழகம் தவிர, கோவா, கேரளா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பாண்டிச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளார் ஜெயமுருகன். 

லாட்டரி, சினிமா, சமூக நலப் பணிகள் என இவரது எல்லைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.

தனது எஸ்என்ஜெ நிறுவனத்திலிருந்து இப்போது பிரிமியம் பிராந்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். 

பிரிட்டிஷ் எம்பையர் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பிராந்திதான் இந்தியாவில் தயாராகும் மது வகைகளில் காஸ்ட்லி மற்றும் உயர்வான தயாரிப்பு என்று அவர் நேற்று தெரிவித்தார்.

இந்த பிராந்தியை, பிரபலமான கோனியாக் மது தயாரிப்பாளர்களின் அங்காரம் பெற்ற லூயி ராயர் நிறுவனத்தின் ஆலோசனையுடன் எஸ்என்ஜெ நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் அறிமுக விழாவில் பங்கேற்றுப் பேசிய எஸ் என் ஜெயமுருகன், "இந்தியாவில் தயாராகும் மற்றெல்லா பிராண்டுகளையும் விட விலையில் மட்டுமல்ல, தரத்திலும் உயர்ந்தது இந்த பிரிட்டிஷ் எம்பயர்தான்" என்றார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்துக் கேட்டபோது, "முதலில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப் போகிறோம்," என்றார்.

எஸ்என்ஜெ நிறுவனம் தமிழகத்தின் மது தேவையில் 15 சதவீதத்தை நிறைவேற்றுமளவு முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது. மாதம் ஒன்றுக்கு 6 லட்சம் கேஸ்கள் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், வரும் ஆண்டுகளில் கோனியாக் பிராந்திக்கு இணையாக, 100 சதவீதம் கிரேப்ஸ் ஸ்பிரிட்டில் தயாராகும் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 

100 சதவீத கிரேப் ஸ்பிரிட் மது வகை இந்தியாவில் தயாராவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 5, 2011

நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை: மாடல் அழகி

நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை: மாடல் அழகிஉலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.


இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் பொதுமக்கள் நிர்வாணமாக காட்சி தரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம். இந்த நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், பூனம் எங்கே என்று கேட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டர் தளத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பூனத்தின் தரப்பில் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெளனத்தைக் கலைந்து வாய் திறந்துள்ளார் பூனம். இதுகுறித்து அவரது மேலாளர் விபின் கூறுகையில், 

பூனம் பாண்டேவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச பத்திரிகைகள் பூனத்தை அணுகின. தங்களது அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருமாறு அவை கேட்டுள்ளன. ஆனால் அதை பூனம் நிராகரித்து விட்டார். இந்தியா வென்றால் நிர்வாணமாவேன் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், பொது இடத்தில் நிர்வாணமாவேன் என்று அர்த்தம் இல்லை. மாறாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டுமே நிர்வாணமாவேன் என்றுதான் அர்த்தம்.

எனவே பொது இடத்தில் பூனம் நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை. எந்தப் பத்திரிகைக்கும் அவர் நி்ர்வாணமாக போஸ் தரவும் மாட்டார் என்றார்.

இதனால் பூனத்தின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜொள்ளு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். 

இதற்கிடையே பூனத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து விபின் கூறுகையில், மாரல் போலீஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் பூனத்தை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். நிர்வாணமாக காட்சி தரக் கூடாது என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றார்.
நடனப்பள்ளி அமைக்க ஆசைப்படும் நடிகை

நடனப்பள்ளி அமைக்க ஆசைப்படும் நடிகைநமிதாவை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சி மட்டுமே நமிதா தோன்றும் ஒரேயிடம்.

இந்த நிகழ்ச்சி நமிதாவிடம் நடனப்பள்ளி கனவை விதைத்திருக்கிறது.

எல்லாவகை நடனங்களும் கற்றுக் கொடுக்கப்படும் நடனப்பள்ளி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது நமிதாவின் நீண்ட நாள் கனவாம். அதனை தனியாக செய்ய முடியாது என்பதால் ச‌‌ரியான பார்ட்னர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம். நடனப்பள்ளி அமைக்க என்ன தகுதி என்று யாரேனும் கேட்டுவிடுவார்கள் என்ற அச்சமோ தெ‌ரியவில்லை. நான் சின்ன வயசிலேயே பரதநாட்டியம் கற்று வருகிறேன், எல்லாவகை நடனமும் தெ‌ரியும், சினிமாவுக்காகதான் வேறு மாதி‌ரி ஆடி வருகிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மகனுக்காக செக்ஸ் தொழிலாளியாக...

மகனுக்காக செக்ஸ் தொழிலாளியாக...


பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனீஷா கொய்ராலா.
கோலிவுட் பக்கம் தலையே காட்டாமல் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்தவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இப்படம் ஏப்ரல் 8 அன்று வெளிவருகிறது. இவரது அடுத்த படமான தோ பைசே கி தூப் சார் ஆனே கி பாரிஷ் என்ற படத்தில் செக்ஸ் தொழிலாளியாக நடிக்க இருக்கிறார்.
இந்த படம் ஒரு செக்ஸ் தொழிலாளியின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவமாகும். பிரபல பாலிவுட் நடிகையும், இயக்குனருமான தீப்தி நாவல் இப்படத்தை இயக்குகிறார்.
தனது ஊனமுற்ற மகனுக்காக வாழும் மனீஷா, செக்ஸ் தொழிலாளியாக மாறிவிடுகிறார். ஓரின சேர்க்கை பழக்கமுள்ள ஆண் பாடலாசிரியரை தனது வாடிக்கையாளராக சந்திக்கிறார் மனீஷா.
அது பின்னாளில் இந்த மூன்று பேருக்கும் இடையில் ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதை சுற்றித்தான் இக்கதை பின்னப்பட்டுள்ளது.
டொயோட்டோ விலை உயர்வு

டொயோட்டோ விலை உயர்வுஅனைத்து மாடல் கார்களின் விலையையும், ரூ.20,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம்.


கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், கார் விலையை உயர்த்த பல முன்னணி கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த வரிசையில், முதலில் விலை உயர்வை அறிவித்துள்ளது டொயோட்டோ கிர்லோஸ்கர்.

இதுகுறித்து டொயோட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளதால், அனைத்து மாடல் கார்களின் விலையை 1 முதல் 1.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து, இன்னோவா காரின் விலை ரூ.12,557 முதல் ரூ.18,424 வரை உயர்கிறது.

இதேபோன்று, கரோல்லா ஆல்டிஸ் டீசல் காரின் விலை ரூ.14,000 முதல் ரூ,17,700 வரை விலை உயர்கிறது. கரோல்லா ஆல்டிஸ் பெட்ரோல் காரின் விலை ரூ.10,400 முதல் ரூ.14,500 வரை உயர்கிறது.

பார்ச்சூனர் எஸ்யூவீ மாடலின் விலை ரூ.20,000 உயர்த்தப்படுகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.
சந்தோஷத்தின் எல்லையில் நடிகை

சந்தோஷத்தின் எல்லையில் நடிகைஇதையெல்லாம் சந்தோஷ லிஸ்டில் சேர்க்க முடியுமா என்று தெ‌ரியவில்லை. ஆனால், ஆறு மாதம்கூட தாக்குப்பிடிக்காத நடிகைகள் மத்தியில் இதுவொரு சாதனைதான்.

மோனிகாவை அழகி மோனிகா என்று சொன்னால்தான் ரசிகர்கள் அகமகிழ்கிறார்கள். எத்தனை படம் வந்தாலும் அழகிதான் இவரது ட்ரேட் மார்க். இவர் இப்போது சந்தோஷத்தின் எல்லையில் இருக்கிறார். என்ன காரணம்?

நடிக்க வந்து பல வருடங்கள் ஆனாலும் இப்போதுதான் இவர் நடித்த இரண்டு படங்கள் தியேட்ட‌ரில் ஒரே நேரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதாம். முத்துக்கு முத்தாக ஒன்று, நஞ்சுபுரம் இன்னொன்று.

மோனிகாவின் மூன்று படங்கள் விரைவில் ஒரே நேரத்தில் வெளியாகட்டும்.
பெண்களுக்கான 5 ஊட்டச்சத்துகள்

பெண்களுக்கான 5 ஊட்டச்சத்துகள்உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:

கீரை வகைகள்: 

உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன.எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.

முழு தானியங்கள்: 

முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம். 

கொட்டை பருப்புகள்: 

பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம். 

இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட.ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது.ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது. 

தயிர்: 

குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். 

நாவற்பழம்:
பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான். மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது.இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.
வருமான வரி செலுத்த ஏடிஎம்களிலேயே  வசதி

வருமான வரி செலுத்த ஏடிஎம்களிலேயே வசதிவருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை இனி. ஏடிஎம்களிலேயே வருமான வரியைச் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.


தற்போது வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் வங்கிகளுக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பி வரி செலுத்த வேண்டியதுள்ளது. பிறகு அதற்கான ஸ்லிப்பை பெற்று கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் மார்ச் மாதம் கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டு வருகிறது. இதை தவிர்க்க இனி ஏ.டி.எம். மூலமாகவும் வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நேற்று முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இனி படிப்படியாக மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும். 

ஏ.டி.எம். மூலம் வருமான வரி செலுத்த விரும்புபவர்கள் வங்கி இணையத் தளத்தில் தங்கள் TAN மற்றும் PAN எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்போது ஒரு எண் கொடுக்கப்படும். அதை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள குறியீடுகளை தட்டி பான் நம்பர் உள்பட கேட்கும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ளும் ஏ.டி.எம். சிறப்பு எண் ஒன்றை கொடுக்கும். அந்த எண் உதவி கொண்டு வங்கி இணையத் தளத்தில் பதிவு செய்து வருமான வரி கட்டியதற்கான சான்றிதழை பெறலாம்.

இதன் மூலம் வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்து நிற்பதை வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்க்க முடியும்.
டாப்புக்கு  சென்ற டாப்ஸீ

டாப்புக்கு சென்ற டாப்ஸீ
டாப்ஸீ என்ற பெயர் ராசியோ என்னமோ... தமிழில் ஒரு படம் நடத்து, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கும்போதே, பாலிவுட்  வாய்ப்பு வந்துள்ளது அம்மணிக்கு. 


ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை  டாப்ஸீ. இப்போது தமிழில் வந்தான் வென்றான் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


வேறு எந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் மறுத்து வந்தார் அவர். இந்த நிலையில் அவருக்கு பாலிவுட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


பிரபல இயக்குநர்  டேவிட் தவானின் 'சாஸ்மே பதூர்' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் டாப்ஸீ. நல்ல சம்பளம்... பெரிய பெயர், படம் ஜெயித்தால் இந்திய அளவில் நடிகையாக அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், உடனடியாக ஒப்புக் கொண்டாராம்.


விரைவில் வந்தான் வென்றானை முடித்ததும், மும்பையில் செட்டிலாகப் போகிறாராம் டாப்ஸீ.
வெளியாகிறது ஏ ஆர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்று

வெளியாகிறது ஏ ஆர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுஆஸ்கர், கிராமி விருதுகள் என இந்திய சினிமா இசைக்கு எட்டாக்கனியாக இருந்த விருதுகளைக் குவித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் நாளை, ஏப்ரல் 6-ம் தேதி மும்பையில் வெளியாகிறது.


தமிழ்ப் படங்களில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தாலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வெடுத்து வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 

இந்த ஓய்வுக்குப் பிறகு அவர் இசைமைக்க ஒப்புக் கொண்ட ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ராணா' மட்டுமே. 

இந்நிலையில் ரஹ்மானின் சொந்த வாழ்க்கை, இசைப் பயணம், அவரது ஆன்மிக ஈடுபாடு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்று தயாராகியுள்ளது. தலைப்பு: 'ஸ்பிரிட் ஆப் மியூசிக்'. இதை எழுதியிருப்பவர் நஸ்ரீன் முன்னி கபீர். 

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.