• Latest News

    Monday, June 4, 2018

    வரவு-செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ்ப்பாணம்


    அரசாங்கத்தின் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் மொத்த மூலதனச் செலவாக 16,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் யாழ்ப்பாணத்திற்கு 80 கோடி ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

    யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

    மொத்த சதவீதத்தில் இது 0.47 வீதமே எனக் குறிப்பிட்ட தவராசா, மாவட்ட அடிப்படையில் 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

    பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் மேல் மாகாணம் உள்ளிட்டவற்றிற்கு அந்தத் தொகையை ஒதுக்கியிருந்தாலும், குறைந்த பட்சம் யாழ்ப்பாணத்திற்கு 200 கோடி ரூபாயாவது ஒதுக்கியிருக்க வேண்டுமென தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    எனினும், அண்மையில் பிரதமர் ரணிலின் யாழ்ப்பாண விஜயத்தின்போது இவ்விடயம் தொடர்பாக பிரதமரிடம் யாரும் தெரிவிக்கவில்லையென குறிப்பிட்ட தவராசா, வெறுமனே அதிகாரிகளை குறைகூறுவதில் எவ்வித பயனும் இல்லையென மேலும் தெரிவித்தார்.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரவு-செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top