Wednesday, June 6, 2018

காலாவில் சமூக செய்தி உள்ளது


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன்-7-ந்தேதி திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ரஜினி, நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற காலா படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது தெலுங்கு திரைப்படத்துறையுடன் தனது தொடர்புகளை நினைவுபடுத்திய ரஜினிகாந்த், அதன்பிறகு காலா படம் குறித்து பேசினார்.

காலா படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் தனது வர்த்தக முத்திரை பாணியில் இந்த படத்தை எடுத்துள்ளார். மேலும், வணிக ரீதியில் கலையுணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள காலா படத்தில் ஒரு முக்கியமான சமூக செய்தி உள்ளது.

ஆசியாவிலுள்ள மிகப்பெரிய சேரி, மும்பையிலுள்ள தாராவி பகுதியாகும். அங்கு வாழும் மக்களின் நிலையை இந்த படம் விளக்குகிறது. இவ்வாறு காலா படம் குறித்து ரஜினி பேசியுள்ளார்.
SHARE:

0 comments: