Saturday, May 19, 2012

மிச்சம் வைக்க கூடாது என் முக்கி முக்கி சாப்பிட்டேன்.

மிச்சம் வைக்க கூடாது என் முக்கி முக்கி சாப்பிட்டேன்.

இங்கிலாந்தின் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் ‘கிளின் பஃபே’ என்ற சீன ரெஸ்டாரன்ட் உள்ளது. இதன் உரிமையாளர், வாடிக்கையாளர்களை கவர புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, ஓட்டலில் 20 பவுண்ட் (ரூ.1750) செலுத்திவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

விரும்பிய உணவு வகைகளை திருப்தியாக வயிறு முட்ட (பஃபே) சாப்பிடலாம். ஆனால் ஒரு நிபந்தனை. பிளேட்டில் எதையும் மிச்சம் வைக்க கூடாது. ஏதாவது மிச்சம் வைத்து விட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
பெவர்லி கிளார்க் என்ற பெண் தன் 10 வயது மகனுடன் ஓட்டலுக்கு வந்தார். சாப்பிட்டு முடித்தவுடன் பணம் செலுத்தினார். அப்போது, கூடுதலாக 20 பவுண்ட் வசூலித்தனர். அதிர்ச்சி அடைந்த பெண், அதிருப்தியுடன் ஓட்டலை விட்டு சென்றார். 

‘குழந்தைகள் எதையும் வீணாக்காமல் சாப்பிட்டனர். ஆனால், பிளேட்டில் 2 துண்டு வெங்காயம், ஒரே ஒரு இறால் வறுவலை விட்டுவிட்டனர். அதற்காக 20 பவுண்ட் அபராதம் வசூலித்தது டூ மச்’ என்று புலம்பி கொண்டே சென்றார்.
காதலித்து ஏமாற்றிவிட்டார்:  இயக்குனர் மீது இளம்பெண் புகார்

காதலித்து ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது இளம்பெண் புகார்

தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கழுகு பட இயக்குனர் மீது சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்  புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கியவர் சத்யசிவா.
ஐபிஎல்லில இன்று....

இந்தப் படத்தைத் தயாரித்த பட்டியல் சேகர் அலுவலகத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய சிவரஞ்சனி என்ற பெண்ணுக்கும் சத்யசிவாவுக்கும் காதல் ஏற்பட்டது.

சிவரஞ்சினியை திருமணம் செய்து கொள்வதாக சத்யசிவா வாக்களித்துள்ளார். ஆனால் திடீரென்று சத்யசிவா மனம் மாறி விட்டார்.

இதனால் மனமுடைந்த சிவரஞ்சினி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சத்யசிவா மீது  புகார் கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் பிரச்சனையால் விவகாரத்து அதிகரிப்பு

ஃபேஸ்புக் பிரச்சனையால் விவகாரத்து அதிகரிப்பு


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர்,  பெண் ஒருவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணந்தார். இது பெற்றோர்கள் பார்த்து வைத்து நடந்த திருமணம். அவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் விவாகரத்து கோரி ஒரங்காபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அவர் தனது மனுவில், எனது கணவர் ஃபேஸ்புக்கில் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதை திருமணமானவர் என்று மாற்ற மறுக்கிறார். அதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்குமாறு கேட்டு்க கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு விவகாரத்து ஆனவர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் ஃபேஸ்புக் பிரச்சனையால் தான் பிரிந்தனர் என்று ஒரு சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருடிய வைரத்தை விழுக்கியவர் கைது

திருடிய வைரத்தை விழுக்கியவர் கைது

கனடாவின் ஆன்டாரியோவில் உள்ள நகை கடைக்கு ரிச்சர்ட் மெக்கன்ஸி மேத்யூஸ்(வயது 52) என்பவர் சென்றார். அங்கு வைரங்களை பார்வையிட்டார். ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று நினைத்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1.7 கேரட் வைரத்தை நைசாக எடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார்.
கையில் தயாராக வைத்திருந்த போலி வைரத்தை வைத்து விட்டார். நகை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர். புகாரின் படி பொலிசார் விரைந்து வந்து ரிச்சர்ட்டை பிடித்து சென்றனர். இவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது, வயிற்றுக்குள் 2 போலி வைரங்கள் இருப்பது தெரிய வந்தது. உண்மையான வைரம் இருப்பது தெரியவில்லை.

ரிச்சர்ட் விழுங்கிய வைரத்தை வெளியேற்ற பேதி மருந்து, இனிமா கொடுத்தனர். அதன்பின் அவரும் பல முறை பாத்ரூம் போய் வந்ததுதான் மிச்சம். வைரம் வெளியில் வரவில்லை. கடந்த ஒரு வாரமாக இப்படியே பல முறை இனிமா கொடுத்தும் பலனில்லை.
கமலின் உதவிக்காக காத்திருக்கும் த்மிழ் நடிகர்

கமலின் உதவிக்காக காத்திருக்கும் த்மிழ் நடிகர்

நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் அமீர் இயக்கத்தில் ’ஆதிபகவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிபகவன் படப்பிடிப்பை அமீர் இடைவெளிவிட்டு துவங்கினாலும் விரைவாக முடித்துவிட்டார். ஆதிபகவன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி ‘பூலோகம்’ படத்திலும் சமுத்திரக்கனி படத்திலும் நடிக்கிறார். பூலோகம் படத்தில் ‘கிக் பாக்ஸர்’-ஆக்வும்,  சமுத்திரக்கனி படத்திலும சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் தனது உடல் மற்றும் மேக்-அப் சம்பந்தமான சில யோசனைகளை கமல்ஹாசனிடம் கேட்கப்போகிறாராம். கமல் தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட வேலைகளுக்காக வெளிநாட்டில் உள்ளார். கமல் சென்னை வந்ததும் அவரை சம்மதிக்க இருப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்
அதிக நேரம் உழைத்தால் மூளை பாதிக்கும்

அதிக நேரம் உழைத்தால் மூளை பாதிக்கும்

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்றும், நடுத்தர வயதை கடந்த பின்பு தான் இந்த பாதிப்பு தெரிய வரும் என்றும், குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். 


இதுகுறித்து  மேலும் கூறிய ஆய்வாளர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர். யாராக இருந்தாலும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள்.

Thursday, May 17, 2012

மணிரத்தினத்தின் கடல்

மணிரத்தினத்தின் கடல்

மீனவர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படங்கள் வந்த ‘படகோட்டி, ‘மீனவ நண்பன், ‘கடல் மீன்கள்', விஜய் நடித்த 'சுறா' வை தொடர்ந்து மீனவர்கள் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ‘கடல்' என்ற பெயரில் ஒரு படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.
 

தனது அழகால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் அறிமுகமாகும் படம் கடல். உயரமாக, செக்கச் செவேல் என ஒல்லி உடலைப் பெற்ற கார்த்திக்கின் மகன் கௌதம், மீனவக் குடும்பத்தில் பிறந்த மீனவரின் மகனாக நடிக்கிறார் என்றால் நமக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது. எப்படி பொருந்தும் என்று கேட்டால், அதற்கும் பதில் சரமாரியாக வந்து விழுகிறது.

மீனவக் குடும்பத்து மகனாக நடிப்பதற்காக சில எடைகளை கூட்டி, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்குத்தான் அர்ஜுனிடம் உடற்பயிற்சி பெற்று வருகிறார் கௌதம் என்று உண்மையை படக் குழுவினர். உடைத்தார்கள்
4 தேசிய விருதுகள் இணையும் மூன்று பேர் மூன்று காதல்

4 தேசிய விருதுகள் இணையும் மூன்று பேர் மூன்று காதல்

இயக்குனரும் நடிகருமான சேரன், அர்ஜூனுடன் இணைந்து நடிக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். கதாநாயகிகளாக ஸ்ருதியும், சுர்வீனும் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். முக்தா பானு மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.இயக்குனர் வசந்த் இந்த படத்தை இயக்குகிறார். தம்பி ராமையா மறும் அப்புகுட்டி ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.படத்தின் இயக்குனர் வஸந்த் ‘ஆசை’ படத்திற்காக தேசிய விருது வாங்கியவர்.

படத்தின் ஒரு கதாநாயகனான சேரன் வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்காக இதுவரை மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார். தம்பி ராமையா மைனா படத்திற்காகவும், அப்புகுட்டி அழகர்சாமியின் குதிரை படத்திற்காகவும் தேசிய விருது வாங்கியவர்கள்.

தேசியவிருது பெற்ற நாங்கு பேர் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.
அஜித்தால் நான் மனமுடைந்துவிட்டேன்: சக்ரி

அஜித்தால் நான் மனமுடைந்துவிட்டேன்: சக்ரி


அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் வில்லனாக நடிப்பவர் சுதன்ஷூ பாண்டே. இவர், நடிகர் அஜித்தால் நான் மனமுடைந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.பில்லா-2 படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசும் போது சுதன்ஷூ “பில்லா-2 படத்தின் வில்லன் கேரக்டருக்காக ஏற்ற நபரை சக்ரி டொலட்டி தேடிக் கொண்டிருந்த போது என் ஃபோட்டோவை பார்த்து என்னை அழைத்து பேசினார். அதன் பிறகு நீங்கள் தான் ‘அப்பாஸி’ என்று கூறினார். ‘அப்பாஸி’ என்பது தான் பில்லாவின் எதிரியின் பெயர்.பணக்கார வில்லனாக இருப்பதால் என் எடையைக் கூட்ட வேண்டி இருந்தது அதற்காக சாக்லேட், கொழுப்பு நிறைந்த உணவுகள், மில்க்‌ஷேக் என எதையும் விட்டுவைக்கவில்லை.படிப்படியாக அஜித்தை பற்றி விசாரித்த போது தான் அந்த கஷ்டமான செய்தி தெரிந்தது.

Wednesday, May 16, 2012

பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும்: யுவன்

பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும்: யுவன்

பில்லா-2 படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


பாடல்களை யுவன், தன்வி ஷா, சுவி சுரேஷ், ஆண்ட்ரியா, ரஞ்சித், ஸ்வேதா பண்டிட், ஸ்டெப்னி ஆகியோர் பாடியுள்ளார்கள்.ஷக்ரி டோலட்டி இயக்கத்தில் இப்போது நான் இசையமைத்துள்ள 'பில்லா-2' பட பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும். என் இசை ரசிகர்கள், படத்தின் எல்லா பாடல்களையும் கேட்டு விட்டு என்னை புகழ்ந்துள்ளார்கள் என்று யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.