• Latest News

    Friday, June 29, 2018

    ஜெர்மனியில் பயிற்சியின்போது போர்க்கப்பலில் வெடித்து சிதறிய ஏவுகணை


    ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர்க்கப்பலில் ஏவுகணை வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

    ஜெர்மனியின் கடற்படைக்கு சொந்தமான அந்த போர்க்கப்பல் ஆர்டிக் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. 

    அப்போது, ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இலக்கை நோக்கி சீறி பயணிக்காமல், கப்பலிலேயே வெடித்துச் சிதறியது.

    இந்த விபத்தில் 2 வீரர்கள் காயமுற்றனர். சம்பத்தைத் தொடர்ந்து, போர்ப்பயிற்சியில் இருந்த கப்பல்கள் வில்ஹெல்ம்ஷேவன் (Wilhelmshaven) துறைமுகத்துக்கு திரும்பின.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெர்மனியில் பயிற்சியின்போது போர்க்கப்பலில் வெடித்து சிதறிய ஏவுகணை Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top