• Latest News

    Thursday, June 14, 2018

    அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண்


    அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் திவ்யா சூர்யதேவாரா (Dhivya Suryadevara) பதவியேற்கவுள்ளார்.

    அமெரிக்க இந்தியரான திவ்யா, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதித்துறை துணைத் தலைவராக கடந்த 11 மாதங்களாக பணியாற்றி வருகிறார். 

    தலைமை நிதி அதிகாரியாக உள்ள சக் ஸ்டீவன்சுக்கு ((Chuck Stevens)) பதில் திவ்யா வரும் செப்டம்பர் மாதம் பதவியேற்பார் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தானியங்கி கார் துறையில் திவ்யா முக்கிய பங்காற்றியுள்ளார். 

    பல முக்கிய நிதித்துறை விவகாரங்களில் திவ்யாவின் அனுபவம் மற்றும் தலைமையில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக அமைந்ததாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைமைச் செயலதிகாரி மேரி பாரா ((Mary Barra)) தெரிவித்துள்ளார். 

    மோட்டார் நிறுவனத் துறையில் ஒரு பெண் தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்பது இது முதல் முறையாகும்.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top