Thursday, May 31, 2018

ரஜினிக்கு எதிராக திரண்ட திரைத்துறை பிரபலங்கள்

SHARE:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு சமூக விரோதிகள்தான் காரணம் எனக்கூறிய ரஜினிகாந்தின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் திரைத்துறையில் இருப்பவர்களும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் போலீசார் நட்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து போராட்டங்களை நோக்கி மக்கள் சென்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

சித்தார்த் :

அடுத்து சமூக விரோதிகள்தான் தூத்துக்குடியை மாசுபடுத்திவிட்டார்கள் என்று நம்மிடமே சொல்வார்கள்.

சி.வி.குமார் (தயாரிப்பாளர்):

யாரும் மக்கள் பிரச்சனைக்கு போராடாதீங்கப்பா.... 80 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு எடுக்க கடுமையா போராடுங்கப்பா.....

இயக்குநர் சேரன்:

கலவரக்காரர்களே உள்ளே வந்திருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு சுடுவதா? இல்லை அப்பாவி மக்களை சுடுவதா? சுடப்பட்டவர்கள் யாரும் கலவரக்காரர்களாக தெரியவில்லையே...
SHARE:

0 comments: