Sunday, February 5, 2012

கமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது யார்?

கமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது யார்?

சில நாட்களுக்கு முன் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் இயக்குனர் ஷங்கருடன் இணைகிறார் கமலஹாசன். இந்த படத்திற்கு “தலைவன் இருக்கிறான்” எனப் பெயரிட்டுள்ளனர்.



இதற்கு முன் கமல் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் தசாவதாரம் படத்தில் இணைந்ததும், அந்த படம் வெற்றியடைந்ததும் அனைவரும் அறிந்ததே. அதேபோல் ஷங்கர்-கமல் ஒன்று சேர்ந்த படம் மெகா ஹிட்டான ”இந்தியன்”. தலைவன் இருக்கிறான் படத்தில் ஹீரோயினாக நடிக்க இந்தி நடிகை காத்ரீனாவுடன் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது.

முக்கிய வேடத்தில் யாரை நடிக்க வைப்பது? என்று யோசிக்கும் போது விளையாட்டாக ஜாக்கி சான் பெயர் அடிபட அவரையே கேட்டதற்கு, கமலுக்கும் ரவிச்சந்திரனுக்கும் ஜாக்கியுடன் நல்ல நட்பு நிலை இருந்ததால் ஜாக்கி ஒத்துக் கொண்டாராம். இந்த நடிகர் பட்டாளத்திற்கு ஷங்கர் படத்தில் எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது படம் ரிலீஸான பின் தான் தெரியும்.