Monday, June 11, 2018

நகரசபை தலைவர் உட்பட 8 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகரசபை தவிசாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இச்சம்பவத்தை இன்று(11) விசாரணைக்கு எடுத்த நுவரெலியா நீதிமன்ற மாவட்ட நீதவான் பிரமோத ஜயசேகர சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
SHARE:

0 comments: