• Latest News

    Saturday, June 30, 2018

    அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜூலை 6, 7ல் வடகொரியா பயணம்


    அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ (Michael R. Pompeo) ஜூலை 6, 7 தேதிகளில் வடகொரியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பைத் தொடர்ந்து அவர் வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியா மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திக்கும் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை வரும் 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணம் எனக் கூறி அதனை அமெரிக்கா ஒத்திவைத்தது. 

    இந்நிலையில் அதே 6-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வடகொரியாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜூலை 6, 7ல் வடகொரியா பயணம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top