Tuesday, May 15, 2018

ஜெருசலேம் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன மக்கள் 55 பேர் உயிரிழப்பு


ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதைக் கண்டித்து போரட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 55 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் தூதரக திறப்பு விழா ஜெருசலேமில் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் திரண்ட பாலஸ்தீன மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது எல்லையில் உள்ள கம்பி வேலியை அகற்றிக் கொண்டு முன்னேறிய போராட்டக் காரர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 55 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 116 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
SHARE:

0 comments: