• Latest News

    Monday, June 4, 2018

    ஜப்பானில் வசிக்கும் வடகொரியாவின் முதல் குடிமகன்


    வடகொரியாவின் முதல் குடிமகனான பேக் சோங்வோன் கடந்த 80 வருடங்களுக்கு முன்னர் ஜப்பானில் குடியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

    95 வயதான அவர் சிறுவயதிலேயே தாய்நாட்டினை விட்டு வெளியேறியதால் தமது வாழ்நாளில் பெரும்பதியை வருத்தத்துடன் கழித்துள்ளதாகவும் வடகொரிய – தென்கொரிய பேச்சுவார்த்தை இடம்பெற்றத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர் இருகொரியப் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 12 இல் கிம் ஜொங் உன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே இடம்பெறவுள்ள அமெரிக்க – வடகொரிய பேச்சுவார்த்தை கொரியத் தீபகற்ப அமைதிக்கு அடுத்த அதிமுக்கியமான நகர்வு எனத் தெரிவித்துள்ளார்.

    ஜப்பானில் வசிக்கும் வடகொரிய குடிமக்கள் பலர் தமது பிரயாணங்களை இலகுவாக்க வேறுநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுள்ள போதும் வடகொரிய கடவுசீட்டினையே இன்னும் பயன்படுத்தி வருகின்றமை தமது தாய்நாட்டின் மீதான அன்பினை வெளிப்படுத்தியது.

    1910-1945 ஜப்பானிய காலனித்துவப்படுத்தலில் தற்போது ஜப்பானின் கீழ் இருக்கின்ற அன்றைய வடகொரியாவின் வட பியங்யோங் இல் பிறந்த இவர் ஜப்பானில் வசிக்கும் வடகொரிய குடியுரிமை பெற்றவர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜப்பானில் வசிக்கும் வடகொரியாவின் முதல் குடிமகன் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top