Thursday, May 25, 2017

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தையும் இயல்பாகவே எதிர்கொள்கிறோம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தையும் இயல்பாகவே எதிர்கொள்கிறோம்


பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் இயல்பான கிரிக்கெட் ஆட்டமாகவே எதிர்கொள்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த இரு அணிகளும் சாம்பின்யஸ் டிராபி போட்டியில் மோத உள்ளன.
இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் விராட் கோலி மும்பையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஒரு கிரிக்கெட் வீரராக களத்தில் பேட்டிங் செய்யும்போது, எதிர்முனையில் இருக்கும் எனது பார்ட்னரைப் பற்றி கூட சிந்திக்க இயலாது. இது முழுக்க முழுக்க விளையாட்டைப் பற்றியதாகும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியானது ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அவர்களைப் பொருத்த வரையில் இந்த ஆட்டம் என்பது வித்தியாசமானது. எங்களைப் பொருத்த வரையில் இதுவும் வழக்கமான கிரிக்கெட் ஆட்டமே. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்பதால் எங்கள் மனதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவுக்காக விளையாடும்போது நமக்கு தனியே ஊக்குவிப்பு என்பது தேவையில்லை. அது இயல்பாகவே ஏற்படும்.
துணைக் கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களைப் பொருத்த வரையில், தோல்வி என்பது ஏன் எப்போதும் வாழ்வா? சாவா? என்பதைப் போல பார்க்கப்படுகிறது எனத் தெரியவில்லை.
ஒரு கிரிக்கெட் வீரராக ஒவ்வொரு தொடரின்போதும் மேம்பட முடியும் என உணர்கிறேன். சில வேளைகளில் ஒரு சில தொடர்கள் வாழ்வா, சாவா? நிலையில் இருப்பதைப் போன்று சுற்றியிருக்கும் சூழ்நிலைகள் தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், நமது மனதில் அத்தகைய எண்ணம் இருக்காது.
துணை கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இதனை உணர முடியும். இது ஏன் எனத் தெரியவில்லை. வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாடும்போது சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களால் இயல்பாகத் திரும்பிச் செல்ல முடிகிறது.
ஆனால், இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் நமது கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளதைப் போன்று உணரப்படுகிறது. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று விராட் கோலி கூறினார்.
இது மட்டும் இருந்திருந்தால் 2003-ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் முடிவு மாறியிருக்கும்

இது மட்டும் இருந்திருந்தால் 2003-ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் முடிவு மாறியிருக்கும்

கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 359 ஓட்டங்கள் குவித்தது. இந்தியா அணி 234 ஓட்டங்களுக்குள் ஆல்-அவுட் ஆகி கிண்ணத்தை இழந்தது.
இந்நிலையில் 20 ஓவர் போட்டி 2003-ம் ஆண்டு இருந்திருந்தால் உலகக்கிண்ணம் இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம் என்று டெண்டுல்கர் கூறி உள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படமாக சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட டெண்டுல்கர் கூறுகையில், 20 ஓவர் கிரிக்கெட் முறையால் வீரர்களின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் 359 ஓட்டம் என்பது மிகப்பெரிய இலக்காகும்.இப்போதும் அப்படி இருந்தாலும் 340 ரன் இலக்குகளை கூட எட்டி உள்ளோம். போட்டியில் முறை, விதிகள் சூழ்நிலைகள் என அனைத்துமே மாறியுள்ளதே இதற்கு காரணம்.
20 ஓவர் போட்டி காரணமாக வீரர்களின் மனநிலை உள்பட அனைத்தும் மாறியுள்ளதாகவும், 2003-ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டி நடைமுறையில் இருந்திருந்தால் உலகக்கிண்ணம் இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம்.
இந்திய வீரர்கள் அந்த ஆட்டத்தை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். தற்போது அதே வீரர்களை கொண்டு விளையாடினால் அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும் என கூறியுள்ளார்.
உலகக்கிண்ணத்தை வெல்லலாம்..ஆனால் இதில் தோற்றால்: விராட் கோஹ்லி

உலகக்கிண்ணத்தை வெல்லலாம்..ஆனால் இதில் தோற்றால்: விராட் கோஹ்லி

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்கு தலைவராக கடந்த ஜனவரி மாதம் தான் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.
கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்நிலையில் அவரது தலைமையில் முதல் முறையாக இந்திய அணி ஐசிசி தொடரில் விளையாட உள்ளது. நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து புறப்படும் முன் விராட் கோஹ்லி கூறுகையில், தொடர் சிறிதாக உள்ளது மற்றும் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்பதால், அனைத்து போட்டிகளும் சுவாரசியமாக இருக்கும்.
உலகக் கிண்ணத்தை விட இந்த தொடரில் நிறைய போட்டிகள் இருக்கும். உலக கிண்ணம் தொடரில், லீக் போட்டிகள் இருப்பதால், கடைசி நேரத்தில் வென்று கிண்ணத்தை வெல்லலாம்.
ஆனால், இந்த தொடரில், முதல் போட்டி தோற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதியாவது சந்தேகம் ஆகி விடும். இதனால், இந்த தொடரின் முதல் பந்தில் இருந்தே சிறப்பாக செயல் படுவோம், என கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு புதிய வியூகம்: அஸ்வின் ஓபன் டாக்

சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு புதிய வியூகம்: அஸ்வின் ஓபன் டாக்



சாம்பியன்ஸ் கிண்ணம் தொடருக்கு புதிய வியூகம் வகுத்துள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடந்த டெஸ்ட் சீசனில் 13 போட்டிகளை உள்ளூர் மண்ணில் விளையாடியது. இதில், 10 போட்டிகளில் வெற்றியை ருசித்ததில் அஸ்வினின் கேரம் பந்துக்கு முக்கியமான இடமுண்டு.
தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் அஸ்வின் ஓய்வில் இருந்தார். இதையடுத்து புத்துணர்ச்சியுடன் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியுடன் அவர் இணைந்துள்ளார்.
நடப்பாண்டில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்காக சியட் விருது மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், சாம்பியன்ஸ் கிண்ணம் தொடருக்காக புதிய வியூகத்தினை வகுத்துள்ளேன்.
அந்த தொடர் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் முன்னோட்டமாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்கள் அமையும் என்று கூறியுள்ளார்.

Wednesday, May 24, 2017

 சி.எஸ்.கே ரசிகர்கள் இதை மறக்க மாட்டார்கள்..!

சி.எஸ்.கே ரசிகர்கள் இதை மறக்க மாட்டார்கள்..!


2010 ஐபிஎல் ஃபைனலை சி.எஸ்.கே ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். பரம எதிரியான மும்பையுடன், அதுவும் அவர்கள் சொந்த மண்ணில் நடந்த ஃபைனல். ஒட்டுமொத்த மைதானமும் ப்ளூவில் இருந்தது. முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த ஃபைனலின், கடைசி ஓவரைக் காண லிங்கை க்ளிக்குங்க.

https://www.youtube.com/watch?v=JPXWx7YXZfc&feature=youtu.be
 ஐபிஎல் வெற்றிக்குப் பின் சச்சின் புகழ்ந்த நபர்!?

ஐபிஎல் வெற்றிக்குப் பின் சச்சின் புகழ்ந்த நபர்!?



நேற்று மும்பை இந்தியன்ஸ் 3-வது முறையாக ஐபிஎல் சாம்பியன்ஸ் ஆன பிறகு பேசிய சச்சின், 'ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம்' என மலிங்காவுக்கு புகழாரம் சூட்டினார். 
'சச்சின்' திரைப்படம் பார்க்கும் இந்திய அணி!

'சச்சின்' திரைப்படம் பார்க்கும் இந்திய அணி!



சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ திரைப்படம், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது. விராத் கோலி, தவான் உள்ளிட்ட வீரர்கள் இந்த சிறப்புக் காட்சியை காணவுள்ளனர். இதையடுத்து இரவு 7 மணிக்குத் தொடங்கும் காட்சியை சச்சினின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் காணவுள்ளனர். 
இங்கிலாந்து குண்டுவெடிப்பு எதிரொலி! பிசிசிஐ அவசரக் கூட்டம் Vikatan

இங்கிலாந்து குண்டுவெடிப்பு எதிரொலி! பிசிசிஐ அவசரக் கூட்டம் Vikatan

இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க பிசிசிஐ அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க பிசிசிஐ அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்தில் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் கூறுகையில், 'குண்டு வெடிப்புக்குப் பிறகு அதிகளவில் வீரர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது' எனக் கூறியுள்ளனர். இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி.
‘கழுத்துக்கு நேராக கத்தி’ *கொதிக்கிறார் கோஹ்லி

‘கழுத்துக்கு நேராக கத்தி’ *கொதிக்கிறார் கோஹ்லி


மும்பை: ‘‘இந்திய துணைக் கண்டத்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு தொடரும் வாழ்வா... சாவா போல உள்ளது. அன்னிய மண்ணில் சிறப்பாக செயல்பட தவறினால், கழுத்து நேராக கத்தியை நீட்டுவது போன்ற ஆபத்தான சூழலை சந்திக்க நேரிடுகின்றனர்,’’ என, விராத் கோஹ்லி ஆவேசமாக கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர்(50 ஓவர்) வரும் ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்க உள்ளது.
இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் ‘டாப்– 8’ அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று, இங்கிலாந்து கிளம்பினர்.
இதற்கு முன் கோஹ்லி அளித்த பேட்டி:
கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்திய இந்திய அணி கோப்பை வென்றது. இம்முறையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்பது நெருக்கடியாக இருக்கும் என, நினைக்கவில்லை. போட்டிகள், குறுகிய கால இடைவெளியில் நடப்பது மற்றும் உலகின் ‘டாப்–8’ அணிகள் மோதுவதால், மற்ற தொடர்களைவிட சாம்பியன்ஸ் டிராபி கடினமானது.
புரியாத புதிர்:
இந்திய துணைக் கண்டத்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு தொடரும் வாழ்வா... சாவா போல உள்ளது. மற்ற அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இந்திய மண்ணில் சரியாக விளையாடாமல் நாடு திரும்பினால், அங்கு பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம், அன்னிய மண்ணில் இந்திய வீரர்கள் சொதப்பினால் அவ்வளவு தான், கழுத்துக்கு நேராக கத்தியை நீட்டுவது போன்ற ஆபத்தான சூழலை உணர்கின்றனர். கடுமையாக விமர்சிக்கின்றனர். இதுபோன்ற செயல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் இழந்த ‘பார்மை’ மீ்ட்க வேண்டும் என, நினைத்து ஒருபோதும் விளையாடுவதில்லை. இந்தியாவுக்காக போட்டிகளில் வெற்றி பெற்றுத் தரவேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். .
இவ்வாறு கோஹ்லி கூறினார்.
பாக்., மோதல் எப்படி:
கோஹ்லி கூறுகையில்,‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வரும் ஜூன் 4ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் மற்ற போட்டிகளைப் போல இதுவும் ஒன்று, அவ்வளவு தான். இது குறித்து பரபரப்பான செய்திகள் வௌியாகின்றன. இதெல்லாம் எங்களது கட்டுப்பாட்டுக்குள் கிடையாது. கிரிக்கெட் வீரர் என்ற முறையில் மைதானத்துக்கு வெளியில் நடக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது,’’என்றார்.
இது வரலாறு
ஒருநாள் (6) மற்றும் ‘டுவென்டி–20’ (5) உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. இத்தொடரில் இரு அணிகள் மோதிய 11 போட்டியிலும், இந்தியா தான் வென்றது. அதேநேரம், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு அணிகள் 3 போட்டியில் மோதின. இதில் இந்தியா 1, பாகிஸ்தான் 2 போட்டியில் வென்றன.

டோணியைவிட ரோகித் ஷர்மாதான் சிறந்த டி20 வீரரா? புள்ளி விவரம் சொல்வதை பாருங்க

டோணியைவிட ரோகித் ஷர்மாதான் சிறந்த டி20 வீரரா? புள்ளி விவரம் சொல்வதை பாருங்க

ஹைதராபாத்: இந்தியாவின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் டோணியா, ரோஹித் ஷர்மாவா என்ற சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 

பொதுவாக டோணியை ராசியானவர் என புகழ்வது ரசிகர்கள் வாடிக்கை. ஆனால் ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடும் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துவிடும் என்ற விமர்சனத்தை ரசிகர்கள் முன் வைப்பார்கள். 

முன்பு சச்சினுக்கும் இதேபோன்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. சச்சினும், ரோகித்தும் ஓப்பனிங்கில் இறங்குவது வழக்கம். எனவே இவர்கள் சிறப்பாக ஆடி, பின்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பழி என்னவோ இவ்விருவருக்கும்தான் வருவது வாடிக்கை. 

அடித்தால் வெற்றிதான்

அடித்தால் வெற்றிதான் 

டோணி நிலைமை அப்படியில்லை. வெற்றி பெற வேண்டிய தருணத்தில் கடைசி கட்டத்தில் களமிறங்குபவர். எனவே அவர் அடித்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். சொதப்பினால் தோற்றுவிடும் என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் கணிப்பு.

ரோகித் ஷர்மா முன்னணி

ரோகித் ஷர்மா முன்னணி 

புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டி20 கிரிக்கெட் உலகில் ரோகித் ஷர்மா முடிசூடா மன்னன் என்பது தெளிவாகிறது. டோணியைவிட ஒரு படி மேலே போய்விட்டார் ரோகித் ஷர்மா.

அதிக வெற்றி


அதிக வெற்றி 

ரோகித் ஷர்மா இடம் பெற்றிருந்த அணிகள்தான் அதிகப்படியான வெற்றியை ருசித்துள்ளன. இதுகுறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் டோணியைவிட அதிக வெற்றியை ருசித்துள்ளார் ரோகித் ஷர்மா.

முக்கிய கோப்பைகள்

முக்கிய கோப்பைகள் 

இந்திய அணி 2007ம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வென்றது. அந்த அணியில் ரோகித் ஷர்மா இடம் பிடித்திருந்தார். டோணிதான் அணியின் கேப்டனாக இருந்தார். 2016ல் ஆசிய கோப்பை டி20 வென்ற இந்திய அணியிலும் ரோகித் இடம் பெற்றிருந்தார்.
ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை 

இதுதவிர ஐபிஎல் என எடுத்துப் பார்த்தால் 3 முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றபோதெல்லாம் அதில் ஒரு வீரராக இருந்தவர் ரோகித் ஷர்மா. மேலும், இவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியபோது அந்த அணி கோப்பையை வென்றது. எனவே 4 முறை ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தில் இடம்பிடித்தவர் ரோகித் ஷர்மா. ஆக மொத்தம் 7 முறை இப்படி கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவர் ரோகித் ஷர்மா.
டோணி சாதனை

டோணி சாதனை 

ஆனால், டோணி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், அம்பட்டி ராயுடு ஆகியோர் தலா 6 முறை வெற்றி பெற்ற அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைவிட 1 கோப்பையை அதிகம் கைப்பற்றியுள்ளார் ரோகித் ஷர்மா.

சளைத்தவர்கள் இல்லை

சளைத்தவர்கள் இல்லை 

யூசுப் பதான், ஹர்பஜன்சிங் ஆகியோர் 5 முறை கோப்பைகள் வென்ற அணியில் இடம் பிடித்தவர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போது யார் சிறந்த டி20 வீரர் என்ற போட்டியில் டோணியைவிட ரோகித் ஷர்மா ஒருபடி விஞ்சியிருக்கிறார்.

மும்பைக்காக மாஞ்சு மாஞ்சு சாமி கும்பிட்ட பாட்டி.. அம்பானி மாமியாராம்ல!

மும்பைக்காக மாஞ்சு மாஞ்சு சாமி கும்பிட்ட பாட்டி.. அம்பானி மாமியாராம்ல!

மும்பை: ஐபிஎஸ் இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பாட்டி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தப் பாட்டி வேறு யாரும் இல்லையாம் மும்பை இந்தியன்ஸ் ஓனர் நீட்டா அம்பானியின் அம்மாவாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ்- புனே அணிகள் மோதிய ஐபிஎஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. 

இதில் புனே அணிக்கே வெற்றி என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அதிரயடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் கடைசி ஓவரில் த்ரில்லாக வெற்றியை தங்கள் வசமாக்கி கொண்டனர். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோப்பையை கைப்பற்றி ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி சாதனை படைத்தது.

பாட்டியின் படு சீரியஸாக பிரார்த்தனை

பாட்டியின் படு சீரியஸாக பிரார்த்தனை 

கோப்பை யாருக்கு என்ற பரபரப்பான சூழ்நிலையில் விஜபி கேலரியில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி கண்களை மூடி கைகளை கூப்பி படு சீரியசாக சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பந்துக்கும் ஓவர்கள் குறைய குறைய அவரின் பிரார்த்தனை தீவிரமானது.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம் 

ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிராத்திப்பது புதிதல்ல என்றாலும் பாட்டி ஒருவர் படு தீவிரமாக தனது அணிக்காக பிரார்த்தனை செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஃபோக்கஸ் செய்த கேமராக்கள்

ஃபோக்கஸ் செய்த கேமராக்கள்

கேமராக்களும் அவரை ஃபோக்கஸ் செய்ய தவறவில்லை. முடிவில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை சுவைத்தது. இதையடுத்து அந்தப் பாட்டியின் பிரார்த்தனைதான் வெற்றிக்கு காரணம் என நெட்டிசன்கள் டிவிட்டரில் போட்டு வாழ்த்து பாடினர்.

அந்தப் பாட்டி யார்?

அந்தப் பாட்டி யார்? 

அந்தப் பாட்டி யாருடைய உறவினர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அந்தப் பாட்டி யார் என நடிகர் அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீட்டாவோட அம்மாவாம் 

அதாவது அந்தப்பாட்டி நீட்டா அம்பானியின் தாயார் என்றும் அவர் நானி(பாட்டி) என அனைவராலும் அறியப்படுவார் என தெரிவித்துள்ளார். தனது மகளின் அணிக்காக பாட்டி சாமி கும்பிட்டது வீண்போகல!

தெங்க்யூ நானி! 

மும்பை இந்தியஸ் அணியும் பாட்டியின் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகை மற்றும் நீட்டா அம்பானியின் தாய் பூர்னிமாபென் தலால் பிரார்த்தனை ஐபிஎல் கோப்பையை மீண்டும் வீட்டிற்கே கொண்டுவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, May 23, 2017

பெரிய திறமைசாலிகள் இல்லாமலேயே கலக்கிட்டோம்ல.. புகழும் புனே பயிற்சியாளர் பிளமிங்

பெரிய திறமைசாலிகள் இல்லாமலேயே கலக்கிட்டோம்ல.. புகழும் புனே பயிற்சியாளர் பிளமிங்

புனே: பெரிய திறமைசாலிகள் இல்லாவிட்டாலும் பைனல் வரை வந்து சிறப்பாக ஆடியதற்கு புனே அணிக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் பைனல் போட்டியில் மும்பை அணி, ரைசிங் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டம் வென்றது. 

முதலில் சரியாக செயல்படாவிட்டாலும் தொடரின் பிற்பகுதியில் வெகு சிறப்பாக ஆடி பைனல் வரை வந்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது புனே அணி.

கேப்டன் ஆட்டம்

கேப்டன் ஆட்டம் 

இதுகுறித்து அதன் பயிற்சியாளரும், முன்னாள் நியூசிலாந்து கேப்டனுமான, ஸ்டீபன் பிளமிங் தெரிவித்ததாவது: ஸ்டீவன் ஸ்மித் வெற்றிக்கு அருகே அணியை அழைத்து வந்தார். போட்டி புனே பக்கம் வருவற்கான வாய்ப்பு இருந்தது.

பவுலிங் பிட்ச்

பவுலிங் பிட்ச்

கிரிக்கெட் என்பது நினைத்தபடியே நடைபெறாது. அதுதான் ஆட்டத்தின் சிறப்பம்சம். பேட்டிங் செய்ய சற்று சிரமமான விக்கெட்தான் அது. எனவே ரன் சேஸிங்கில் சிரமம் ஏற்பட்டது.

சிறப்பான பந்து வீச்சு

சிறப்பான பந்து வீச்சு 

மும்பை அணியின் பந்து வீச்சு டாப் கிளாஸ் என்பதை நான் உணர்ந்திருந்தோம். எனவே எளிதில் வெற்றி வந்துவிடாது என்பது தெரியும். புனே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதேநேரம், மும்பை அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தபடி இருந்தனர்.

பைனல் வந்ததே மகிழ்ச்சி

பைனல் வந்ததே மகிழ்ச்சி 

இது ஒரு சிறந்த பைனலாக அமைந்தது. பெரிய திறமையாளர்களை அதிகம் கொண்டிராத அணி புனே. அப்படியிருந்தும் பைனல் வரை நாங்கள் வந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. டோணி ஒரு சிறந்த வீரர். அணியால் என்ன முடியுமோ அதை செய்து முடிக்க அவர் நிறைய ஆலோசனைகள் வழங்கி ஆதரவளித்தார். இவ்வாறு பிளமிங் தெரிவித்தார்.

 அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்

சென்னை: சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த மற்றும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே இவ்விரு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் மற்றும் புனே அணிகள் அடுத்த ஆண்டுமுதல் விளையாடப்போவதில்லை.

We will be back in IPL 2018, announce Chennai Super Kings (CSK)

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான டிவிட்டர் பக்கம் நேற்று இரவு அதிகாரப் பூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளது.

 மும்பை மற்றும் புனே அணிகள் நடுவேயான நேற்றைய பைனல் போட்டி நிறைவடைந்த பிறகு, இந்த டிவிட்டை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு பெரிய விசிலு அடிங்க என்ற கோஷம் இந்த அணிக்கானது. 

அணியின் கேப்டனாக ஆரம்பம் முதலே டோணிதான் செயல்பட்டு வந்தார். அவர் புனே அணிக்காக ஆடிய விதம் சில விமர்சனங்களை ஈட்டித் தந்த போதிலும், சென்னை அணிக்காக அவர் ஆடிய அத்தனை சீசனிலும் டோணியின் ஆட்டமும், கேப்டன்ஷிப்பும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டோணிதான் மீண்டும் சி.எஸ்.கே அணி கேப்டனாக செயல்படுவார் என இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.