Monday, June 4, 2018

பற்றியெரியும் குவாத்தமாலா எரிமலை: உயிரிழப்பு அதிகரிப்பு


குவாத்தமாலாவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

குவாத்தமாலாவின் தலைநகரிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் குறித்த எரிமலை வெடித்துள்ளது. இதனால் எங்கும் ஒரே புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு மக்கள் சுவாசிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

லாவா எரிமலை குழம்பு El Rodeo கிராமத்திற்குள் புகுந்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, தலைநகர் குவாத்தமாலா சிட்டியில் அமைந்துள்ள பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

குவாத்தமாலா எரிமலை: 7 பேர் உயிரிழப்பு – 300இற்கும் மேற்பட்டோர் காயம்

குவாத்தமாலாவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 300இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏரிமலை காரணமாக உயிரிழந்த 7 பேரில் 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவாத்தமாலா தலைநகரை அண்டிய பகுதியிலுள்ள பியுகோ (Fuego) எரிமலையே நேற்று (திங்கட்கிழமை) இரவு வெடித்துச் சிதறியுள்ளது.

மேலும் எரிமலையின் சாம்பல் காரணமாக கௌத்தமாலா சிட்டியில் அமைந்துள்ள லா அவூரோரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மோரல்ஸ் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களாக இந்த எரிமலையிலிருந்து கரும்புகை வெளியாகி வந்த நிலையில் அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியதால் அதிலிருந்து எரிமலை குழம்பு சகல திசைகளிலும் வழிந்தோடியுள்ளது.

இந்த எரிமலை குழம்பு அருகிலிருந்த கிராமங்களுக்குள் புகுந்தமையினால் அங்கிருந்த பல வீடுகள் எறிந்து சாம்பலாகியுள்ளன.

இதேவேளை எரிமலைக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
SHARE:

0 comments: