• Latest News

    Sunday, June 10, 2018

    புதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் இப்தர் நிகழ்வு

    மாவனல்லை ஸாஹிரா 2007 சாதாரண தர மற்றும் 2010 உயர் தர மாணவர்களின் ஏற்பாட்டில் முதல் முறையாக மாவனல்லை பாடசாலைகள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஐக்கிய இப்தர் நிகழ்வொன்று நேற்று (10) மாவனல்லையில் நடைபெற்றது. 

    இந் நிகழ்வில் மாவனல்லை ஸாஹிரா, பதுரியா, ஹெம்மாதகமை அல்-அஸ்ஹர், நூரானியா மற்றும் மயூரப்பாத மத்திய கல்லூரி, பாடசாலைகளின் நூற்றுக்கும் அதிகமான குறித்த வகுப்பு மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

    இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

    இந் நிகழ்வானது குறித்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்வர்கள் அடிக்கடி ஒருங்கிணைவு செய்து எமது சமூகத்துக்கு முன்னுதாரணாக இருப்பது குறிப்பிடத்தக்கது 

    இப்த்தார் நிகழ்ச்சியை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைகளில் இருந்து ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டதுடன் எதிர்கால சமூகநல அபிவிருத்தி மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி சார் வளர்ச்சி பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் எமது அடுத்த செல்திட்டம் சம்பந்தமான முடிவுகளும் எடுக்கப்பட்டது

    இந்த எமது செயல்பாட்டுக்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் இப்தர் நிகழ்வு Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top