• Latest News

    Monday, June 11, 2018

    அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்கள் மைத்திரி - கோட்டாவுடன் சந்திப்பு


    அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

    அந்தவகையில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

    மேலும் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுடனும் 16 பேரும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

    அத்துடன் அண்மையில் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் குறித்த 16 உறுப்பினர்களின், சுதந்திரக்கட்சி கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் தாம் தொடர்ந்தும் கட்சியில் இருப்பதா? இல்லையா? என்ற முடிவினை விரைவில் எடுப்போம் என தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி முக்கிய முடிவுகளை எடுப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    2 ஆம் இணைப்பு 

    அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

    குறித்த சந்திப்பு புஞ்சிபொரளையில் உள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை )நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்கள் மைத்திரி - கோட்டாவுடன் சந்திப்பு Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top