• Latest News

    Thursday, June 14, 2018

    முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு நிதி நிவாரண உதவிகளை வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானதாகும்

    முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு நிதி நிவாரண உதவிகளை வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானதாகும் என ஜனாதிபதி அமைச்சரவையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

    அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை வெளிப்­ப­டுத்தும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று காலை தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்­ச­ரவை இணைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன இதனைக் குறிப்­பிட்டார். 

    இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

    இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது காண­மால்­போ­னோரின் குடும்­பங்­க­ளுக்கும், யுத்­தத்தில் உயி­ரி­ழந்­தோரின் குடும்­பங்­க­ளுக்கும், யுத்­தத்தில் உபா­தை­க­ளுக்கு உள்­ளன நபர்­க­ளுக்கும் மற்றும் முன்னாள் விடு­த­லைப்­புலி போரா­ளி­க­ளுக்கும் என அனை­வ­ருக்­கு­மான வாழ்­வா­தார நிவா­ரண தொகை வழங்­கப்­ப­டு­வது குறித்து அமைச்சர் சுவா­மி­நாதன் கடந்த அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்­றினை தாக்கல் செய்­தி­ருந்தார்.

    எனினும் இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்ட முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் என்ற பதத்தை அகற்­று­மாறும் அவர்­க­ளுக்கு நிதி நிவா­ர­ணங்­களை செய்­வது புலி­களை ஆத­ரிப்­ப­தற்கு சம­மா­னது என்ற எண்­ணப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­விடும் என ஜனா­தி­பதி தெரி­வித்து குறித்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை நிரா­க­ரித்­துள்ளார். 

    இந்த நாட்டில் புலி­களை ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது, எனினும் முன்­னைய ஆட்­சியில் முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டனர். அவர்­களை அரச நிவா­ரண நிதி­க­ளுக்குள், சாதா­ரண மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் உத­வி­களின் கீழ் கொண்­டு­வர முடி­யாது.

    யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட வடக்கு மக்­க­ளுக்கு செய்ய வேண்­டிய நிதி உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்கள் என்­பன தாம­த­மா­கி­யுள்­ளன. அவர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­களை செய்­து­கொ­டுக்க வேண்டும். அதேபோல் விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் பாதிக்­கப்­பட்ட ஏனைய பகுதி மக்­க­ளுக்கும் நிவா­ர­ணங்­களை வழங்க வேண்டும். அதற்­கான பிரத்­தி­யேக அமைச்­ச­ரவை பத்­திரம் உள்­ளது. நாம் எவ­ரையும் புறக்­க­ணிக்­க­வில்லை என்றார்.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு நிதி நிவாரண உதவிகளை வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானதாகும் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top