Thursday, May 3, 2012

சென்னையில் நாய்களுக்கான முதல் ரத்த வங்கி

சென்னையில் நாய்களுக்கான முதல் ரத்த வங்கி

நம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அவை காயமடைந்து துரித சிகிச்சைகூட பலனளிக்காமல் பரிதாபமாய் மரணமடைந்தும் வருகின்றன. அந்த சந்தர்ப்பங்களில் அவைகளுக்கு சிகிச்சை அளிக்க இரத்த சேமிப்பு நிலையம் அவசியமாகிறது.அந்த வகையில், ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
சலங்கை ஒலி  விஸ்வரூபடத்தில் கமல் கலாசார நடனம்

சலங்கை ஒலி விஸ்வரூபடத்தில் கமல் கலாசார நடனம்

உலக நாயகன் கமலஹாசன் நடித்து இயக்கும் படம் 'விஸ்வரூபம்'. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் உலக நாயகன் கமலஹாசன், விஸ்வரூபம் படத்தில் 'கதக்' நடனம் ஒன்றை ஆட இருக்கிறார்.
படத்தின் ஒரு காட்சி மட்டும் அல்லாமல், கதையொட்டியே இந்த நடனம் வருவதாக தெரிகிறது. கமல் கதக் டான்ஸ் இந்த பாடல் சங்கர் மகாதேவன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். உலக நாயகனுக்கு சினிமாவின் எல்லா கலைகளும் தெரியும், ஏற்கனவே சலங்கை ஒலி படத்தில் பாரத நாட்டிய கலைஞனாக கமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணையும் 'உனக்கும் எனக்கும்' ஜோடி

மீண்டும் இணையும் 'உனக்கும் எனக்கும்' ஜோடி

பூலோகம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆதிபகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கவுள்ள படம் பூலோகம். புதுமுகம் கல்யாண் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதலில் நயன்தாராவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அவருக்கும் இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது பூலோகத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மாறாக அவருக்கு பதில் த்ரிஷா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

எதிர்வரும் மே 20ம் திகதி முதல் பூலோகம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. பூலோகம் படத்திற்காக பிரபல ஸ்டுடியோ ஒன்றில் சுமார் ரூ.1.5 கோடி செலவில் பிரம்மாண்டமாக மார்க்கெட் ஒன்று உருவாகி வருகிறது.
அனுஷ்கா  தெலுங்கு படங்களை ஒதுங்க காரணம்

அனுஷ்கா தெலுங்கு படங்களை ஒதுங்க காரணம்

கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அனுஷ்கா தவிர்த்து வருவதால் பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு படங்களை அனுஷ்கா புறக்கணிக்கிறாரா என்றதற்கு தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை வருடமாக அனுஷ்கா தெலுங்கில் ஒரு புதிய படம் கூட ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
ஆனால் தமிழில் நிறைய படங்கள்
ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது நான்குக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரமுடன் தாண்டவம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார்.


   


தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் தமாருகம், பிரபாஸுடன் வாரதி என ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. அவரது சினிமா கேரியரை பார்க்கும் போது தமிழைவிட தெலுங்கில் பெரிய வெற்றி படங்களை தந்திருக்கிறார்.

ஆனாலும் தற்போது அவர் தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை.30 வயதை கடந்துவிட்ட அனுஷ்கா தற்போதுள்ள இளம் நடிகைகளின் போட்டியை எதிர்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுத்திருப்பார் என்று டோலிவுட் திரையுலகினர் கருதுகின்றனர்.

அதேநேரம் கோலிவுட்டில் மார்க்கெட்டை நம்பி இந்த முடிவு எடுத்திருக்கலாம் அல்லது தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறது.
இதமாய்  ஒரு நிலநடுக்கம் வழக்கு எண் 18/9

இதமாய் ஒரு நிலநடுக்கம் வழக்கு எண் 18/9

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.
தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.  


  

அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9. 

படம் பார்த்த இயக்குநர்களில் ஒருவரான ரா பார்த்திபன், "சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்... ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
 


வழக்கு எண் 18/9 இளம் வயதில் ஏற்படும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மிக அழகாக எடுத்துள்ளார் பாலாஜி சக்திவேல். நிச்சயமாக இது மாணவர்களுக்கு ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்கும்குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாகும் இப்படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு இதற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.
 நடிகையை திருமணம் செய்யமாட்டேன் - ரெய்னா

நடிகையை திருமணம் செய்யமாட்டேன் - ரெய்னா

ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து கிசுக்கப்பட்ட நிலையில் இந்திய வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மெனுமான சுரேஷ் ரெய்னா நடிகையை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.


****
 ****
"நான் இப்போதே திருமணம் செய்ய விரும்பவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்வேன். ஆனால் பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய மாட்டேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்

Wednesday, May 2, 2012

பார்ட்டிகளை என்னால் தவிர்க்க முடியாது

பார்ட்டிகளை என்னால் தவிர்க்க முடியாது

கேரள நடிகைகள் ஆட்சி செய்யும் தமி‌ழ், தெலுங்கு திரையுலகில் கடந்த பத்து வருடங்களாக முன்னணியில் இருக்கிறார் த்ரிஷா. தமிழ்ப் பெண் என்ற அளவில் இது முக்கியமானது. இதற்குமுன் முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பு, சிம்ரன் என எல்லோருமே வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முன்பு த்ரிஷா குறித்து வாரத்திற்கு நான்கு வதந்திகள் வரும். இப்போது ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. மே 4 த்ரிஷாவுக்கு 28 வயது. அவரது பேச்சிலும் அந்த முதிர்ச்சி வெளிப்படுகிறது.

மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்ப்த்டுளால் நித்தியானந்தா பத்து நாட்களுக்குள் நீக்க வேண்டும்


தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்திருக்கிறீர்களே, என்ன காரணம்?

தமிழில் நடிக்கலைன்னு யார் சொன்னது. விஷாலுடன் சமரன் படத்தில் நடிச்சுகிட்டுதான் இருக்கேன். அடுத்து அகமது டைரக் ஷனில் ஜீவா நடிக்கிற படத்திலேயும் இருக்கிறேன்.

ஆனாலும் இது குறைவு இல்லையா?

நான் பத்து வருஷமா இந்த பீல்டில் இருக்கேன். ஒரே மாதிரியான வேடங்களில் நடிச்சு போரடிச்சுப் போச்சு. அதனால் டிபரண்டான கேரக்டர் ட்ரை பண்றேன். சமரனில் அப்படியொரு கேரக்டர். அகமது படமும் அப்படிதான். சவாலான வேஷங்கள் கிடைச்சா நான் எப்போதும் நடிக்கத் தயார்.

சவாலான வேஷம்னு சொல்றீங்க, ஆனா ஹீரோயின் ஓபியண்ட் கதையை தவிர்க்கிறீங்களே...?

ஒரு சினிமாவோட வெற்றியு‌ம், தோல்வியும் ஒரு நடிகை கையில இல்லை. இதை உறுதியா நம்பறேன். ஹீரோயின் ஓரியண்ட் படம்னா மொத்த சுமையும் நாமதான் தாங்கணும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் கெட்ட பெயர் முழுக்க நமக்குதான் வரும். அதையும் மீறி என்னை கவர்ற கதைன்னா ஹீரோயின் ஓரியண்ட் படம்னாலும் ஓகேதான்.

ஆரணி சிவன் கோவில் தேர் சரிவு: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்


இந்தி பிரவேசம் சரியாக அமையாததில் வருத்தம் உண்டா?

நான் எப்போதும் இந்திக்குப் போகணும்னு விரும்பினதில்லை. ப்ரியதர்ஷன் சார் கூப்பிட்டார் சரின்னு பட்டது போனே‌ன், நடித்தேன். நான் முன்பே சொன்ன மாதி‌ரி ஒரு படத்தோட வெற்றிக்கும் தோல்விக்கும் நடிகை காரணமில்லை. இந்தியில் நடிக்க கேட்கிறாங்க. ஆனா பத்தோடு பதினொன்னா எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை. நல்ல ஆஃபர்கள் வந்தால் எனக்கும் பிடித்திருந்தால் பார்க்கலாம். தமி‌‌ழ், தெலுங்கில் நடிப்பதுதான் எப்போதும் எனக்குப் பிடிச்சிருக்கு.

திருமணம்...?

யாராக இருந்தாலும் ஒருநாள் திருமணம் செய்தாக வேண்டும். அப்கோர்ஸ் எனக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அதற்குள் திருமணம் முடிந்ததாகவு‌ம், காதலிக்கிறதாகவும் விதவிதமாக வதந்திகள். காதலித்து கல்யாணம் செய்ய எனக்கும் ஆசைதான். ஆனால் இன்னும் கொஞ்சநாள் சினிமாவில் தொடரவே ஆசைப்படுகிறேன்.

தெலுங்கு தம்முவில் உங்களுடன் கார்த்திகாவும் நடித்திருக்கிறாரே?

தெலுங்கில் இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதுசில்லை. படத்தில் என்னுடைய கேரக்டரை மட்டுமே நான் பார்ப்பேன். அந்தவகையில் தம்மு கதாபாத்திரம் பிடித்துதான் நடித்தேன். எல்லோரும் எதிர்பார்த்தபடி படத்துக்கு கிராண்ட் ஓபனிங் கிடைச்சிருக்கு.

6ம் கட்ட பேச்சுவார்த்தையை என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் புறக்கணித்தனர்; கரண்ட் கிடைப்பதில் சிக்கல்

அடுத்த தெலுங்குப் படம்...?

ரவிதேஜாவுடன் நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

அலெக்ஸ் நாளை விடுவிக்கப்படுவார்


த்ரிஷா என்றாலே பார்ட்டி என்றொரு பெயர் இருக்கிறதே...?

எனக்கு சினிமாவில் நண்பர்கள் அதிகம். மனசுக்கு நெருக்கமான நண்பர்களை பார்ட்டிகளில்தான் சந்திக்கிறேன். நண்பர்களின் பார்ட்டிகளை உங்களால் தவிர்க்க முடியாது. ரம்யாகிருஷ்ண‌ன், குஷ்பு, பிருந்தா மாஸ்ட‌ர், ரிமோசென் என்று சில பேர் இருக்கிறார்கள். சினிமாவுக்கு வந்தபோதே பழக்கம். அவர்களுடன் மனம்விட்டு பேச பார்ட்டிகள்தான் ஒரே வழி. இதை தப்பாகப் பார்த்தால் நான் என்ன செய்ய முடியு‌ம்?
பைசா செலவில்லாமல் 50 கிமீ செல்லும் கார்

பைசா செலவில்லாமல் 50 கிமீ செல்லும் கார்

ஒத்த பைசா கூட செலவில்லாமல் ஒரு நாளைக்கு 50 கிமீ வரை செல்லும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் காரை பெங்களூரை சேர்ந்த இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.

பெங்களூரை சேர்ந்தவர் சையது முசாக்கீர் அகமது. ஆட்டோமொபைல் ஆர்வலரான இவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில்தான், எரிபொருள் பிரச்னையால் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் பிரச்னைகளை கருத்தில்க்கொண்டு புதிய காரை வடிவமைக்க முடிவு செய்தார்.


கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர்


அதன்படி, சுற்றுச் சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாத, முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் காரை வெற்றிகரமாக வடிவமைதத்து அசத்தியுள்ளார். இது கான்செப்ட் மாடல் என்றாலும், ஸ்பான்சர் கிடைத்தால் வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
அலெக்ஸ் நாளை விடுவிக்கப்படுவார்

இதுகுறித்து சையது முஜாகீர் அகமது கூறுகையில்," இந்த காரில் முன்பக்க பேனட், கூரை மற்றும் பின்பகுதியில் மூன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பகல் வேளையில் சூரிய சக்தியிலிருந்து பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், ஒரு நாளைக்கு 50 கிமீ தூரம் ஒத்த பைசா செலவில்லாமல் செல்ல முடியும்.
ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை மேம்படுத்தி வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த காரை பிரபலப்படுத்துவதற்காக பெங்களூருவிலிருந்து கொச்சி வரை 600 கிமீ தூரம் சென்று வந்துள்ளேன்.
விஜி,   சில்க் ஸ்மிதாவாக மாறிய கதை

விஜி, சில்க் ஸ்மிதாவாக மாறிய கதை

சில்க் ஸ்மிதாவின் கதையைத் தழுவி தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை எடுத்தார்கள். இப்போது அதை தமிழ், கன்னடம், பெங்காலி என ஒவ்வொரு மொழியாக ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சில்க்கின் நிஜக் கதையை நாங்கள் படமாக்கப் போகிறோம் என்று கூறி மலையாளத்தில் சிலர் கிளம்பியுள்ளனர்.

அலெக்ஸ் நாளை விடுவிக்கப்படுவார்

புரொபைல் என்று இப்படத்திற்கு இப்போதைக்குப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் கதை சில்க் ஸ்மிதாவின் நிஜக் கதைதான் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.


மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்ப்த்டுளால் நித்தியானந்தா பத்து நாட்களுக்குள் நீக்க வேண்டும்


விஜயலட்சுமி எப்படி சில்க் ஸ்மிதாவாக மாறினார், எப்படி தென்னிந்தியத் திரையுலகை தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் அரசாண்டார் என்பதை இன்ச் பை இன்ச்சாக சொல்லப் போவதாக கூறுகிறார்கள்.சில்க் ஸ்மிதாவின் நிஜக் கதை படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப் போவதாக ஒரு தகவல் கூறுகிறது.

சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிக்க ரிச்சா கங்கோபாத்யாயாவை அணுகியுள்ளனராம்.


வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு படம் லீலை

வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு படம் லீலை


நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த சின்னப் படம். ஆனால் ரசிக்க வைக்கும் முயற்சி. ஆள்மாறாட்டக் கதைதான். ஆனால் சொன்ன விதம், பார்ப்பவர் முகத்தில் புன்னகையைத் தவழ விடுகிறது.


மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்ப்த்டுளால் நித்தியானந்தா பத்து நாட்களுக்குள் நீக்க வேண்டும்


படிக்கும் காலத்தில் கருணை மலர் என்ற பெண்ணின் முகத்தைப் பார்க்காமலே போனில் கடலைப் போட்டே லவ்வாகிறான் ஹீரோ. ஆனால் ஒரு நாள் இருவருக்கும் போனில் சண்டையாக, முகத்தைப் பார்க்காமலேயே பிரிந்தும் விடுகிறார்கள்.


ஆரணி சிவன் கோவில் தேர் சரிவு: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்

 
சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிறுவனத்தின் வேறு வேறு தளங்களில் இருவருக்கும் வேலை. எதேச்சையாக ஒரு போன் காலில் மீண்டும் கருணை மலருடன் பேசும் வாய்ப்பு ஹீரோவுக்கு. ஆனால் அந்த வாய்ப்பும் சண்டையில் முடிகிறது. ஒரு நாள் தன் காதலி யார் என்பதைப் பார்த்து விடுகிறான். தன் உண்மைப் பெயரில் போய் பேசினால் சண்டை தொடரும் என்று நினைத்து, தன் பெயரை மாற்றிக் கொண்டு அவளிடம் அறிமுகமாகிறான். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஹீரோ உண்மையை சொன்னானா????
அதற்கு பொருத்தமானவர் ஸ்ரீ ரம்யா:இயக்குனர்  இ.வி.கணேஷ் பாபு

அதற்கு பொருத்தமானவர் ஸ்ரீ ரம்யா:இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு

தேசிய விருது பெற்ற சதெலுங்கு படத்தில் மொட்டையடித்து நடித்த கதாநாயகி தற்போது தமிழ் படத்தில் நடிக்கிறார்.
1940லோ ஒக்க கிராமம் என்ற படத்தில் நடித்த கதாநாயகி ஸ்ரீ ரம்யா. முதல்படமான இதில் மொட்டையடித்து நடித்தார்.

அரசியலுக்காக கிரிக்கெட்டை விட்டுவிட மாட்டேன், கிரிக்கெட்தான் வாழ்க்கை: சச்சின்


ஆந்திர அரசின் நந்தி விருதையும் வென்றார். இவர் யமுனா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இ.வி.கணேஷ் பாபு இயக்குகிறார்.

இவர் கூறியதாவது, அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தங்களுக்கு உடன்பாடு இல்லாத வேலைகளை செய்ய தயாராகி விடுகிறார்கள். அவர்களை ஒரு கூட்டம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர்அவர்களை நல்வழிபடுத்த முயல்கிறான் ஒருவன். அதில் வெற்றி கிடைத்ததா என்பது கதை. சத்யா கதாநாயகன். ஸ்ரீ ரம்யா கதாநாயகி.

இவர் 1940லோ ஒக்க கிராமம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மொட்டை போட்டுக்கொண்டு கனமான வேடத்தில் நடித்தார்.
மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்ப்த்டுளால் நித்தியானந்தா பத்து நாட்களுக்குள் நீக்க வேண்டும்


அப்படியொரு கனமான வேடம் இதில் அமைந்தது. அதற்கு பொருத்தமானவர் ஸ்ரீ ரம்யா என்பதால் தெரிவு செய்தேன். வினோதினி, நரேன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
101 ஆண்டு பழமை வாய்ந்த பாலம் திருட்டு

101 ஆண்டு பழமை வாய்ந்த பாலம் திருட்டு

செக் குடியரசு நாட்டின் கர்லோவிவெய்ரி மாகாணத்தில் ஸ்லாவ்கோவ் நகரில் ஆற்றின் குறுக்கே இரும்பு ரயில்வே பாலம் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக இருந்துள்ளது.------------------------------------------------------
அலெக்ஸ் நாளை விடுவிக்கப்படுவார்
 ------------------------------------------------------
101 ஆண்டுகள்(1901) பழமை வாய்ந்த இந்த இரும்பு பாலத்தில் 200 மீட்டர்  ரயில்வே தண்டவாளமும் உள்ளது. இதனை சில விஷமிகள் கிரேன் மூலம் பெயர்த்து எடுத்து திருடிச் சென்றுள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------

கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர்


---------------------------------------------------------------------------------------------------------
பட்டப் பகலில் திருடிக் கொண்டிருந்ததை பார்த்த பொலிசார் விசாரித்த போது, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்று தான் இதனை எடுத்துச் செல்லவதாக போலி ஒப்பந்த ஆவணம் ஒன்றை காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருடு போன இரும்பு பாலத்தின் எடை 10 டன் எனவும், இதன் மதிப்பு 6 ஆயிரம் மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
என்னை வைத்து படம் எடுக்க தைரியம் வேண்டும்

என்னை வைத்து படம் எடுக்க தைரியம் வேண்டும்

துணிந்தவர்களால் மட்டுமே என்னை வைத்து படம் எடுக்க முடியும் என்று இயக்குனரும், நடிகருமான சீமான் கூறியுள்ளார்.

6ம் கட்ட பேச்சுவார்த்தையை என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் புறக்கணித்தனர்; கரண்ட் கிடைப்பதில் சிக்கல்

கண்டுபிடி கண்டுபிடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் டைரக்டர் சீமான் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.  அடடா என்று துவங்கும் அந்த பாடல் கேட்கும் போதே ஆட்டம் போட வைத்தது. பாடல் பார்க்கும் போதே ஒரு கல்யாண வீட்டின் அமர்க்களம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.


அரசியலுக்காக கிரிக்கெட்டை விட்டுவிட மாட்டேன், கிரிக்கெட்தான் வாழ்க்கை: சச்சின்‘பாடல் மட்டுமல்ல… படம் முழுக்க இதே கலகலப்பு இருக்கும்…’  என்றார் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் பாலசேகரன். கல்யாண வீட்டில் சம்பவம் ஒன்று நடந்துவிட அதைக் கண்டுபிடிக்கும் ஆய்வாளராக வருகிறார் சீமான். இது திரைக்கதையில் புது முயற்சி எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர், பெரும்பாலான காட்சிகளை திருமண மண்டபம் ஒன்றில் எடுத்துள்ளனர். கண்டுபிடி கண்டுபிடி படத்தில் முரளி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்னும் புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.

நீண்ட ஆயுள் வேண்டுமா? இத படிங்க

நீண்ட ஆயுள் வேண்டுமா? இத படிங்க

முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது.மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்ப்த்டுளால் நித்தியானந்தா பத்து நாட்களுக்குள் நீக்க வேண்டும்

இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.

அலெக்ஸ் நாளை விடுவிக்கப்படுவார்

அந்நாட்டில் திருமணமானவர்களில் 5ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை என்று கண்டறியப்பட்டது. அவர்கள் அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. (திருமணத்திற்கு முன்பு அதிகம் முத்தம் கொடுத்து போரடித்திருக்கும்)

 ஆரணி சிவன் கோவில் தேர் சரிவு: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்

முத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் நன்மை குறித்து தெரிவிக்கவும் பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்தின் இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.
பின்லேடன் முதலாமாண்டு நினைவு நாள்

பின்லேடன் முதலாமாண்டு நினைவு நாள்

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அமெரிக்கப் படையினர், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து அமெரிக்கா முழுவதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தா தேர்வுக்கு எதிர்ப்பு


ஒசாமா பின் முகம்மது பின் அவாத் பின்லேடன் என்ற இயற்பெயரைக் கொண்ட பின்லேடன் உலகையே உலுக்கிய மிகப் பெரிய தீவிரவாதி. அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய பின்லேடன், நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே அதிர வைத்த நபர்.

அல் கொய்தா அமைப்பை உருவாக்கி அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பின்லேடன், அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவரான பின்லேடன், அமெரிக்காவின் எப்பிஐயின் முக்கிய 10 தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர்.


நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு முன்பு வரை பின்லேடன் குறித்து அதிகம் கவலைப்படாமல்தான் இருந்து வந்தது அமெரிக்கா. ஆனால் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனை பிடிப்பதற்காக பெரும் பொருட் செலவில் தீவிரமாக தேடி வந்தது.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகே அபோத்தாபாத் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தனது மனைவிகள், பிள்ளைகளுடன் பின்லேடன் பதுங்கியிருப்பது அமெரிக்காவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து 2011ம் ஆண்டு மே 2ம் தேதி அதிகாலையில் அங்கு புகுந்த அமெரிக்க கடற்படை சீல் பிரிவு கமாண்டோக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பின்லேடனை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.

இந்த அதிரடித் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் நேரில் பார்த்தனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின்லேடன் கொலை சம்பவத்தை வீடியோ திரையில் பார்த்தபடி ஒபாமா, ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பரபரப்பான முகங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூவர் தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்கு மாற்றப்பட்டது குறித்து வைகோகருத்து


நாளையுடன் பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. லேடனைக் கொன்றதும் உடலைக் கைப்பற்றி எடுத்துச் சென்ற அமெரிக்க வீரர்கள் பின்னர் அதை கடலில் வீசி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படத்தையோ, வீடியோவையோ அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை. அதை வெளியிடவும் மாட்டோம் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவு நாளைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி கமாண்டோக்கள் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, May 1, 2012

ஸ்லிமாக இருக்க வேண்டுமா?

ஸ்லிமாக இருக்க வேண்டுமா?

தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கனவே நாம் அறிந்த விடயம்.
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹோர்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது.
இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது.
இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். இதுகுறித்து ஆய்வாளர் ஜுலி லவ்குரோவ் கூறுகையில், இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும், முடிவு திருப்திகரமாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்று முதல்கட்டமாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.
‘சமர்’ படத்தின்  கதை

‘சமர்’ படத்தின் கதை

விஷால் நடிக்கும் ‘சமரன்’ பட டைட்டில் ‘சமர்’ என மாற்றப்பட்டுள்ளது.

விஷால், த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும்  ‘சமர்’ படத்தில் புது மாதிரியான கமெர்சியல்  விஷயங்கள்  இடம்பெறாது என்று தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை இயக்குனர் திரு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் முதன் முறையாக விஷாலுடன் திரிஷா இணைகிறார். இரண்டாவது நாயகியாக அனன்யாவும் நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.  

படத்தின்  கதை:  

யாரோ ஒருவரால் நம் அனைவருடைய வாழ்க்கையும் வடிவமைக்கப்படுகிறது. எந்த விசயமும் தானாக நடக்கவில்லை. யாரோ நடக்க வைக்கிறார்கள். இதுதான் சமரன் படத்தோட திரைக்கதை ஆகும். ஒருவர் வாழ்க்கையை வேறு ஒருவர் 'ரிமோட் கண்ட்ரோலில்' இயக்கினால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யம்தான் இந்த 'சமரன்' படம்.கமெர்சியல் படமாக இல்லாமல், புது மாதிரியான விடயங்களை வைத்து சமரன் படத்தை இயக்கி வருகிறேன் என்று இயக்குனர் திரு கூறியுள்ளார்.


பொறுப்பான அம்மாவாக்கிய உலக அழகி

பொறுப்பான அம்மாவாக்கிய உலக அழகி

விளம்பர படம், விழாக்களுக்கு வெளியில் செல்லும் ஐஸ்வர்யா ராய் சில மணி நேரத்திலேயே வீடு திரும்பி குழந்தையை கவனித்துக் கொள்ள தவறுவதில்லையாம். கடந்த வாரம் 5வது ஆண்டு திருமண நாளையொட்டி பிரன்ட்ஸுகளுக்கு பார்ட்டி கொடுத்த ஐஸ்அபிஷேக் ஜோடி இரண்டு மணிநேரத்திற்குள் வீடு திரும்பி விட்டார்களாம்.
எனக்கு மும்பை முகவரி தேவைப்படுகிறது

எனக்கு மும்பை முகவரி தேவைப்படுகிறது

அசினை அடுத்து இலியானாவும் மும்பையில் குடியேறுகிறார். ‘கஜினி' இந்தி ரீமேக்கில் நடிக்க மும்பை சென்றார் அசின். அங்கு மார்க்கெட் சூடு பிடிக்கவே சொந்தமாக பங்களா வாங்கி மும்பையில் குடியேறிவிட்டார். அவரைப்போல் இந்தியில் ‘பர்பிÕ படத்தில் நடிக்க மும்பை சென்றிருக்கிறார் இலியானா. நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார். இது அவருக்கு வசதியாக அமையவில்லை. இதையடுத்து மும்பையில் சொந்தமாக பங்களா வாங்க முடிவு செய்தார்.

Ôபர்பிÕ ஷூட்டிங் முடித்துவிட்டு கோடைகால விடுமுறைக்காக கோவா செல்கிறார் இலியானா. ஜூன் மாதம் மீண்டும் மும்பை திரும்புகிறார். இதற்கிடையில் ஒரு வார பயணமாக துபாய் செல்கிறார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்துக்கு அருகிலேயே வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த பங்களா ஸ்டுடியோக்களுக்கு சென்றுவர ஏதுவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு வீடு புரோக்கரிடம் கூறி இருக்கிறார்.

‘'பாலிவுட் படங்களில் நடிப்பதால் எனக்கு மும்பை முகவரி தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் டோலிவுட், பாலிவுட் இரு மொழி படங்களிலும் பேலன்ஸ் செய்து நடிக்க முடியும். இதனால் அங்கு வீடு தேடுகிறேன். விரைவில் நல்ல வீடு கிடைத்துவிடும்ÕÕ என்றார் இலியானா.
விஸ்வரூபம்: புதிய தகவல்கள்

விஸ்வரூபம்: புதிய தகவல்கள்

உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் ஸ்டில் மற்றும் 30 வினாடிகள் கொண்ட ட்ரைலர் இன்று வெளியானது.
இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதன் எழுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது.
இந்த ட்ரைலரை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.

இந்த படத்தில் கமலஹாசன் தானே இயக்கி தானே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். சிறப்பு வேடத்தில் சேகர் கபூர் நடிக்கிறார்.
படத்தை இந்தி தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட இருப்பதால் நடிகர் நடிகைகளை கமல் இரு மொழிகளிலும் தயாராகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தில் கமல் ஆப்கான் தீவிரவாதியாக நடிக்கிறார். கமல் ஒருமுறை மேடையில் பேசும் போது “உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தலைதூக்கும்”  என்று உணர்ச்சிபட கூறினார். 

சன் பிக்சர்ஸை போல ஜெயா தொலைக்காட்சி சார்பில் ஜெயா பிக்சர்ஸ் என்ற பெய‌ரில் தயா‌ரிப்பு நிறுவனம் தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முதல் விநியோகம் கமலின் விஸ்வரூபம் எனவும் கதைகள் உலவுகின்றன.
சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது

சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது

தமிழில் சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காஜல் அகர்வால் நடித்துள்ள படம் தாதா.


இந்த படம் தமிழில் டைகர் விஸ்வா என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த கமெர்ஷியல் படத்தில் காஜலகர்வால் மற்றும் சமிக்‌ஷா என இரு ஹீரோயின்கள்.  ஒரு பாடல் காட்சியில் காஜல் அகர்வால் நடனமாடிக்கொண்டிருக்கும் போது குணிந்து ஆடும் சமயத்தில் கொஞ்சம்(!) கவர்ச்சியாக இருக்கும்.

அதனால் இரு நடிகைகளும் ரசிகர்களை கவர்வதற்காக போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டி நடித்தீர்களா?என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதிலளித்த காஜல் அகர்வால் “ தாதா படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை என்னால் மறக்கவே முடியாது.  ஒரு கமெர்ஷியல் படத்தில் கவர்ச்சியாக நடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

அது படத்திற்கு முக்கியமானதும் கூட. இரு நடிகைஅகள் நடித்தால் போட்டி போட்டு தான் நடிக்க வேண்டுமா. நான் இரு 3 ஹீரோயின்களுடன் இணைந்து கூடத் தான் நடித்துள்ளேன்.

கவர்ச்சி கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறில்லை. இது அனைத்து மொழி சினிமாவிற்கும் பொருந்தும்” என கூறினார்.

Monday, April 30, 2012

நத்தை மசாஜ் செய்து முகத்தை பொலிவாக்கலாம்

நத்தை மசாஜ் செய்து முகத்தை பொலிவாக்கலாம்

முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள நம்மில் அனேகர் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. குறிப்பாக அதிக பணம் செலவழிக்கக் கூட தயங்குவதில்லை.
இப்போது இதற்கான புதிய முறையாக சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளில் நத்தை மசாஜ் மிகவும் பிரபலமாகி வருகின்றது.
ரஷ்யாவில் கிராசனோயஷா நகரில் இதற்கென்ற பிரத்யோகமான நத்தை மசாஜ் கிளப் உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை படுக்க வைத்து அவர்களின் முகங்களில் சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால் முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து முகம் புதுப் பொலிவு பெறும் என்கின்றனர்.
நான் பெரிய அழகி கிடையாது: கவர்ச்சி நடிகை

நான் பெரிய அழகி கிடையாது: கவர்ச்சி நடிகை

வில்லு, கந்தசாமி போன்ற தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் நடித்தவர் முமைத்கான். இது பற்றி அவர் கூறுகையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மும்பை திரும்பி இருக்கிறேன். காய்ச்சல் மற்றும் சிறு விபத்து காரணமாக சில நாட்கள் ஓய்வு எடுத்தேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். வெளியூர்களில் இருக்கும்போது எங்காவது சென்றால் என்னைப் பார்க்க கூட்டம் கூடிவிடுவார்கள். மும்பையில் அப்படி கிடையாது. நான் தனியாக, சுதந்திரமாக போகமுடியும். 13 வயது இருக்கும்போதே நடன குழுவில் சேர்ந்து நடனம் ஆடத் தொடங்விட்டேன். 17வது வயதில் முன்னாபாய் படத்தில் நடித்தேன். அதற்காக என் பெற்றோரிடம் நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ் வாங்கினார் இயக்குனர். இதுவரை என்னிடம் வந்த எல்லா படங்களையும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். இனிமேல் மனதுக்கு பிடிக்கும் நல்ல ஸ்கிரிப்ட்டில் மட்டுமே நடிப்பேன். நான் சாதாரண பெண்தான், பெரிய அழகி கிடையாது. ஆனால் என்னைப் பார்ப்பவர்கள் நீங்கள் ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்கிறார்கள். அது மேக்கப் செய்யும் மாயம், என் கண்கள்தான் மிகவும் கவர்ச்சியானது எனக் கூறினார்.
நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகள் பெற்ற தமிழ் படம்

நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகள் பெற்ற தமிழ் படம்

3வது நோர்வே திரைப்பட விழாவில் சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்திற்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.
தமிழ் படங்களுக்கு என்று உலகளவில் நடத்தப்படும் ஒரே திருவிழாவான நார்வே திரைப்பட விழா கடந்த 25 முதல் 29-ம் வரை நோர்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்து வந்தது.

