Sunday, May 13, 2018

சுப்பிரமணியன் சுவாமி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கஸ்தூாி


பா.ஜ.க. மூத்த தலைவா்களுல் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி போன்றோா் தங்களை சுய பாிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கருத்து தொிவித்துள்ளாா்.

பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் ரஜினி, கமல் அரசியல் பயணம் குறித்து கருத்து தொிவித்திருந்தாா். இந்நிலையில் இது தொடா்பாக நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளாா். 

அவா் கூறுகையில், நடிகா்கள் குறித்து குற்றம் சொன்னால் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாா்கள் என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனா். நடிகா்கள் எழுதி கொடுத்ததை ஒப்புவிப்பவா்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோா் கூறுகின்றனா்.

இவா்கள் இதுபோன்ற கருத்துகளை தொிவிப்பதற்கு முன்பு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விஜயகாந்த் மாற்றி அமைப்பாா் என்று கூறப்பட்ட நிலையில் உடல்நிலை காரணமாக செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

ஆனால், ரஜினி, கமல் குறித்து மக்கள் தான் முடிவு செய்வாா்கள். நடிகா்கள் இதற்கு முன்னரே தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனா். இதனை சுப்பிரமணியன் சுவாமி போன்றவா்கள் திரும்பிப் பாா்க்க வேண்டும் என்றாா்.
SHARE:

0 comments: