Thursday, April 14, 2011

பேசும் நோட் பேட் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

பேசும் நோட் பேட் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

நோட் பாட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசும் நோட் பேட் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இதற்கு முதலில் இந்த லிங்கை http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html செய்து இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள் அல்லது புதியதாக ஒன்றை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள்.
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த மென்பொருள் படித்துக் காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது.
உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஓடியோ-சீடியாகவும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஓடியோ சீடியாக மாற்றிக் கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக் கொள்ளலாம்.
Read வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும் போதே தட்டச்சு செய்ததை கேட்கும் வசதியும் மற்றும் கர்சரை எங்கு வைத்திருந்தாலும் அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டு வரலாம்.

Monday, April 11, 2011

காதலில் வெற்றி பெறுவதற்கு...

காதலில் வெற்றி பெறுவதற்கு...



காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம்.

- காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.

- உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

- காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.

- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.

- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

- காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

குறைகளை பட்டியல் இடாதீர்கள்

- உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.

- காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று நிினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.

- கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.

- காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.