Tuesday, May 15, 2018

கர்நாடகத்தில் பாஜகவைத் தனிப்பெரும் கட்சியாக்கியதற்கு நன்றி


கர்நாடகத்தில் பாஜக வை தனிப்பெரும் கட்சியாக மாற்றிய மக்களுக்கும், அயராது உழைத்து கட்சியினருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

கர்நாடக தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தீவிர ஆதரவளித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கச் செய்த கர்நாடக சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

கட்சிக்காக நேரம் பார்க்காமல் உன்னத உணர்வோடு பாடுபட்ட தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: