Thursday, April 26, 2012

பீசாவை அதிக அளவு சாப்பிட்டால்.....

பீசாவை அதிக அளவு சாப்பிட்டால்.....


பீசாவை அதிக அளவு சாப்பிட்டால் பெருஞ்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இங்கிலாந்தின் லாங் ஐலேண்டு பல்கலைகழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கர் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.

அப்போது ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணப்படுத்துவதை கண்டறிந்தனர். மேலும் பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர்.

ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.

இது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது என பேராசிரியர் சுப்ரியா தெரிவித்துள்ளார்.
படித்து முடித்ததும் நாட்டை விட்டு வெளியேறுகின்ற காரணம்??

படித்து முடித்ததும் நாட்டை விட்டு வெளியேறுகின்ற காரணம்??


ஜேர்மனியில் சட்டங்கள் மிக கடுமையாக இருப்பதனால், 80 சதவிகித மாணவர்கள் படித்து முடித்ததும் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
புலம்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த ஜேர்மன் அறக்கட்டளைகளின் நிபுணர் குழு ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களைப் பற்றி ஆய்வு செய்தனர்.

இவர்கள் திறமையான வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டுக்குக் கொண்டுவரும் பல்வேறு நாடுகளின் வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இதன் இயக்குநரான குனில்லா ஃபிங்க்கே கூறுகையில், படித்து முடித்த பின்பு ஜேர்மனியில் தங்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சட்டம் தெரியவில்லை.

அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் படித்துப் பயன் பெறலாம். அவர்களுக்கு ஜேர்மனியை விட ஆங்கிலமே நன்றாகத் தெரிந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு மாணவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் நீண்ட ஒப்பந்தத்துக்கு அமர்த்தக்கூடாது என்கிறார். ஏனெனில் இவர்களில் 40 சதவீதம் பேர் இன வேறுபாட்டுத் தொல்லையில் சிக்கி அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசுமைக்கட்சியின் கல்வி செய்தித் தொடர்பாளரான காய் கெஹ்ரிங், ஜேர்மனியின் பண்பாடு மக்களை வரவேற்காமல் அச்சுறுத்துகிறது என்றார்.
திருமணத்திற்கு நடிக்க வந்த நடிகை.....

திருமணத்திற்கு நடிக்க வந்த நடிகை.....

திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நடிகை ரீமா சென், மீண்டும் நடிக்கவுள்ளார். அதுவும் தமிழில் நடிகர் விஜய் தயாரிக்க இருக்கும் முதல் படத்தில். 1980களில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில், ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்திற்கு ஹீரோ அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்த படம் இது. இப்படம் இந்தியிலும் ரீ‌-மேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தமிழில் ரீ-மேக் செய்யவுள்ளனர். படத்தின் நாயகனாக பிரபுவின் மகன் விக்ரமும், நாயகியாக கோ கார்த்திகாவும் நடிக்கவுள்ளனர். ‌இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பியாவும் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகர் விஜய்யே தயாரிக்க இருக்கிறார். விஜய் தயாரிக்கும் முதல்படம் இது.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அதாவது விக்ரம் பிரபுவுக்கு அக்காவாக நடிகை ரீமா சென் நடிக்கவுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் முதல்படம் இது. இப்படத்தில் நடிப்பது குறித்து ரீமா கூறியுள்ளதாவது, சட்டம் ஒரு இருட்டறையின் இந்தி பதிப்பான அந்தா கானூன் படத்தை பார்த்தேன். அதில் போலீஸ் அதிகாரியாக ஹேமமாலினி நடித்து இருந்தார். இதுபோன்ற சவாலான வேடங்களில் தான் பெரிதும் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கவர்ச்சியாக நடித்து, ஆபாசமாக தெரியாமல் அழகைக் காட்டவேண்டும்

கவர்ச்சியாக நடித்து, ஆபாசமாக தெரியாமல் அழகைக் காட்டவேண்டும்


தமிழில் தற்போது படவாய்ப்புகள் இழந்துள்ள ஸ்ரேயா, தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களில் நடித்துவருகிறார்.சமீபத்தில் ஊடக துறையினரிடம் நாயகி ஸ்ரேயா அளித்த பேட்டியில், வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல சம்பவம் நடந்து வருகிறது மேலும் இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் என்ன பலனை கொடுக்கும் என்று யோசிக்கிற திறமை எனக்கு இல்லை.நான் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டபோது அது ஜெயிக்குமோ தோற்குமா என்று மதிப்பீடு செய்ய முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக நிறைய தோல்விகளை பார்த்தேன்.மேலும் கவர்ச்சியாக நடித்து, ஆபாசமாக தெரியாமல் அழகைக் காட்டவேண்டும். நினைத்ததையெல்லாம் செய்யக் கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளின் மத்தியில் நான் நடித்த படங்களில் நான் முழு திறமையை காட்டி உள்ளேன். சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். தலை எழுத்தை மாற்ற முடியாது. ஒரு படம் வெற்றியானால் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும். அந்த படத்துக்காகத்தான் ஒவ்வொரு நடிகர், நடிகையும் காத்திக்கிறார்கள். எனக்கு அது மாதிரி படங்கள் நிறைய வந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
தன் போர்வையை போர்த்தி படுக்கையில் இருந்து இழுத்து கீழே போட்டு....

தன் போர்வையை போர்த்தி படுக்கையில் இருந்து இழுத்து கீழே போட்டு....


உக்ரைன் நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் யுலியா டைமோஷங்கோ(வயது 51).
இப்பெண்மணியின் பதவி காலத்தில், ரஷ்யாவுடன் செய்து கொண்ட எரிவாயு ஒப்பந்தத்தில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் தற்போது கார்கிவ் நகர சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அங்கு தன்னை சிறை காவலாளிகள் 3 பேர் அடித்து உதைத்ததாக யுலியா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தன் மீது காவலாளிகள் போர்வையை போர்த்தி, படுக்கையில் இருந்து இழுத்து கீழே போட்டு தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
கால்தவறி ரயில்வே பாலத்தில் விழுந்த சிறுமி சாவு

கால்தவறி ரயில்வே பாலத்தில் விழுந்த சிறுமி சாவு

பிரிட்டனை சேர்ந்த ஜே மில்லர் என்கிற 13 வயது சிறுமி இரயில்வே பாலத்தில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கால்தவறி விழுந்ததில் உயிர் இழந்தார்.இது பற்றி அவரது தாய் கூறுகையில், தூக்கம் இல்லாத காரணத்தினால் அதிகாலையில் எழுந்து நடந்திருக்கலாம், எப்படியோ கால் தவறி விழுந்துவிட்டாள் என்று கூறி வருந்தினார்.இவர் தாயர் ஆப்பிரிக்காவின் மூத்த சுகாதார ஆலோசகர், தந்தை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆவார். நல்ல படைப்பாளி, அழகானவள், புத்திசாலி, இவர் இறந்துள்ளது பெற்றோரை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரியாதையாக பாஸ் போட்டு விடு

மரியாதையாக பாஸ் போட்டு விடு


மேற்குவங்கத்தில் உள்ள பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கோபிவல்லபபுரம் என்ற ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பில் 90 மாண்வர்களை 'ஃபெயில்' செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பள்ளிக்குள் வைத்து பூட்டி வைத்தனர்.

நயபாசன் ஜனகல்யாண் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12ஆம் வகுப்புக்கு தங்களை பாஸ் செய்யும் வரை கதவுகளைத் திறக்க மாட்டோம் என்று மாணவர்கள் தரப்பு பிடிவாதம் பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சக்தி பெற விரதம் இருந்த பெண் சாவு

சக்தி பெற விரதம் இருந்த பெண் சாவு


உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றில் இருந்து நேரடியாக சக்தி எடுத்துக் கொள்வதாக கூறி விரதம் இருந்த சுவிட்சர்லாந்து பெண் பரிதாபமாக இறந்தார். உணவு, குடிநீர் அருந்தாமல் சித்தர்கள் பல ஆண்டு காலம் உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. உடல் இயக்கத்துக்கு தேவையான ஜீவ சக்தியை காற்றில் இருந்து அவர்கள் நேரடியாக பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் யோகாசன குரு ஒருவர் இந்த முறையை பின்பற்றி 70 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வது தொடர்பான டாகுமென்டரி சுவிட்சர்லாந்து டிவியில் 2010,ம் ஆண்டு ஒளிபரப்பானது. உல்ப்ஹால்டன் என்ற நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார் சூரிய வெப்பத்தில் இருந்து நேரடியாக சக்தியை பெற்று உயிர் வாழப்போவதாக கூறி பரிதாபமாக இறந்தார்.
யாரு‌க்கு‌ம் பன்றிக் காய்ச்சல் ‌இ‌ல்லை -த‌மிழக அரசு

யாரு‌க்கு‌ம் பன்றிக் காய்ச்சல் ‌இ‌ல்லை -த‌மிழக அரசு


சென்னையில் இதுவரை 44 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது எ‌ன்று‌ம் அனைவரும் சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர் எ‌ன்று‌ம் மாநகராட்சி சுகாதார அதிகாரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் கருத்தரங்கம் இ‌ன்று நடைபெ‌ற்றது. இதில் அரசு, தனியார் டாக்டர்கள் 800 பேர் கலந்து கொண்டனர்.

கூ‌ட்ட‌த்த‌ி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம், உதவி சுகாதார அதிகாரி தங்கராஜ், பன்றிக்காய்ச்சல் பரவாமல...... மேலும்

Tuesday, April 24, 2012

தந்தை மன்னிக்காததால் 12 ஆண்டுகளாக சிறையில் காத்திருக்கிறார் மகன்.

தந்தை மன்னிக்காததால் 12 ஆண்டுகளாக சிறையில் காத்திருக்கிறார் மகன்.


மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்தும், தந்தை மன்னிக்காததால் 12 ஆண்டுகளாக சிறையில் காத்திருக்கிறார் மகன். இதனால் சவுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் வசிப்பவர் ஈத் அல் சினானி. இவர் தனது வளர்ப்பு தாய் முசாப் அல் ஜரானியை சரமாரியாக அடித்து விட்டார். இதுகுறித்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சினானியை கைது செய்த போலீசார் கடந்த 1997ம் ஆண்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் சினானிக்கு 3 ஆண்டு சிறை, 200 கசையடி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, மகனின் தண்டனை காலம் முடிந்தாலும், தான் மனம் மாறும் வரை அவனை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தந்தை கேட்டுக் கொண்டார். அதன்படி, 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகும் 12 ஆண்டுகளாக தந்தையின் மன்னிப்புக்காக காத்திருக்கிறார் சினானி.
‘என் மீது புகார் கொடுத்த தந்தை மன்னித்தால் மட்டுமே, சிறையில் இருந்து என்னால் வெளியில் வர முடியும்’ என்று சினானி கூறுகிறார். இந்நிலையில் சவுதி அரேபிய சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தந்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்

Sunday, April 22, 2012

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை

அமெரிக்கான் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் நேற்று மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாஸ்டன் காவல் துறையோ, பல்கலைக்கழக நிர்வாகமோ பலியான  மாணவனின் பெயரை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம், பலியானவர் இந்தியர் என அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தை அடுத்த குடியிருப்பு பகுதி யில் ஒரு இளைஞரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, தலையில் பலமாக அடிபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது.  ஆனால் அந்த இளைஞர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை நடைபெறுகிறது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தீவிர விசா ரணை நடைபெற்று வருகிறது என பாஸ்டன் காவல் துறை தெரிவித்துள்ளது.