Thursday, May 10, 2012

பல்லி மற்றும் ஓணான்களுடன் பயணம் செய்தவருக்கு அபராதம்

பல்லி மற்றும் ஓணான்களுடன் பயணம் செய்தவருக்கு அபராதம்

ஜெர்மனிலிருந்து ஓமன் நாட்டுக்கு சென்று விட்டு மூனிச் நகருக்கு திரும்பினார்.
இவரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, மதிய உணவுக்காக 49 பல்லி மற்றும் ஓணான்களை வைத்திருந்தது தெரியவந்தது.

சமைப்பதற்காக தான் இதை கொண்டு வந்தேன் என்பதை நிரூபிப்பதற்காக, இவர் ஒரு ஓணானின் தலையை கடித்து சாப்பிட்டார்.
பின்னர் இதை ஒப்புக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், விமானத்தில் இதுபோன்ற உயிரினங்களை கொண்டு வரக்கூடாது என்ற தடை உள்ளதால், அந்த நபருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டும் படி கூறினர்.

Wednesday, May 9, 2012

திருடனின் கை விரலை கடித்து துண்டாக்கிய பெண்

திருடனின் கை விரலை கடித்து துண்டாக்கிய பெண்

ஜப்பானின் சப்போரோ நகரைச் சேர்ந்த 59 வயது பெண், கடைக்குச் சென்று விட்டு, தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.


அப்போது சைக்கிளின் வந்த ஒரு கொள்ளையன் இவரது பையை பறித்துச் சென்று விட்டான். உடனடியாக தன் வீட்டுக்குச் சென்று டூவீலரை எடுத்து கொண்டு கொள்ளையனை துரத்திச் சென்று பிடித்து அவனிடமிருந்து பையை மீட்க முயன்றார்.

ஆனால் கொள்ளையன் பையைக் கொடுக்காததால் ஆத்திரமுற்ற இந்தப் பெண், அவனது வலக்கையின் ஒரு விரலைக் கடித்துத் துப்பினார்.

வலி பொறுக்க முடியாத கொள்ளையன் பையை விட்டு விட்டு ஓடிவிட்டான். ஜப்பானின் ஒரு சில பகுதிகளில் கொள்ளையர்களின் கை விரலைத் துண்டித்து தண்டனை கொடுப்பது ஒரு மரபாக இருந்தது. தற்போது இந்தப் பெண் அந்த தண்டனையை தற்செயலாக கத்தியின்றி நிறைவேற்றியுள்ளார்.

Tuesday, May 8, 2012

பச்சை குத்தியதை அழித்து இருக்கிறேனா??

பச்சை குத்தியதை அழித்து இருக்கிறேனா??

தன் கையில் பிரபு தேவா என குத்தப்பட்டுள்ள பச்சை (டாட்டூ) யை அழிக்கத்தான் பாங்காக் போனார் நயன்தாரா' என்று வந்த செய்திகளைக் கண்டு நயன்தாரா கொதிப்பில் உள்ளார்.என் கையில் குத்தி இருந்த பச்சையை அழிக்க வேண்டுமானால் நான் ஏன் பாங்காக் போக வேண்டும். அதை இந்தியாவிலேயே எளிதாக அழித்து விட முடியும். உண்மையை விசாரித்து அறியாமல் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் பச்சை குத்தி இருந்ததை அழித்து இருக்கிறேனா என்று நேரில் வந்து பார்க்கலாம்.
தானே முன்வந்து கவர்ச்சியாக நடித்த நடிகை

தானே முன்வந்து கவர்ச்சியாக நடித்த நடிகை

தெலுங்கில் தாதா என்ற படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், அந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு நாயகியான சமீக்ஷாவை பீட் செய்வதற்காக கூடுதல் கவர்ச்சி காட்டி கலங்கடித்துள்ளாராம்.
இந்தப் படத்தை தற்போது தமிழிலும் டைகர் விஸ்வா என்ற டிப்பிகல் தெலுங்குப் பட டப்பிங் பெயருடன் களம் இறக்குகின்றனர்.
படத்தில் காஜலைத் தவிர சமீக்ஷாவும் ஒரு நாயகியாக நடித்துள்ளார். இதனால் கவர்ச்சியில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பட்டையைக் கிளப்பியுள்ளனர். அதிலும் தன்னை விட சமீக்ஷாவுக்குப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக வாலன்டியராக தானே முன்வந்து கவர்ச்சியை கூடுதலாக வழங்கி இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் காஜல்.
மந்திரவாதிகளுக்கு 80 லட்ச பரிசு

மந்திரவாதிகளுக்கு 80 லட்ச பரிசு

இந்தியாவைச் சேர்ந்தவர்களும், ஆப்ரிக்கா மற்றும் கரீபிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரிட்டனுக்கு வந்து, "அந்த நோயை குணப்படுத்துகிறேன்; இந்த நோயை குணப்படுத்துகிறேன்;


உங்கள் கவலையையெல்லாம் போக்குகிறேன்' எனக் கூறி, ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றனர்.இவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி, ஏராளமாக சம்பாதிக்கின்றனர். ஆவி மற்றும் மாந்திரீகங்கள் மூலம் சிகிச்சை அளிப்பதாகக் கூறும் நபர்கள், இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அந்த நபர்களுக்கு 80 லட்ச ரூபாய் பரிசு அளிக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்பட்ட மந்திரவாதிகள் எங்களை அணுகி, தங்கள் வித்தையைக் காட்டி இந்த பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று பிரிட்டனில் உள்ள ஆசிய பகுத்தறிவு அமைப்பின் நிர்வாகி சச்தேவ் விர்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Monday, May 7, 2012

முத்தம் காட்சியில் நடிக்க அம்மா பர்மிஷன் கேட்ட நடிகை

முத்தம் காட்சியில் நடிக்க அம்மா பர்மிஷன் கேட்ட நடிகை

முத்த காட்சியில் நடிக்க மறுத்து ஹீரோயின் பிடிவாதம் பிடித்ததால் ஷூட்டிங் தடைபட்டது. இது பற்றி ‘அவன் அப்படித்தான்' பட இயக்குனர் எஸ்.பி.ராஜா கூறியதாவது: குண்டான உருவத்துடன் இருப்பதால் தாழ்வு மனப்பான்மையுடன் ஒதுங்கி வாழ்கிறார் கல்லூரி மாணவர். எப்படியாவது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறார். யாரும் காதலிக்கவில்லை. அவரது எண்ணம் ஈடேறுகிறதா என்பது கதை இதில் ஹீரோ ஜெகன் வைகுந்தா, ஹீரோயின் டெல்லா ராஜ். கிளைமாக்ஸ் காட்சியில் உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியில் நடிக்க கேட்டபோது, டெல்லா மறுத்துவிட்டார். அவரது அம்மா பர்மிஷன் கொடுத்தால் நடிப்பதாக கூறினார்.


அவரிடம் கேட்டபோது, ‘என் மகள் இப்படியெல்லாம் நடிக்க மாட்டாள்Õ என்று கூறி மகளை அறைக்குள் அழைத்து சென்று கதவை மூடிக்கொண்டார். இதனால் ஷூட்டிங் தடைபட்டது. நீண்ட கெஞ்சலுக்கு பிறகு நடிக்க வந்தார். ஆனால் ஹீரோ ஜெகன் பதற்றத்தில் சொதப்பிவிட்டார். இக்காட்சி மனோதத்துவ ரீதியாக படமாக்கப்பட்டிருக்கிறது. 3 டேக்குக்கு மேல் நடிக்க முடியாது என்று ஹீரோயின் கூறியதால் எடுத்த வரை போதும் என்று காட்சியை முடித்தேன். இதில் கருணா, ராஷா மற்றொரு ஜோடி. இந்த 4 கேரக்டர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கிறது.
மிட்-நைட் பார்ட்டியில் நடனமாடிய த்மிழ் நடிகை

மிட்-நைட் பார்ட்டியில் நடனமாடிய த்மிழ் நடிகை

கோடை வெயிலை சமாளிக்கவும், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடவும் நடிகை த்ரிஷா தாய்லாந்துக்கு அருகில் உள்ள ’கோஹ்சாமுய்’ தீவிற்கு சென்றிருந்தார். அந்த தீவில் உள்ள பீச் ரெசார்ட்டில் த்ரிஷா தன் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
அந்த மிட்-நைட் பார்ட்டியில் த்ரிஷா தன் நண்பர்களுடன் நடனமாடியும் இருக்கிறார். கோடை சுற்றுல்லாவை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பிய த்ரிஷா “கோஹ்சாமுய் தீவில் நான் கழித்த இந்த விடுமுறை மறக்கமுடியாதது.


பிறந்தநாளை நண்பர்களுடன் பிரமாதமாக கொண்டாடிடேன். மனது அமைதியாக இருக்கிறது. வரும் வருடம் சிறந்த வருடமாக அமைத்துக் கொள்வேன். கடமை அழைக்கிறது முதலில் சமர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறேன். பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.

த்ரிஷாவின் பிறந்தநாள் பரிசாக புதிய ரக மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றை த்ரிஷாவே வாங்கியுள்ளார்.
குண்டு உடல் கொண்டவர்கள் சுறு சுறுப்பாக இருக்க மாட்டார்களா?

குண்டு உடல் கொண்டவர்கள் சுறு சுறுப்பாக இருக்க மாட்டார்களா?

குண்டாக இருக்கும் பெண்களுக்கு வேலை கொடுப்பதிலும், சம்பளம் கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில், வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்ட புகைப்படத்துடனான பெண்களின் சுய விபர குறிப்புகள் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பணி வழங்கும் நிறுவனங்கள் குண்டு உடலைப்பு கொண்ட பெண்களின் ரெசுயூம்களின் மீது பாரபட்சம் பார்ப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, விண்ணப்பிப்பவரின் புகைப்படங்கள் இருவிதமாக அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் தனது முந்தைய புகைப்படத்துடன் ஒரு விண்ணப்பமும், அறுவை சிகிச்சைப்பிறகான புகைப்படத்துடன் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டது.

அதில், குண்டான உருவம் கொண்ட பெண்களுக்கு வேலைக்கு தேர்வு செய்வதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடித்த கேரக்டரிலேயே நடிக்க விரும்ப விரும்பவில்லை"ரிச்சா

நடித்த கேரக்டரிலேயே நடிக்க விரும்ப விரும்பவில்லை"ரிச்சா

தமிழில் சிறந்த கதையை எதிர்பார்த்திருப்பதாக, ரிச்சா கங்கோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில், தனுஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் என்னை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன.


இந்தப் பட ஷூட்டிங்கின் போது சிம்புவும், தனுஷும் தமிழ் பேசுவதற்கு உதவி செய்தனர். இருவரும் பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்கள். இருவருடனும் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.
இப்போது எனது தாய்மொழியான பெங்காலியில் 'பிக்ரம் சிங்கா' படத்தில் நடித்துள்ளேன். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். பெங்காலிக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தாய்மொழியில் நடிப்பது எப்போதும் சுகமானது.
தெலுங்கில் பிரபாஸூடன் 'வாராதி' என்ற படத்தில் நடித்துவருகிறேன். தமிழில் அடுத்த படம் என்ன என்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருகிறேன். தமிழிலும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். நடித்த கேரக்டரிலேயே நடிக்க எனக்கு உடன்பாடில்லை. இதுவரை எட்டு கதைகள் கேட்டேன். எனக்கு திருப்தியாக இல்லாததால் நிராகரித்தேன்.
அஜீத்வுடன் சம்பளம் இல்லாமல் நடிக்க தயார்

அஜீத்வுடன் சம்பளம் இல்லாமல் நடிக்க தயார்


அஜீத் குமாருடன் நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி.ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஹீரோவுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது 'தல' கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார். அது மட்டுமல்ல அஜீத் கூட நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார்.
வழுக்கை தலையில் முடி முளைக்கலாம்

வழுக்கை தலையில் முடி முளைக்கலாம்


உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவிகித ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர், மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, டென்ஷன், மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் ஸ்டெம்செல் உதவியுடன் வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தில் உள்ள சுஜி அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
எலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. ஸ்டெம்செல்லில் இருந்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக்கிள் எனப்படும் பகுதிப் பொருள் மட்டும் எடுக்கப்பட்டு, வழுக்கை எலியின் தலையில் பொருத்தப்பட்டது.
இந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எலியின் தலையில் வழக்கம்போல முடி முளைப்பதாக ஆராய்ச்சி டீம் தலைவர் டகாஷி சுஜி கூறியுள்ளார்.
பாலா படத்தில் இருந்து பூஜா நீக்கம்

பாலா படத்தில் இருந்து பூஜா நீக்கம்


அவன்-இவன் படத்திற்கு பின்பு, பாலா “பரதேசி” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் அதர்வா நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

 


வேதிகாவைத் தொடர்ந்து இரண்டாம் நாயகியாக பூஜா ஒப்பந்தமானார். இந்நிலையில் திகதிகள் பிரச்சினையால் “பரதேசி” படத்திலிருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக அரவான் நாயகி தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அனிமேஷனில் கலக்க வரும்   பொம்மை நாய்கள்

அனிமேஷனில் கலக்க வரும் பொம்மை நாய்கள்

தன் குடும்பத்தில் உள்ளவர்களின் சாவுக்கு காரணமானவர்களை இருபது வயது இளைஞன் பலிவாங்குகின்றான்.அவன் எப்படி பொம்மை நாய்களை பயன்படுத்தி கொல்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் படமாக்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பொம்மை நாய்கள் வருகின்றன. இந்த பொம்மை நாய்களை 'ரிமோட் கண்ட்ரோல்' வைத்து கட்டுப்படுத்த முடியும்.

படத்தில் ஏறத்தாழ கதாநாயகர்களாக பொம்மை நாய்கள் வருகின்றன. படத்தின் பட்ஜெட் நான்கு கோடி ஆகும்.

அனிமேஷனுக்கு அதிக அளவில் செலவழித்துள்ளோம் என்று படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பாபா விக்ரம் தெரிவித்துள்ளார்.
தமன்னாவை ஒப்பந்தம் செய்ய த்ரிஷா எதிர்ப்பு

தமன்னாவை ஒப்பந்தம் செய்ய த்ரிஷா எதிர்ப்பு

என்றென்றும் புன்னகை படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவருக்கு பதிலாக பிரபல மாடல் லிசா ஹேடன் நடிக்கிறார்.


ஜீவாவுடன் த்ரிஷா முதன் முதலாக ஜோடி சேரும் படம் என்றென்றும் புன்னகை. அதில் இன்னொரு ஹீரோயின் தேவை என்று நினைத்த இயக்குனர் அகமது, தமன்னாவை தேர்வு செய்துள்ளார். இந்த செய்தி த்ரிஷா காதுக்கு எட்டவே, இந்த படத்தில் ஒரு ஹீரோயின் என்று சொல்லிவிட்டு இப்போ தமன்னாவை ஒப்பந்தம் செய்ய நினைத்தால் எப்படி. படத்தில் எனது முக்கியத்துவம் குறைந்துவிடுமே என்று மல்லுக்கு நின்றுள்ளார்.

