Monday, June 4, 2018

கிளிநொச்சி ஏ9 வீதியில் படையினரால் குவிக்கப்பட்டுள்ள குப்பையால் மக்கள் விசனம்


கிளிநொச்சி ஏ9 வீதியில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் ஏ9 பிரதான வீதியின் பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த வீதியில் காணப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள், பொலித்தீன்கள் உட்பட உக்கக் கூடிய குப்பைகள் மற்றும் உக்காத பொருட்கள் ஆங்காங்கு குவிக்கப்பட்டிருந்தன.

குறித்த குப்பைகளை கடந்த 3 நாட்களாக பிரதேச சபையினர் அகற்றாமையால் மீண்டும் அவை, பரவும் அபாயம் காணப்படுகின்றது. அதிகளவில் பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் தகரப் பேணிகள் இவ்வாறு குறித்த பகுதியில் காணப்படுகின்றன.

இவைகளால் மழை காலங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதாகவும், இவற்றை விரைந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, குறித்த கழிவுகள் அகற்றப்படுவதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்ற வருவதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE:

0 comments: