• Latest News

    Tuesday, June 12, 2018

    இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது


    இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார்.
    இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார்.
    அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
    இந்த விலைக்குறைப்புக்கு மீனவ சங்கங்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    நேற்று (11) மாலை மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top