Saturday, May 21, 2011

மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் மன்னரின் திருமணம்

மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் மன்னரின் திருமணம்

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. ஜூலையில் மொனாகோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் திருமணம் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டில் மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தவுள்ளார் பூட்டான் நாட்டு மன்னர். வரும் அக்டோபர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரை கரம் பிடிக்கிறார்.
இவரது திருமணம் சாதராண குடும்பத்தில் நடப்பது போன்று மிகவும் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாக பூட்டான் அரண்மணை வட்டாரம் கூறியுள்ளது. பூட்டான் மன்னராக இருப்பவர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் வாங்சூக்(31).
இவர் கடந்த 2008ம் ஆண்டு பூட்டான் நாட்‌டின் மன்னராக தனது தந்தை ஜிக்மிசெங்கியீ முடிதுறந்ததையடுத்து பொறுப்பேற்றார். இந்நிலையில் பூட்டான் பாராளுமன்ற கூட்டம் திம்புவில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசுகையில் மன்னர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் பேசியதாவது: என் மனதை கவர்ந்த ஜெட்சன்பெய்மா என்ற மாணவியை நான் திருமணம் செய்யவுள்ளேன். எனக்கு வரப்போகும் மனைவி படித்த பெண்ணாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் எதிர்பார்த்த அனைத்து தகுதிகளையும் கொண்ட பெண்ணாக ஜெட்சன்பீமாவிடம் உள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் எங்கள் திருமணம் மிகவும் எளிய முறையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறிதுடன் தனது வருங்கால ம‌னைவி ஜெட்சன்பீமாவுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினையும் காண்பித்தார் மன்னர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால்.
இது குறித்து பூட்டான் பிரதமர் ஜிக்மி தைன்லி கூறுகையில்,"மன்னரின் திருமணத்தை நாடோ ஆவலோடு எதிர்பாக்கிறது" என்றார். இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெறவிருப்பதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகையின் வாழ்க்கை கதை படமாகிறது

நடிகையின் வாழ்க்கை கதை படமாகிறது
 பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கையை இயக்குனர் அனில் ஷர்மாவின் தம்பி கபில் ஷர்மா படமாக எடுக்கவிருக்கிறார்.
பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கையில் உள்ள இரகசியங்கள் எல்லாம் தற்போது வெளிவரப்போகிறது. இந்த படத்தில் ரேகா கதாபாத்திரத்தில் பிபாஷா பாசு, ஸ்ரீதேவி அல்லது ராணி முகர்ஜியை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இது குறித்து இயக்குனருக்கு பழக்கமான ஒருவர் கூறியதாவது, ரேகாவின் வாழ்க்கை ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம். இதற்கான திரைக்கதையை கபில் எழுதியுள்ளார். அவர் சினிமாத் துறை சார்ந்த படம் ஒன்றை எடுக்க விரும்புகிறார் என்றார்.

ரேகா வாழ்க்கையில் அமிதாப் பச்சன், கிரண் குமார், வினோத் மெஹ்ரா மற்றும் ஜெயா பச்சனுக்கும் பங்கு உள்ளது. இவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். இது குறித்து கபில் ஷர்மா கூறியதாவது, ஒரு காலத்தில் சினிமாவில் முதல்தர கதாநாயகியாக இருந்த ரேகாவின் வாழக்கையை திரைப்படமாக எடுக்கிறேன்.

பாலிவுட் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் பெயர் சிதாரே. இதில் 7 முதல் 8 முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும். அதற்கான நடிகர்களை நான் இன்னும் தேர்வு செய்யவில்லை. ரேகாவின் சினிமா வாழ்க்கை, உறவுகள், வாழ்வின் ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

Wednesday, May 18, 2011

தூக்கமின்மையை போக்கும்  மருதாணி

தூக்கமின்மையை போக்கும் மருதாணிபில்லி, சூனியம் போக்கும் மருதாணிப் பூக்கள் கைகளிலும், கால்களிலும் செந்நிறத்தில் மின்னும் மருதாணியை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.

மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் பெண்களுக்கு கிடைகின்றன.மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும்.. இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை பயனுள்ளவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

மருதாணியில் கௌமாரின்கள், நாப்தாகுயினோன்கள், லாசோன், ஃபிளேவனாய்டுகள், ஸ்டிரால்கள், டேனின்கள், ஆகியன உள்ளன.

தேமல் போக்கும் மருதாணி

இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும். பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.

கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக போடலாம். தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும். இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும். கால் எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

உடல் வெப்பம் தணியும்

மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை .

மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும். விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

வாய்ப் புண், அம்மை நோய்

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

தூக்கமின்மையை போக்கும்

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.

அழகே ஆபத்தாகும்

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.