• Latest News

    Saturday, June 30, 2018

    அகதிகள் சென்ற படகு விபத்து..! பரிதாபமாக 3 குழந்தைகள் உயிரிழப்பு – 100 பேர் மாயம்


    லிபியாவின் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேரைக் காணவில்லை எனவும் கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

    லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள காரபவுலி என்ற இடத்திலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்ற குறித்த படகு இயந்திரம் வெடித்து தீப்பிடித்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து மீனவர்கள் லிபியாவின் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    குறித்த படகில் 120 அகதிகள் சென்றநிலையில் 16 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்நிலையில் படகில் பயணம் செய்தவர்கள் மொராக்கோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் எனவும் அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அகதிகள் சென்ற படகு விபத்து..! பரிதாபமாக 3 குழந்தைகள் உயிரிழப்பு – 100 பேர் மாயம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top