• Latest News

    Wednesday, June 13, 2018

    எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப்பெண்!


    எலிசபெத் மகாராணியின் விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன (Bhagya Wijayawardane) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மகாராணியின் இளம் தலைவர் விருதை (Queen’s Young Leaders Award ) இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் (Buckingham Palace in London) எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளார்.

    இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.

    சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கே “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படுகிறது.

    இலங்கை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    பாக்கியா வீட்டில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார்.

    ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப்பெண்! Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top