Monday, May 14, 2018

பிளே ஓஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்குமா பஞ்சாப்?


ஐ.பி.எல். தொடரின் 48ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) இந்தூர் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

பஞ்சாப் அணிக்கு இப்போட்டி முக்கிய போட்டியாக அமையவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அந்த அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளும். இல்லையெனில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

அதேவேளை, பெங்களூர் அணி ஏற்கனவே பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. ஆகையால் அந்த அணிக்கு இப்போட்டி முக்கிய போட்டியாக அமையாது.
SHARE:

0 comments: