• Latest News

    Wednesday, June 6, 2018

    அனுமதியின்றி தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்


    பிரான்ஸில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான், சோமாலியா, எரித்திரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பரீஸ் அருகே கூடாரம் அமைத்திருந்து தங்கியிருந்தனர்.

    இவர்களால் மார்ட்டின் கால்வாய் நீர் அசுத்தமாவதாகவும், அனுமதி பெறாமல் தங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து கால்வாய் கரையில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு பொலிஸார் அவர்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தனர்.

    இந்த உத்தரவை சிலர் மறுத்ததை அடுத்து கூடாரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் பொலிஸார் அகற்றினர். இதனால் அங்கிருந்த அகதிகள் தற்போது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனுமதியின்றி தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top