Monday, June 11, 2018

காணாமற்போன தமிழர் ரொறன்ரோவில் கண்டுபிடிப்பு

SHARE:

மார்க்கம் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ரொறன்ரோவில் வைத்து நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான நபர் காணாமல் போனதை அடுத்து, அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதன் போது விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் நெடுஞ்சாலை 401 பகுதியில் அவரது வாகனம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டது.

தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார் ரொறன்ரோவில் வைத்து குறித்த நபரை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
SHARE:

0 comments: