24 Hours Tamil News Service | Daily News | Tamil News Online | |World Tamil News Website | tamil breaking news | indian tamil news | indian cinema news | tamil entertainment | tamil classifieds | tamil cinema | srilanka | tamilnadu | tamil news | tamil eelam | history | tamil aricles தனுஷ்-அனிருத் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போது? - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI 24 Hours Tamil News Service | Daily News | Tamil News Online

Breaking

Thursday, May 17, 2018

தனுஷ்-அனிருத் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போது?


DNA என்ற பெயரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. 3 படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி வரை தொடர்ந்தது.

இந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் தனுஷ் படத்திற்கு ஒருசில இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். 

இந்த நிலையில் தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அனிருத், 'எங்களைப்பொறுத்தவரை இது ஒரு ஆரோக்கியமான பிரேக் என்றும், வெவ்வேற ஆட்களோட நான் படம் பண்ணும்போதுதான் எண்ணங்கள் புதுசா இருக்கும் என்றும் கூறினார். 

ஆனால் அந்த பிரேக் ரொம்பப் பெருசாகிடுச்சு என்றும் நாங்க திரும்பவும் சேர்ந்து வேலை செய்வோம் என்றும் 2019 ஜனவரியில் நாங்கள் சேரும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு நிச்சயம் வரும் என்றும் அனிருத் கூறியுள்ளார். 

அனிருத்தின் இந்த அறிவிப்பு தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

No comments:

Post a Comment