• Latest News

    Monday, June 11, 2018

    புதுச்சேரியில் போலி ATM கார்டு மூலம் நூதன கொள்ளை அம்பலம்...! பல கோடி


    புதுச்சேரி:  போலி ஏடிஎம் கார்டு மூலம் பலரது வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி சந்துரு ஜியை மும்பையில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    புதுச்சேரியில் பலரது வங்கி கணக்கிலிருந்து வெளிமாநிலத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கியது போல் பணம் எடுக்கப்பட்டது. சிபிசிஐடி, சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 

    கடந்த ஏப்ரல் மாதம், பிருந்தாவனம் பகுதியில் பிஜேஎம் என்டர்பிரைசல் என்ற கம்ப்யூட்டர் சென்டரில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் பாலாஜி, ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொறுத்தி அதன்மூலம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை கண்டறிந்து, அந்த தகவல்கள் மூலம் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து பணத்தை திருடியது அம்பலமானது.

    இந்த வழக்கில், கடலூரை சோர்ந்த கமல், சென்னையை சேர்ந்த ஷ்யாம், விவேக், சிவக்குமார், கணேஷ், சத்யா என அடுத்தடுத்து பலர் பிடிபட்டனர். ஆனால், இந்த நூதன மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு ஜி என்பவன் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தான். 

    பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரங்களை திரட்டி சிபிசிஐடி மற்றம் சைபர் கிரைம் போலீசார் சந்துரு ஜியை பிடிக்க பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சந்துரு ஜியை புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இன்று இரவே சந்துரு ஜியை புதுச்சேரி அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    சந்துரு ஜியிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே, இந்த மோசடியில் யார் யாருக்கு தொடர்புள்ளது, பலரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என்பது போன்ற பல தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதுச்சேரியில் போலி ATM கார்டு மூலம் நூதன கொள்ளை அம்பலம்...! பல கோடி Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top