விழாவில் 10 படங்களும், 20 குறும்படங்களும் தெரிவாகி லொரன்ஸ்கூவில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் 20 குறும்படங்களில் 5 குறும்படங்களுக்கு விருதுகள் 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விழாவின் இறுதிநாளில் பெரிய படங்களுக்கு விருதுகளும், வண்ண‌மயமான கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்த விழாவை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில், தமிழ் சினிமாவுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த நடிகருக்கான விருது அவன் இவன் படத்தில் நடித்த விஷாலுக்கும், போராளி படத்தில் நடித்த சசிகுமாருக்கும் கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான விருது மயக்கம் என்ன படத்திற்காக ரிச்சா கங்கோபாத்யாயேக்கு கிடைத்தது. மேலும் வாகை சூட வா படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருது கிடைத்தது.
நிறைய கிளாமர் காட்சிகள் வைக்க வற்புறுத்தும் தமிழ் நடிகை

நிறைய கிளாமர் காட்சிகள் வைக்க வற்புறுத்தும் தமிழ் நடிகை

கல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விஜய் தான் உருவாக்கியுள்ள கில்லி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்யப் போகிறார். இதுதான் விஜய் தயாரிப்பில் உருவாகும் முதல் படம். இபப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரீமா சென் வருகிறார்.

இந்த கேரக்டர் தனக்கு தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரீமா சென். இப்படத்தின் கதாநாயகி ரீமா சென் அல்ல என்றாலும் கூட படத்தின் கதையோட்டத்தில் ரீமாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் இந்த கேரக்டரிலும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ள ரீமா, அதற்கேற்றார்போல கிளாமரான முறையில் கேரக்டரை வடிவமைக்குமாறு இயக்குநரிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளாராம்.
சேலை கட்டினா பார்க்க மாட்டாங்க, கழற்றிப் போட்டாத்தான் பேசுவாங்க

சேலை கட்டினா பார்க்க மாட்டாங்க, கழற்றிப் போட்டாத்தான் பேசுவாங்க

அடேங்கப்பா, சில்க் ஸ்மிதாவுக்கு வந்த கிராக்கியைப் பாருங்கள். உயிருடன் இருந்தபோதும் அவருக்கு கிராக்கி, இப்போது மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் கூட கிராக்கி சற்றும் குறையவில்லை. நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சில்க் ஸ்மிதாவின் கதையைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியில் வெளியான டர்ட்டி பிக்சர்ஸ் படம் ஓடிய ஓட்டம்தான் இத்தனைக்கும் காரணம். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவுள்ள நிலையில் அடுத்து பெங்காலியிலும் டர்ட்டி பிக்சர்ஸை கொண்டு போகிறார்களாம்.

பெங்காலியில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக அதாவது சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கப் போவது கவர்ச்சி களேபர அழகி ராக்கி சாவந்த். சதாப்தி ராய் படத்தை இயக்குகிறார். தபஸ் பால் தயாரிக்கிறார்.இந்தப் படம் குறித்து ராக்கி கூறுகையில், எங்க சமூகத்துப் பெண்களின் (அதாவது குத்துப் பாட்டுகளுக்கு ஆடும் அழகிகளாம்) பிரதிநிதியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். ஆனால் ஒரிஜினல் குத்தாட்ட அழகியே ஹீரோயினாக நடித்தால்தான் அது பொருத்தமாக அமையும். எனவே அந்த வகையில் வித்யாபாலனை நான் நிச்சயம் பீட் செய்வேன், கலக்கலாக நடிப்பேன் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

போல்டான காட்சிகளிலும், படுக்கை அறைக் காட்சிகளிலும் நடிக்க ஆவலோடு காததுள்ளேன். அதற்கெல்லாம் நான் தயங்கவே மாட்டேன். அட நீண்ட நேரம் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றாலும் கூட எனக்குக் கவலை இல்லை. காட்சி படு சூப்பராக வரும், பாருங்கள என்றார்.
விரைவில் தனக்கு திருமணம் நடக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மைதான்

விரைவில் தனக்கு திருமணம் நடக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மைதான்

தென்னகத்தில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து, பின்னர் பாலிவுட்டிலும் நடித்தவர் ஸ்ரேயா. இப்போது இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும், அந்த அளவு பிஸியாக இல்லை. எனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது.

இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "திருமண ஏற்பாடுகள் நடப்பது உண்மைதான். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அதது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். சினிமா உலகை நன்கு புரிந்த, தெளிவானவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அதனால் முதலிலேயே தீர ஆராய்ந்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்," என்றார்.