• Latest News

    Thursday, June 14, 2018

    பரிஸில் ரயில் விபத்து 7ற்கும் அதிகமானவர்கள் படுகாயம்


    PARIS: பரிஸில் புறநகர் பயணிகளுக்கான ரயில் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

    குறித்த ரயில் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இரயில்பாதை பாழடைந்த நிலையில் காணப்பட்டதாலும் கடும் மழை பெய்தமையினால் குறித்த பாதையிலிருந்து சில முக்கிய கருவிகள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டமையினாலும் குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த ஒருவர் தமது தொலைபேசியில் படம் பிடித்ததையடுத்து விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    மேலும் காலைநேரத்தில் சென்ற முதல் ரயில் என்பதனால் குறைவான பிரயாணிகள் மட்டுமே அந்த ரயிலில் பயணித்ததையடுத்து உயிர்சேதங்கள் எதுவும் இல்லையெனவும் பெரியளவில் மக்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஏற்கனவே பிரான்ஸின் வடபகுதிகளில் உயர்ந்த அபாய எச்சரிக்கையினை அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பரிஸில் ரயில் விபத்து 7ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top