Sunday, May 13, 2018

கிளைன்பேர்க் கனடாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

share :

கனடாவின் கிளைன்பேர்க் (Kleinburg) பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் அருகில் இருந்த மற்றைய நபரையே சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைககப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யோர்க் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டமையினால் நெடுஞ்சாலை (Highway 27) மூடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
share :

0 comments: