Friday, June 16, 2017

இங்கிலீஷ் தெரியலைன்னா என்ன? சர்ப்ராஸை காப்பாற்றிய இந்திய ரசிகர்கள்!

இங்கிலீஷ் தெரியலைன்னா என்ன? சர்ப்ராஸை காப்பாற்றிய இந்திய ரசிகர்கள்!

Cinque Terre
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது பாகிஸ்தான் அணி. அந்தப் போட்டியின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தார். இந்த வீடியோவை வெளியிட்டு இந்திய இணையதளம் ஒன்று அவரை கிண்டல் செய்திருந்தது. இது சமூகவலைத்தளங்களில் வைரலானது. ’பாகிஸ்தான் வீரர்கள் எல்லாருமே அரைகுறை ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள்’ என்கிற ரீதியில் வீடியோவை வெளியிட்டு கிண்டலடித்திருப்பதற்கு இந்திய ரசிகர்கள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதம் மிஸ்ரா என்ற ரசிகர், ’நான் இந்தியன்தான். ஆனால் இதுபோன்று ஒரு வீரரை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் என்ன? அவர் கிரிக்கெட்டர். டிவி தொகுப்பாளரல்ல. திறமையால் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு வந்திருக்கிறார். அதைப் பாராட்டுங்கள்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இன்னும் சிலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க, இந்திய ரசிகர்களின் இந்தப் போக்கை பாகிஸ்தான் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

எல்லா புகழும் தோனிக்கே: விராத் கோலி

எல்லா புகழும் தோனிக்கே: விராத் கோலி

Cinque Terre
பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின்போது, இக்கட்டான சூழலில் முக்கிய முடிவெடுக்க தோனியே காரணம் என விராத் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்தாலும், தொடக்கத்தில் அந்த அணியின் ஆட்டம் சிறப்பாகத் தான் இருந்தது.

28 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்திருந்தது பங்களாதேஷ். அந்த நேரத்தில் தமிம் இக்பால் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி தவித்தது. அப்போது திடீரென பந்துவீச அழைக்கப்பட்டார் கேதர் ஜாதவ். இவர் முஷிபிகுர் ரஹிம், தமிம் இக்பால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் பின்தான் பங்களாதேஷுக்கு தடுமாற்றம் தொடங்கியது.

இந்நிலையில் கேதர் ஜாதவ் களமிறக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் விராத் கோலி, இந்த முடிவுக்கு தோனி தான் காரணம் என கூறியுள்ளார். இக்கட்டான சமயத்தில் யாரை பந்துவீச அழைக்கலாம் என தோனியிடம் கருத்து கேட்டதாகவும் அவரே கேதர் ஜாதவை பரிந்துரைத்தாகவும் கூறியுள்ளார். பின் இருவரும் இணைந்து முடிவடுத்து அவரை பந்துவீச வைத்ததாகவும் கோலி கூறியுள்ளார். யாதவ் ஸ்மார்ட் கிரிக்கெட்டர் என்றும் தனது திட்டத்தை போட்டியில் சரியாக செயல்படுத்தியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார் கோலி.
அந்த விக்கெட்டுக்கு டோனியின் பார்வைதான் காரணம்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி

அந்த விக்கெட்டுக்கு டோனியின் பார்வைதான் காரணம்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி

Cinque Terre
நான் விக்கெட் எடுக்க டோனியின் பார்வை சொன்ன ரகசியம் தான் காரணம் என கேதர் ஜாதவ் கூறினார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவும் பங்களாதேஷும் மோதின. இதில் தமிம் இக்பால் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் கூட்டணி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி தவித்தது. அப்போது திடீரென பந்துவீச அழைக்கப்பட்டார் கேதர் ஜாதவ். இவர் முஷிபிகுர் ரஹிம், தமிம் இக்பால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி
அசத்தினார்.  ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்த விக்கெட்டுகளை எடுத்தது பற்றி கேதர் ஜாதவ் கூறும்போது, ‘நான் அதிகமாக பவுலிங் பிராக்டிஸ் செய்ததில்லை. பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். டோனி மீது மரியாதைவைத்திருக்கிறேன். இந்திய அணிக்கு நான் தேர்வானதுமே அவருடன் தான் அதிக நாட்களை செலவழித்திருக்கிறேன். கிரிக்கெட் தொடர்பான பல அனுபவங்களை அவர் சொல்லியிருக்கிறார். அதில் இருந்து பாடம் படித்திருக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் என்னை பந்து வீசச் சொன்னபோது,
நான் டோனியின் கண்களைத்தான் பார்த்தேன். அவரின் கண்கள் என்ன சொல்கிறது என்பதை அறிந்து பந்துவீசினேன். அது ஒர்க் அவுட் ஆனது. இதற்கு முன்பும் நான் பந்து வீசி விக்கெட் எடுத்திருக்கிறேன் என்றாலும் இந்த ஆட்டத்தில் விக்கெட் எடுத்தது எனக்கு ஸ்பெஷல். இப்போது எனது பந்து வீச்சின் மீது நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது’ என்றார்.

Tuesday, June 13, 2017

Monday, June 12, 2017

Sunday, June 11, 2017