• Latest News

    Wednesday, June 6, 2018

    சென்னை பகுதிகளில் பரவலாக மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வங்ககடலில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இலேசானது மிதமானது வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    இந்நிலையில் சென்னையில் நண்பகல்வாக்கில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டது.

    பிற்பகலில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, அசோக்நகர், தியாகராய நகர், இராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. சென்னை வேப்பேரி பகுதியில் பெய்த மழையால் சாலையில் நீர் தேங்கியது.

    கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மழை பெய்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் சென்னைப் புறநகர்ப் பகுதிகளான வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூவிருந்தவல்லி, தாம்பரம், பல்லாவரம், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.


    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சென்னை பகுதிகளில் பரவலாக மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top