Sunday, May 13, 2018

டோனியை தொடர்ந்து கோஹ்லியின் காலில் வீழ்ந்த ரசிகர்: நேற்றைய போட்டியில் பரபரப்ப (video)

share :

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று (சனிக்கிழமை) மோதிய போட்டியில் இரசிகர் ஒருவர் விராட் கோஹ்லியின் காலை தொட்டு வணங்கியுள்ளார்.

இரு அணிகளுக்கிடையிலான குறித்த போட்டியில் விராட் மற்றும் டி வில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

இதில் விராட் தனது அரைச் சத்தை கடந்ததும், திடீரென தடைகளை தாண்டி இரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து கோஹ்லியின் காலில் வீழ்ந்து வாங்கினார். பின்னர் விராட் கோஹ்லியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அவரை வெளியில் இழுத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதே போன்று இரசிகர்கள் காலில் வீழ்ந்து வாங்கிய சம்பவம் கடந்த போட்டிகளில் 3 முறை சென்னை அணியின் தலைவர் டோனிக்கும் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

share :

0 comments: