Wednesday, July 25, 2012

புதுச்சேரி  சிறையில் கைதிகள் மோதல்

புதுச்சேரி சிறையில் கைதிகள் மோதல்

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் இன்று கைதிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், கைதி ஒருவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
எமிக்கு போட்டியாக லண்டன் நடிகை

எமிக்கு போட்டியாக லண்டன் நடிகை

‘மதராஸ பட்டணம்’ படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். இந்தி, தமிழ் என்று வரிசையாக நடித்து வரும் அவர் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
எமியை தொடர்ந்து மற்றொரு லண்டன் நடிகை அனாரா தமிழுக்கு வருகிறார். ‘காதலே என்னை காதலி’ என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
சமுக வலைத்தளங்களை உபயோகப்படுத்துவதில்லை: த்மிழ் நடிகை

சமுக வலைத்தளங்களை உபயோகப்படுத்துவதில்லை: த்மிழ் நடிகை

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என் பெயரை பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள் என்று அசின் கூறியுள்ளார்.என்னை பற்றி பெருமையடித்துக் கொள்வதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல் மற்றவர்களைப் போல எனது தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்திக் கொள்வதையும் விரும்பவில்லை.டுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்திருப்பதால் பலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் அமைதியாக இருக்க நினைப்பவள். அதனால் என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை உடனுக்குடன் வலையேற்றிக் கொண்டிருக்க முடியாது. அதனால் சமூக வலைத்தளங்களில் நான் இணையவில்லை.
மீண்டும் இசை பயணத்தை தொடங்கிய எம்.எஸ்.வி

மீண்டும் இசை பயணத்தை தொடங்கிய எம்.எஸ்.வி

500 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர் பல ஆண்டுகளாக இசையமைக்காமல் இருந்தார்.
 


இந்நிலையில், தற்போது வாழ்வில் மறக்க முடியாத கசப்பான காதல் நினைவலைகள் ஒரு மனிதனை உலகமே வியக்குமளவிற்கு எப்படி மாற்றுகிறது என எடுத்துரைக்கும் மாறுபட்ட கதை கொண்ட 'சுவடுகள்' என்ற புதிய படத்தில் மீண்டும் தனது இசையமைப்பாளர் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
விபத்துக்குக் காரணமாக பள்ளிப் பேருந்தை தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

விபத்துக்குக் காரணமாக பள்ளிப் பேருந்தை தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

தாம்பரத்தில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமாக இருந்த பள்ளிப் பேருந்தை தீயிட்டுக் கொளுத்தினர். பேருந்து கொழுந்துவிட்டு எரிந்ததால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீனியர் மாணவிகளின் ராகிங்கால் பேசும் திறனை இழந்தார் மாணவி

சீனியர் மாணவிகளின் ராகிங்கால் பேசும் திறனை இழந்தார் மாணவி

ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கோட்டலாம் என்ற ஊரில் உள்ள கல்லுரியில் சேர்ந்த ஷாமிலி, அங்குள்ள  விடுதியில் தங்கியுள்ளார்.

 இவரை கடந்த ஜூலை 19-ம் தேதி இரவு ஷாமிலியுடன் தங்கியிருந்த சில மாணவிகள் சாப்பிடுவதற்கு வெளியில் சென்றனர்.
 அப்பொழுது மூத்த மாணவிகள் சிலர், ஷாமிலி அறைக்குள் சென்று ராகிங் செய்துள்ளனர். இதில் ஷாமிலியின் கழுத்தை கயிற்றால் நெரித்தும் உள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஷாமிலி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஷாமிலி பேசும் திறனை இழந்து விட்டதாக டாக்டர்கள்  தெரிவித்தனர்
இளம் பெண்ணை ஒடும் இரயிலில் கற்பழிக்க முயற்சி

இளம் பெண்ணை ஒடும் இரயிலில் கற்பழிக்க முயற்சி

19 வயதுள்ள இப்பெண், பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு ரயில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இம்ரான், அக்பர், சுபா, அகமது என்ற நான்கு வாலிபர்கள் இப்பெண்ணிடம் சில்மிஷம் செய்தனர்.


இந்த சில்மிஷத்தால் கோபமான அப்பெண் சத்தமிட்டார். இதைத்தொடர்ந்து பலவந்தமாக அப்பெண்ணை கற்பழிக்க முயன்றனர். இதற்கு அவர் ஒத்துழைக்க மறுக்கவே அவரை ஓடும் இரயிலிருந்து தள்ளி விட்டனர்.குற்றவாளிகளில் இரண்டு பேர் பிடிப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனை

ரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனை

பிலிப்பைன்ஸ் நாட்டின் குயிசான் நகரில் ரெய்மர் பார்பரன் என்ற பெண், தனது 9 வயது மகன் மார்க் ஜேசன் பினீடாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மனநிலை பாதித்த சிறுவன், மார்க் ஜேசனை திடீரென பிடித்து இழுத்து, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து(ஐஸ் கத்தி) கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

இதனால் பயந்து போன அந்த தாய், இப்பிரச்சினையில் பொலிசார் தலையிட அனுமதித்தார். இதையடுத்து பொலிசார் அவனுடன் சாமர்த்தியமாக பேசி, குழந்தையை மீட்டனர். இரவு 11 மணியளவில் பிடிபட்ட குழந்தை, மறுநாள் காலை 7.30 மணிக்குத் தான் மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்து.
மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியை

மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியை

நியூயார்க்கில் உள்ள மான்டிசோரி பள்ளியின் முதல்வராக லீனா பதவி வகித்த காலத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு 13 வயது பையனுடன் தவறாக உறவு வைத்துள்ளார். மேலும் அந்த பையனை தொடர்ந்து படிக்கவிடாமல் துன்புறுத்தி வந்துள்ளார். 

 
அவன் வளர்ந்து வாலிபனான பின்னர், இதுகுறித்து வெளியில் சொன்னதால் லீனா மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2007ஆம் ஆண்டு லீனா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 4 முதல் 14 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு வெளியே பேஸ்புக்கின் புதிய அலுவலகம்

அமெரிக்காவுக்கு வெளியே பேஸ்புக்கின் புதிய அலுவலகம்

உலகெங்கிலும் மக்களை தனது பக்கத்தில் கட்டிப் போட்டிருக்கும் சமூக வளைத்தளமான பேஸ்புக் இதுவரை அமெரிக்காவில் மட்டுமே அலுவலகங்கள் வைத்துள்ளது.

இப்போது முதன் முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தனது அலுவலகத்தைத் திறந்திருக்கிறது பேஸ்புக். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனது பொறியாளர் அலுவலகத்தை ஃபேஸ்புக்.நிறுவியிருக்கிறது
5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு. கொண்ட ஆப்பிரிக்கர்

5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு. கொண்ட ஆப்பிரிக்கர்

ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். கடந்த செவ்வாய்கிழமை அவர் பாரில் மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற 5 மனைவிகள் அந்த அறைக்குள் புகுந்து கத்தி மற்றும் கம்பை காட்டி தங்களுடனும் உல்லாசமாக இருக்க வருமாறு மிரட்டி அழைத்தனர்.இதையடுத்து ஒவ்வொரு மனைவியுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். அதுவும் தொடர்ச்சியாக. முதல் 4 மனைவிகளை திருப்திபடுத்திவிட்டு 5வது மனைவியிடம் சென்றுள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியாக 4 பேருடன் உறவு வைத்ததால் கலைத்துப் போன அவர் 5வது மனைவியிடம் சென்றதும் மூச்சுமுட்டி இறந்தார்

Monday, July 23, 2012

ஈராக்கில், ஒரே நாளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 90 பேர் பலி

ஈராக்கில், ஒரே நாளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 90 பேர் பலி


ஈராக் நாட்டில் முகாமிட்டிருந்த அமெரிக்க கூட்டுப்படை கடந்த ஆண்டு டிசம்பரில் வாபஸ் பெறப்பட்டது. அதன் பிறகு தீவிரவாதிகளின் தாக்குதல் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள 2 நகரங்களில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 20 பேர் உயிர் இழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இன்று பாக்தாத் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உள்பட 90 பலியானார்கள். 225 பேர் காயம் அடைந்துள்ளனர். இது அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு நடைபெற்ற பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது.