Thursday, May 31, 2018

பாடசாலை மாணவியினது சீருடை மீட்பு - யாழில் பரபரப்பு


யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் பாடசாலை மாணவி ஒருவரது சீருடை மீட்கப்பட்டுள்ளதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரது சீருடை, கழுத்துப்பட்டி, காலணி ஆகியன குறித்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சீருடை மீட்பு; தவறவிடப்பட்ட பொதியாக இருக்கலாம் என அதிபர் சந்தேகம்


யாழ்ப்பாணம் - இடைக்காடு மகாவித்தியாலய மாணவி ஒருவரது சீருடை கழுத்துப்பட்டி காலணி உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று காலை மீட்கப்பட்டன.

இது குறித்து இடைக்காடு மகாவித்தியாலய அதிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதிபட அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார். அந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டார்.

இந்த நிலையில் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் மாணவி ஒருவரின் பாடசாலைச் சீருடைப் பொதியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்' என்று யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE:

0 comments: