Monday, May 9, 2011

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

விண்டோஸ் பவர் ஓப்ஸன்கள் மூலம் கணணியை Sleepஇற்கு செல்லவிடாமல் Stand Byயிலேயே வைத்திருப்பதற்கு அதிக வசதிகள் இல்லை.
அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணணியை அணையவிடாமல் வைத்திருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் பவர் ஓப்ஸனை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
இதற்காகவே Coffee என்ற டூல் பயன்படுகிறது. இந்த போர்டபிள் டூலை ரன் செய்து தேவையான KB அளவையும் தேர்வு செய்துவிட்டால் குறிப்பிட்ட தரவிறக்கம் முடியும் வரை கணணி அணையாமல் வேலை செய்தபடி இருக்கும்.http://sourceforge.net/projects/coffee-sc/
ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி: 25000 முகவரிகள் வரை சேமிக்க

ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி: 25000 முகவரிகள் வரை சேமிக்க

பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.
இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது.
தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும்.
அந்த அளவை தற்போது உயர்த்தி 25000 முகவரிகளை சேமித்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கூடுதலாக இன்னொரு வசதியும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும். இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போதவில்லை.
இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது. ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அறிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற

உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற


கணணி என்பது மனிதனுக்கு ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தினம் ஒரு தொழில்நுட்ப வசதி கணணி சம்பந்தமாக வெளிவருகிறது.
நம்முடைய பழைய கணணி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணணியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணணியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணணிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம்.
கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணணியில் உள்ள அனைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணணிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது.
இது முற்றிலும் PickMeApp ஒரு இலவச மென்பொருள் இருந்தாலும் தாங்கள் இந்த தளத்தில் உறுப்பினர் ஆகினால் மட்டுமே இந்த மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்ய முடியும்.
இந்த முறையில் நீங்கள் உங்கள் மென்பொருளை புதிய கணணியில் மாற்றும் போது நாம் செய்து வைத்திருந்த செட்டிங்க்ஸ் கூட மாறாமல் வரும் என்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சம்.
இந்த மென்பொருளை நிறுவச் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் புதிய கணணிக்கு மாற்ற வேண்டிய மென்பொருட்களை தேர்வு செய்து கொண்டு அதன் ரெஜிஸ்டரியை அப்படியே புதிய கணணியில் நிறுவினால் அந்த மென்பொருள் உங்களின் புதிய கணணியில் வந்து விடும்.

USB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு

USB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு

உங்கள் நண்பர்களின் USB Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.
ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு

நம்மில் பலர் இணையத்தை இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம்.
இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம்.
அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும்.
முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால்http://tools.google.com/gears/  சென்று நிறுவிக் கொள்ளவும்.
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும்.
இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும்  உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும்.
இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம்.