Tuesday, May 22, 2012

'கப்பார் சி்ங்' கால் டோலிவுட்டில் ஸ்ருதியின் மவுசு கூடியுள்ளது

'கப்பார் சி்ங்' கால் டோலிவுட்டில் ஸ்ருதியின் மவுசு கூடியுள்ளது

பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்த கப்பார் சிங் திரைக்கு வந்த 10 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இது மகதீரா, தூக்குடு ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து ஹிட்டான தபாங் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் கப்பார் சிங். சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள இந்த படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. முதல் வாரத்திலேயே ரூ. 42.55 கோடி வசூலாகி பாக்ஸ ஆபீஸில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் வார வசூல் மகதீரா, தூக்குடு ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் படம் ரிலீஸான 10 நாட்களிலேயே ரூ.52.25 கோடி வசூலாகியுள்ளது. இரண்டாவது வாரத்தில் ரூ.9.70 கோடி வசூலாகியுள்ளது. இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் வசூல் ரூ.65 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கண்ணாடி இதயம்'  படம் குறித்து இயக்குனர்

'கண்ணாடி இதயம்' படம் குறித்து இயக்குனர்

கண்ணாடி இதயம் படம் பற்றி இயக்குனர் குருஷங்கர் கூறுகையில், இதயம் கண்ணாடியை போன்றது. கண்ணாடியில் ஒரு சிறுகல் பட்டாலும் உடைந்துவிடும்.அதுபோல் இதயத்தில் ஒரு சிறு காயம் பட்டாலும் உடைந்துபோகும். கல்லூரியில் படிக்கும் போது மாணவ, மாணவிகள் படிப்பதை மறந்து காதலில் விழுவது, தீய வழியில் ஈடுபடுவது என்று படிப்பை கோட்டை விடுகிறார்கள்.படிக்கும்போது மாணவ, மாணவிகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை படம் சொல்கிறது.
மொபைலால் ஆண்டுதோறும் 5000 பேர் பலி

மொபைலால் ஆண்டுதோறும் 5000 பேர் பலி

கைபேசிகளில் பேசிய படியும், எஸ்.எம்.எஸ் அனுப்பிய படியும் வாகனங்களில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் 5000க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.இவர்களில் இளம் வயதினர் அதிகளவில் பலியாகி இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனித மாமிசத்தை உட்கொண்ட கொடூர மனிதர்கள்தூக்கிலடப்பட்டனர்அற

மனித மாமிசத்தை உட்கொண்ட கொடூர மனிதர்கள்தூக்கிலடப்பட்டனர்அற

வட கொரியாவில் மனித மாமிசத்தை உட்கொண்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, தூக்கிலடப்பட்டதாக தென் கொரிய அரசினால் நடத்தப்படும் கொரிய ஒன்றிணைப்புக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.வட கொரியாவில் இருந்து தப்பி வந்த 230 பேரிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இச்செய்தி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 21, 2012

என்னால் அவர் குடும்பத்தில் பிரச்சினை என்பதில் உண்மையில்லை: ஸ்ருதி

என்னால் அவர் குடும்பத்தில் பிரச்சினை என்பதில் உண்மையில்லை: ஸ்ருதி

முதலில் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தார் என்றும், அடுத்து 3 படத்தில் நடித்த போது தனுஷுடன் காதலாகி, அவர்கள் குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணார் என்றும் ஸ்ருதி ஹாசன் குறித்து கிசுகிசுக்கள் பரவின.இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், "சித்தார்த், தனுஷ் போன்ற நடிகர்களுடன் என்னை இணைத்து வரும் கிசுகிசுக்களைப் படிக்கவே கடுப்பாக உள்ளது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். தொழில்ரீதியான தொடர்பு மட்டுமே எனக்கும் தனுஷுக்கும் உள்ளது. என்னால் அவர் குடும்பத்தில் பிரச்சினை என்பதில் உண்மையில்லை.
தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்," என்றார்.
உதவி கோருகிறார்  11 மனைவிகள்,  30 குழந்தைகளுக்கு அப்பா

உதவி கோருகிறார் 11 மனைவிகள், 30 குழந்தைகளுக்கு அப்பா

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அரசாங்கம் விடுக்கும் யோசனைகளை பலர் கண்டுகொள்ளாமல் குழந்தைகளை பெற்று விட்டு அவதியுறுகின்றனர்.

அப்படியொரு நபர் தான் டிஸ்மாண்ட் ஹாட்ஷீத். அமெரிக்காவில் தென்கிழக்கு பகுதியில் அட்லாண்டாவுக்கு அருகேயுள்ள நோக்ஸ்வில்லி நகரில் வசித்து வருகிறார்.

இவர் 11 மனைவிகளின் மூலம் 30 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். நல்ல திடகாத்திரமான உடல்வாகு கொண்ட அவருக்கு வருமானம் போதிய அளவிற்கு இல்லை.

பாதி சம்பளத்தை கொடுத்தாலும் அவர்களை திருப்திபடுத்த முடியவில்லை. இதனால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவிக்கிறார். 2009-ம் ஆண்டில் 21 குழந்தைகளின் தந்தையாக இருந்த இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, நான் இதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதிமொழி அளித்தார்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் 9 குழந்தைகள் பிறந்து விட்டன. ஒரு குழந்தையின் பராமரிப்புக்கு மாதம் ரூ.75 மட்டுமே அவரால் வழங்க முடிகிறது எனவே தனக்கு உதவும்படி அவர் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்

Sunday, May 20, 2012

திருமணமானவரை   கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டேன்: தமிழ் நடிகை

திருமணமானவரை கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டேன்: தமிழ் நடிகை

தமிழில் ’பாணாகாத்தாடி’ படம் மூலம் அறிமுகமான சமந்தா, தெலுகில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் என சமந்தா நடித்த படங்கள் அடைந்த வெற்றியின் விளைவு இப்போது 6 படங்களில் நடித்துக் கொண்டும் ஒரு படம் ரிலீஸுக்கு தயாராகவும் உள்ளது. 
அனைத்து படங்களின் இயக்குனர்களும் அந்தந்த மொழிகளில் முன்னணி இயக்குனர்கள்.  இந்த குறுகிய கால வளர்ச்சியை பற்றி கேட்ட போது சமந்தா “ இதற்கெல்லாம் நான் நடித்த படங்களின் இயக்குனர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சிறுவயதிலிருந்தே நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து அவருக்கு ரசிகையாகவே வளர்ந்தேன். அவரைப் போன்றே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து இந்திக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன்.  விரும்பியவாரே செய்தேன். ஸ்ரீதேவி எனக்கு நடிப்பில் மட்டும் தான் ரோல்மாடல், தனிப்பட்ட வாழ்க்கையில் அல்ல. திருமணம் பற்றி பேசும்போது ஸ்ரீதேவி போல்  ஏற்கனவே திருமணமானவரை   கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டேன் .
இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன்:ஜாக்கி சான்

இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன்:ஜாக்கி சான்

ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான சைனீஸ் ஜோடியாக்கை (ஆர்மர் ஆப் காட் 3) உருவாக்கி வருகிறார். இந்தப் படம்தான் அவரது கடைசி ஆக்ஷன் படமாகும்.கேன்ஸ் திரைப்பட விழாவில் சைனீஸ் ஜோடியாக் புரமோஷனுக்காக வந்திருக்கும் ஜாக்கி சான், இந்தப் படத்தோடு நடிப்புக்கு குட்பை, இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன். திரைக்குப் பின்னால் என் பங்களிப்பு இருக்கும். ராபர்ட் டி நீரோ போல, புதிய பரிமாணத்தில் தோன்றத் திட்டமிட்டுள்ளேன்," என்று  உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான்  தெரிவித்துள்ளார்.
உலக மக்களை அச்சுறுத்தும் இரண்டு கொடூர நோய்கள்

உலக மக்களை அச்சுறுத்தும் இரண்டு கொடூர நோய்கள்

உலக மக்களை அச்சுறுத்தும் 2 கொடிய நோய்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.அதில் ஒன்று நீரிழிவு, மற்றொன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் சராசரியாக 3 பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், நீரிழிவினால் 10 சதவீதம் பேரும் அவதிப்படுகிறார்கள் என்றும் புள்ளி விவரம் கூறுகிறது.எனவே இந்த கொடிய நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற பரவலாக மருத்துவ வசதிகள், குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்வது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார கழக டைரக்டர் ஜெனரல் மார்க்கரெட் ஷான் தெரிவித்துள்ளார்.