த்ரிஷாவின் கோபத்தைப் பார்த்த இயக்குனர் சற்றே இறங்கி வந்து சமாதானம் செய்துள்ளார். சரி, சரி இன்னொரு ஹீரோயின் போட்டால் அவர் தமிழ், தெலுங்கு அல்லாத மொழிகளில் நடிப்பவராக இருக்க வேண்டும் என்று த்ரிஷா கன்டிஷன் போட்டுள்ளார். வேறு வழியின்றி இயக்குனர் தமன்னாவை எடுக்காமல் பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான லிசா ஹேடனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9 கதை

வழக்கு எண் 18/9 கதை

ஆசிட் வீச்சில் முகம் வெந்து துடித்தபடி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள் ஒரு வேலைக்காரப் பெண்ணை. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டுக்கு எதிரே நடைபாதைக் கடையில் வேலை செய்யும் இளைஞன் மீது சந்தேகம் என்கிறாள் பெண்ணின் தாய். விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையில் இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.

அப்போதுதான், அந்தப் பெண் வேலை செய்த வீட்டு எஜமானியின் மகள் வருகிறாள். வேறு ஒரு இளைஞனை விசாரிக்க வேண்டும் என அவள் புகார் கொடுக்க, விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணை வேலைக்காரிக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா என்பது கொஞ்சம் சினிமா, கொஞ்சம் Poetic Justice கலந்த க்ளைமாக்ஸ்!
 


இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.

ஹீரோவின் ப்ளாஷ்பேக் தர்மபுரியின் வறட்சி மிக்க கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மனிதர்கள், அவர்களின் துயர்மிகு வாழ்க்கை, மண்மூடி மறைந்து போகும் அவர்கள் வாழ்க்கை ஒரு கண்ணீர் அத்தியாயம்.

பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் அந்த முறுக்குக் கம்பெனி முதலாளி, நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல, அவன் பசி தீர்த்து, வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு செக்ஸ் தொழிலாளி, மெல்ல மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமி, நொடியில் குணம் மாறும் அந்த தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முதலாளி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரி... இவர்கள் அனைவரையும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்களுக்குப் பின்னாள் உள்ள கதைகள் நமக்குத் தெரிவதில்லை. காரணம் நமது மனிதாபிமானம் என்பதே ஒரு demonstration effect என்பதால்தான். அடுத்தவர் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது மனிதாபிமானங்களின் உள்ளார்ந்த நோக்கம் இல்லையா! இந்த நோக்கம் இல்லாமல் அணுகினால் நம்மாலும் வேலு, ஜோதி, சின்னசாமிகளைக் காண முடியும்!
இவர் நாயகன், அவர் நாயகி என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை இந்தப் படத்தில். காரணம், ஒரு நிமிடம் வந்து செல்லும் அந்த பஞ்சர் ஒட்டும் பாத்திரம் கூட மனசுக்குள் வந்துவிடுவதுதான். நடித்த அனைவருமே புதுமுகங்கள். ஆனால் அவர்களின் நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்துகிறது.

நடைபாதை சாப்பாட்டுக்கடையில் வேலை பார்க்கும் வேலுவாக வரும் ஸ்ரீ, வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, பணக்காரப் பையனாக வரும் மிதுன் முரளி, எஜமானி மகளாக வரும் மனீஷா நால்வரையும் பிரதான பாத்திரங்களில் ஜொலிக்க வைத்துள்ளார் இயக்குநர்
தலைப்பு சர்ச்சை விஜய்யின் துப்பாக்கி

தலைப்பு சர்ச்சை விஜய்யின் துப்பாக்கி

பல மாதங் களு க்கு  முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.
நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளர் ரவிதேவன்.
படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்' என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்......
படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்துள்ளனர்.

துப்பாக்கி டைட்டில் டிஸைனும் கிட்டத்தட்ட 'கள்ளத்துப்பாக்கி' பாணியில் உள்ளது. மே முதல் நாள் அன்று துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி போஸ்டர்கள் கோடம்பாக்கம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. அதுவும் இரண்டும் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பைக் கிளப்பியது.