• Latest News

    Monday, June 11, 2018

    ஹரி மற்றும் மேகன் தம்பதியின் முதல் அரச சுற்றுப்பயணம்


    இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் சீமாட்டி மேகன் மர்க்கல் தம்பதியினர் அவுஸ்ரேலியா, பிஜீ, டொங்கா மற்றும் நியூசிலாந்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

    மே மாதம் இடம்பெற்ற திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் செல்லும் முதல் அரச சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை இளவரசர் சார்ல்ஸ் மற்றும் இளவரசி டயானா அவர்களின் திருமணத்திற்கு பின்னர் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்திற்கே அவர்களின் முதல் சுற்றும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் அதனைத் தொடர்ந்து இந்த பிரதேசங்களுக்கு செல்வதன் மூலம் தனது பெற்றோரின் பாதையை அவர் பின்பற்றுவது தெரியவருகின்றது.

    ஒக்டோபர் மாதம் சிட்னியில் நடைபெறவுள்ள Invictus Games தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாகவும் ஹரியின் இந்த சுற்றுப்பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை 1983 ஆம் ஆண்டு சார்ல்ஸ் டயானா தம்பதயினர் மேற்கொண்ட அவர்களின் முதல் சுற்றுப்பயணத்தின் போது 23701 மைல்கள் பயணித்து 43 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தனர்.

    மேலும் வில்லியமஸ் கேட் தம்பதியினர் 2014 ஆம் தமது சுற்றுப்பயணத்தை 18 நாட்கள் மேற்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹரி மற்றும் மேகன் தம்பதியின் முதல் அரச சுற்றுப்பயணம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top