Thursday, May 26, 2011

மது கொடுத்து மனைவியை  கொடூரமாக...

மது கொடுத்து மனைவியை கொடூரமாக...

 ‘பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் மது வாங்கிக் கொடுத்து மனைவியை கொலை செய்துவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடினேன்’ என்று திருப்பதி சிஐடி இன்ஸ்பெக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் கோட்டைமேட்டில் கடந்த 22-ம் தேதி ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். ஜீன்ஸ்பேன்ட் கழட்டி அருகில் வைக்கப்பட்டிருந்தது. மதுபாட்டில்கள், பார்சல் டிபன் பொட்டலங்களும் கிடந்தன. சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே திருப்பதியை சேர்ந்த சிஐடி இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணா, தனது மனைவி நாகமல்லேஸ்வரியை (35) காணவில்லை என கடந்த 22-ம் தேதி திருவண்ணாமலை போலீசில் ஒரு புகார் கூறியிருந்தார். அவரை சமயபுரம் போலீசார் வரவழைத்து, கொலையான பெண்ணின் உடலை காட்டினர். முதலில் அடையாளம் தெரியவில்லை என மறுத்த அவர், பின்னர் அது தனது மனைவிதான் என கூறினார். மல்லேஸ்வரியின் பெற்றோரும் நேற்றிரவு திருச்சி வந்து, அந்தப் பெண் தனது மகள்தான் என உறுதிப்படுத்தினர்.

விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக சத்தியநாராயணா தகவல்களை கூறியதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும் மல்லேஸ்வரி என்ற சைலுவுக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. நிகிலா (11) என்ற குழந்தை உள்ளது. என் மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாள். யார் என்று கேட்டால் சரியாக பதில் சொல்ல மாட்டாள். நான் வேலை பார்க்கும் இடத்திலும், நண்பர்கள் எனது மனைவியைப் பற்றி தவறாக பேசத் தொடங்கினர். இது எனக்கு அவமானமாக இருந்தது. இதனால் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன்.

கொடைக்கானல் சுற்றுலா சென்று விட்டு காரில் கடந்த 21-ம் தேதி ஊர் திரும்பினோம். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மதுவும் சமயபுரத்தில் டிபனும் வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். இருங்களூர் கோட்டைமேடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த காலி மனையில் பெட்ஷீட்டை விரித்து உட்கார்ந்தோம். இருவரும் மது அருந்தினோம். நான் கொஞ்சமாக குடித்துவிட்டு, அவளுக்கு நிறைய ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றினேன். போதையில் பிளாட் ஆனதும் அவள் தலையில் கல்லைப் போட்டு கொன்றேன். போலீசை திசைதிருப்ப அவளது பேன்ட்டை கழட்டி விட்டேன். மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க, அந்த இடத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு வந்துவிட்டேன். இவ்வாறு வாக்கு மூலத்தில் சத்தியநாராயணா கூறியிருப்பதாக தெரிகிறது.

Monday, May 23, 2011

ரெட் ஜெயன்ட் பெயர் இல்லாமல்  வருவதுதான் ஸேஃப்

ரெட் ஜெயன்ட் பெயர் இல்லாமல் வருவதுதான் ஸேஃப்சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மகதீரா.

இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகிறது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கலைப்புலி தாணு வாங்கி, கே பாக்யராஜை வசனம் எழுத வைத்து டப் செய்தார். பின்னர் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி நல்ல விலைக்கு வாங்கினார். படத்தின் விளம்பரங்கள், ட்ரெயிலர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வழங்கும் என்று போடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட்ஜெயன்ட் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

கீதா ஆர்ட்ஸ், அல்லு அரவிந்த் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில், படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனமே நேரடியாக மே 27-ம் தேதி வெளியிடுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ரெட் ஜெயன்ட் பெயர் இல்லாமல் வருவதுதான் இப்போதைக்கு ஸேஃப் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது, சிரஞ்சீவி தரப்பில்.
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  பணி வாய்ப்பு

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி வாய்ப்புஇந்திய அரசின் ஷெட்யூல் 'ஏ' பிரிவைச் சார்ந்த நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களுள் கோல் இந்தியா நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். எரிசக்தி துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1080 மேனேஜ்மெண்ட் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
more details visit: rgbgroups.com
விண்வெளி வீரர்ககளுக்கு  இங்கிருந்து ஆசிர்வாதம் வழங்கிய போப்

விண்வெளி வீரர்ககளுக்கு இங்கிருந்து ஆசிர்வாதம் வழங்கிய போப்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு எண்டவர் விண்கலம் கடந்த வாரம் புறப்பட்டு சென்றது. அதில் கமாண்டர் மார்க் கெல்லி தலைமையில் 6 வீரர்கள் சென்றனர். தாங்கள் எடுத்துச் சென்ற ஆல்பா மேக்னடிக் ஸ்பெக்ட்ரோ மீட்டரை விண்வெளி மையத்தில் பொருத்தும் பணியில் நாசா வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களுடன், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் 16ம் பெனடிக்ட், வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கமாண்டர் மார்க் கெல்லியிடம் பேசிய போப், ÔÔவிண்வெளியிலிருந்து நீங்கள் பூமியை பார்க்கும் போது, நாமெல்லாம் ஒரே கூட்டுக்குள் ஒன்றாக வாழ்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். ஆனால் இங்கு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பலியாவது எவ்வளவு அபத்தமாக உள்ளதுÕÕ என குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த கெல்லி, ÔÔஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் நாங்கள் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

இங்கிருந்து பார்க்கும்போது நாடுகளுக்கு இடையே எந்த எல்லையும் இல்லை. ஆனால் வன்முறையால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வது அபத்தமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்கிறோம்ÕÕ என்றார்.
துப்பாக்கி சூட்டில் தலையில் காயம் அடைந்த கெல்லியின் மனைவியும், அமெரிக்காவின் அரிசோனா மாநில எம்.பி.யுமான கேப்ரேல் கிப்போர்ட்ஸ் குணமடையவும் போப் வாழ்த்து தெரிவித்தார். தனது மனைவிக்கு ஆசிர்வாதம் வழங்கிய போப்புக்கு கமாண்டர் கெல்லி நன்றி தெரிவித்தார்.
முழு நிர்வாணத்துடன் நடிக்கும் நடிகை

முழு நிர்வாணத்துடன் நடிக்கும் நடிகைஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.
Latest jobs visit: www.rgbgroups.comஇந்நிலையில் 'ஹீரோயின்' எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.
Latest jobs visit: www.rgbgroups.com
பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.