Monday, June 4, 2018

பணம் வாங்கிய அரசியல்வாதிகள் – மறைக்கப்படும் முக்கிய விவகாரம்!


மத்திய வங்கி ஊழல் விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியலில் 118 பேருக்கும் அதிகமானோர் இருக்கலாம் என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ள மத்திய வங்கி ஊழல் தொடர்பான விடயத்தில் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாத்திரமல்லாது தேர்தலில் போட்டியிட்டவர்களும் பணம் பெற்று கொண்டிருக்கலாம் என தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று தற்போது அரசியல்வாதிகள் பணம் பெற்றுக் கொண்ட விடயம் பூதாகரமாக வெளிப்பட்டுள்ள காரணத்தினால், மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்ட முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவரும் விடயம் மறக்கடிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்டர்போல் மூலமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை என நினைவுபடுத்திய கீர்த்தி தென்னகோன், திருமண வீட்டுக்கு சென்று வருவதாக பிரதமரிடம் தெரிவித்து விட்டுச்சென்ற அவர் இன்னும் திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: