• Latest News

    Sunday, June 3, 2018

    விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய இளைஞர்: சுவிட்ஸர்லாந்தில் பரபரப்பு!


    சுவிட்ஸர்லாந்தின் Graubünden மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Graubünden மாகாணத்தில் உள்ள Chur நகரத்திலேயே 27 வயது இளைஞர் ஒருவரால் நேற்று (சனிக்கிழமை) குறித்த வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.

    தனது காரில் சென்ற குறித்த இளைஞர் வீதி ஓரத்தில் வாகனத்தை மோதவிட்டுள்ளதுடன், பின்னர் அங்கிருந்து தப்பியதாகவும் பொலிஸாருக்கு தெரிய வந்தது.

    எனினும் குறித்த விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே நாள் இரவு குறித்த இளைஞர் வீதியின் எதிர்த் திசையில் வாகனத்தை செலுத்தி வந்தவர் திடீரென்று தடுப்பு வேலி மீது மோதியுள்ளார்.

    இதில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளது. மட்டுமின்றி விபத்து நடந்த உடன் அங்கிருந்து மாயாமாகியும் உள்ளார். கண்காணிப்பில் இருந்த பொலிஸார் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவரது வாகன உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    24 மணி நேரத்தில் அவர் ஏற்படுத்திய இழப்பிற்கு அவரிடம் இருந்தே அபராதம் வசூலிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அபராதம் பல ஆயிரம் பிராங்க் என இருக்கலாம் என விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக அவரிடம் இருந்து சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளையும் பொலிஸார் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய இளைஞர்: சுவிட்ஸர்லாந்தில் பரபரப்பு! Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top